எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

இயற்கை பேரிடர்களால் கார் சேதமடைந்தால் காப்பீட்டு தொகையை பெற முடியுமா? வாருங்கள் இதற்கான விடையினை இனி இந்த செய்தியில் விவாதிப்போம்.

எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

காப்பீடு திட்டம் என்பது திட்டத்தை எதிர்பார்ப்பவருக்கும், ஓர் காப்பீடு நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். காப்பீடு திட்டத்தை பெற விரும்புவோர் தனக்கு பிடித்த காப்பீடு நிறுவனத்தில் ஓர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி திட்டத்தை பெற்று காப்பீடுத்திட்டத்தாரர் ஆக வேண்டும்.

எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

வாடிக்கையாளரின் அந்த விருப்ப மனுவை ஆராய்ந்து சில விதிமுறை & நிபந்தனைகளுடன் காப்பீடு நிறுவனம் உத்தரவாதத்தை அளிக்கும். இந்த உத்தரவாதம் எதற்கு வேண்டுமானாலும் இருக்கலாம், உதாரணத்திற்கு முழு ஆயுள் காப்பீடு திட்டம், மோட்டார் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் என சொல்லி கொண்டே போகலாம். இவை ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உள்ளன. இதில் மோட்டார் காப்பீடு திட்டத்தில்தான் கார் காப்பீடு அடங்குகிறது.

எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

சரி விஷயத்திற்கு வருவோம். கார் காப்பீடு திட்டத்தில் இயற்கை பேரிடருக்கு என்று தனி பிரிவு எல்லாம் கிடையாது. விரிவான கார் காப்பீடு திட்டத்தில் தன்னால் ஏற்படும் சேத பிரிவில்தான் இயற்கை பேரிடரால் ஏற்படும் சேதங்களும் அடங்குகின்றன. ஆதலால் நீங்கள் விரிவான கார் காப்பீடு திட்டத்தை பெற வேண்டும். அப்போதுதான் இயற்கை பேரிடரால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீட்டு தொகையை பெற முடியும்.

எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

அதாவது, மொத்தம் 5 விதமான கார் காப்பீடு திட்டங்கள் உள்ளன. 3ஆம் தரப்பினருக்கு ஏற்படும் சேதங்களுக்கான காப்பீடு, பூஜ்ஜிய தேய்மான காப்பீடு, தனிப்பட்ட விபத்திற்கான காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன. இதில் அடங்கக்கூடிய மற்றொரு திட்டமான விரிவான கார் காப்பீடு திட்டத்திலேயே இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களுக்கான காப்பீடு உட்படுகிறது.

எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

பொதுவாக விரிவான கார் காப்பீடு திட்டமானது ஒரு காருக்கு காப்பீடு நிறுவனம் வழங்கும் அதிகப்பட்ச காப்பீடு ஆகும். இதனால்தான் இதில் இயற்கை பேரிடர் கூட அடங்குகிறது. இதை தவிர்த்து மற்ற 4 கார் காப்பீடு திட்டங்களில் எதை பெற்றாலும் இயற்கை பேரிடரால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடை பெற இயலாது என்பதை இந்த இடத்தில் சொல்லி கொள்கிறோம். விரிவான கார் காப்பீடு திட்டத்தை பெற்றால் மற்ற 4 திட்டங்களையும் பெற்றுவிட்டது போலதான்.

எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

விரிவான கார் காப்பீடு திட்டம் குறித்த முக்கிய விபரங்கள்

 • இது அடிப்படை காப்பீடு திட்டங்களை காட்டிலும் சற்று விலைமிக்கது, ஆனால் ஏற்கனவே கூறியதுபோல் இதன் மூலம் அனைத்து விதமான கார் காப்பீடு திட்டங்களையும் பெறலாம்.
 • எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!
  • இந்த திட்டத்திற்கு காப்பீடு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான கட்டணத்தை வசூலிக்கின்றன. ஆனால் 3ஆம் தரப்பினருக்கான காப்பீடு திட்டத்திற்கான கட்டணம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளது.
  • இந்த திட்டத்துடன் கூடுதலாக வேறு ஏதேனும் கார் காப்பீடு திட்டங்களை சேர்த்து கொள்ள விரும்பினால் அதற்கும் வாய்ப்புள்ளது.
  • எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!
   • பல காப்பீட்டு நிறுவனங்களின் இணைய பக்கத்தில் இருந்து விரிவான கார் காப்பீடு திட்டத்தை வெறும் 5 நிமிடங்களில் பெற்றுவிடலாம்.
   • இந்த திட்டத்தின் மூலம் இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி, மனிதர்களால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் கார் திருட்டிற்கான காப்பீட்டை கூட பெற முடியும்.
   • எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

    சரிங்க விரிவான கார் காப்பீடு திட்டத்தை பெற்றாச்சு... இப்போது என் கார் இயற்கை பேரிடரால் சேதமடைந்துவிட்டது என்றால் எவ்வாறு காப்பீட்டு தொகையை பெறுவது என்று கேட்டால், இயற்கை பேரிடர் கடந்துச்சென்று நிலைமை சீரானவுடன் உங்களது காரை அனைத்து பக்கங்களில் இருந்தும் படம் பிடித்து கொள்ளுங்கள். குறிப்பாக, சேதமடைந்த பகுதிகளை நெருக்கமாக காட்சிப்பதிவும் செய்து கொள்ளுங்கள்.

    எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

    அதன்பின் உங்களது காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, காப்பீட்டு தொகையை பெறுவதற்கான கோரிக்கையை முன்வையுங்கள். அவர்கள் இ-மெயில் வழியாக ஒரு விண்ணப்பத்தை அளித்து அதனை முழுவதுமாக பூர்த்திச்செய்து தர சொல்வார்கள். அந்த விண்ணப்பத்தில் உங்களது காப்பீடு திட்டம், விபத்து உள்ளிட்டவை குறித்த வினாக்கள் இருக்கும். அத்துடன் அவர்கள் கேட்கும் ஆவணங்களின் படங்களையும் அனுப்ப வேண்டியிருக்கும்.

    எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

    உங்களது விண்ணப்பத்தை சரிப்பார்த்த பின்பு காப்பீடு நிறுவனத்தில் இருந்து காரை நேரில் பார்வையிட மதிப்பீட்டாளர் ஒருவர் அனுப்பி வைக்கப்படுவார். அவர் உங்களிடம் சில பல கேள்விகளை கேட்பார். அவரிடம் ஒளிவு மறைவின்றி நடந்தது அனைத்தையும் தெளிவாக கூறிவிடுங்கள். உங்களது பதில்கள் அனைத்தையும் ஏற்றக்கொண்ட பிறகு அவர் ஒரு மெக்கானிக் கேரேஜை பரிசீலிப்பார்.

    எல்லாராலும் முடியாது!! இயற்கை பேரிடரால் சேதமடைந்த காருக்கு காப்பீட்டு தொகையை பெற இதுதான் வழி!

    ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் பழுதான காரை கேரேஜிற்கு கொண்டு செல்வதற்கும் உதவுகின்றன. அங்கே சென்றவுடன் பழுதிற்கான தொகையை ஆன்லைன் வழியாகவோ அல்லது நேரடியாக மெக்கானிக் கேரேஜிற்கோ காப்பீடு நிறுவனம் வழங்கிவிடும். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள், காப்பீடு தொகையை பெற தாமதமாகுமென நீங்களாக ஒரு மெக்கானிக்கை தேடி சென்றுவிடாதீர்கள். பின்னர் சிக்கல்தான்...

Most Read Articles

English summary
Does vehicle insurance covers damage due to natural calamity know here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X