இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகங்களில் ஒன்றான ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) காரின் ரிவியூ தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்று என மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் ஸ்கார்பியோ (Scorpio)-வை மிக தாரளமாகக் கூறலாம். இந்தியாவில் இரண்டு தசாப்தங்களைக் கடந்து இக்கார் விற்பனையில் இருந்து வருகின்றது. ஒருவராலும் வெறுத்து ஒதுக்கு முடியாத இடத்தில் இருக்கின்ற காரணத்தினாலேயே ஸ்கார்பியோவால் பல ஆண்டுகளாகியும் இந்தியாவில் வெற்றி நடைப்போட முடிந்துள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

சொல்லப்போனால் ஏற்கனவே சொகுசு காரை பயன்படுத்துபவர்களைக்கூட, "இந்த காரை (ஸ்கார்பியோ) புதுசா வாங்கிட்டா என்ன" என நினைக்குமளவிற்கு அதிக சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக ஸ்கார்பியோ இருக்கின்றது. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் 2002ம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. அப்போதில் இருந்து இப்போது வரை இக்கார் வரவேற்பைக் குவித்த வண்ணமே இருக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

போட்டியாளர்கள் வருகை பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்ற போதிலும் இந்த வாகனத்திற்கென தனி ரசிகப் பட்டாளம் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே அவ்வப்போது புதுப்பித்தல்களை இந்த கார் மாடலில் மஹிந்திரா நிறுவனம் வழங்கிய வண்ணம் இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஸ்கார்பியோ என் (Scorpio-N) எனும் வெர்ஷனை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இந்த காருக்கு புக்கிங் தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை குவித்தது. இந்தளவிற்கு பெரும் வரவேற்பை மஹிந்திரா ஸ்கார்பியோ என் இந்தியாவில் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. என்னதான் புதியவருக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்பட்டாலும் மஹிந்திரா நிறுவனம் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வரும் ஸ்கார்பியோவை ஒதுக்கிவிட மணமில்லை.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

ஆகையால், அந்த காரை தொடர்ச்சியாக வர்த்தகத்தில் வைத்திருக்க முடிவு செய்தது. ஆனால், பழைய பெயரில் இல்லாமல், ஸ்கார்பியோ கிளாசிக் (Scorpio Classic) எனும் பெயரில் அதை விற்பனைச் செய்ய முடிவு செய்தது. இது பழைய ஸ்கார்பியோவைப் போலவே தோற்றமளித்தாலும் பற்பல புதிய அம்சங்களைத் தாங்கியதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இந்த புதிய மாற்றங்களுடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடலையே அண்மையில் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு ஓர் அலசு அலசியது. இதன் வாயிலாக கிடைத்திருக்கும் தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, புதிய மஹிந்திரா கிளாசிக் காரின் ரிவியூ தகவலையே இந்த பதிவில் வழங்கி உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

டிசைன் மற்றும் ஸ்டைல்:

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோவின் தோற்றத்தில் மாற்றம் மேற்கொள்ள விரும்பவில்லை. ஆகையால், பழைய ஸ்டைல் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. அதேவேலையில், அதனை மெருகேற்றும் பணிகளை மேற்கொள்ள நிறுவனம் தவறவில்லை. இதன் விளைவாக சதுரமான பெட்டி போன்ற அக்காரின் அமைப்பு மேலும் கவர்ச்சியானதாக மாறியுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இதன் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் கட்டுமஸ்தான லைன்கள் கொண்ட பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து, எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, மேட் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் காரின் பக்கவாட்டு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஸ்கார்பியோவிற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

குறிப்பாக, ஆறு லைன்கள் அமைப்பு க்ரில்லும், அதில் இடம் பெற்றிருக்கும் மஹிந்திராவின் புதிய லோகோவும் காரை வேற லெவல் ஸ்டைலான தோற்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. லோகோ மற்றும் அந்த ஆறு லைன்களையும் பிரத்யேக சில்வர் நிறத்தால் மஹிந்திரா அலங்கரித்திருக்கின்றது. இதேபோல், இதன் பம்பர் இருக்கும் இடத்தில் பெரிய நீளமான சில்வர் பிளேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இவை அனைத்தும் காரின் முகப்ப பகுதியை கவர்ச்சியானது, அழகானது, முரட்டு தனமானது என அனைத்திற்கும் அழைத்துச் சென்றிருக்கின்றது. அதிலும், பானெட் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏர் வெண்ட் (எஞ்ஜினை குளிர்விக்க இது வழங்கப்பட்டுள்ளது) ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓர் முரடனாகவே மாற்றிவிட்டது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

வீல் ஆர்ச்சுகள் மற்றும் குவார்டர் பேனல்களும் இக்காரின் கவர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்ளன. குறிப்பாக காரின் பக்கவாட்டு பகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் இவை உள்ளது. இதன் அடிப்படையிலேயே இரட்ட நிறங்கள் வீலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், அழகு சேர்க்கக் கூடிய ஓர் அம்சமாகவே பக்கவாட்டில் வழங்கப்பட்டிருக்கம் இன்டிகேட்டர்கள் காட்சியளிக்கின்றன.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

முன் வீலின் பின்பக்க மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இந்த லைட் தனித்துவமாக சில்வர் நிற ஹைலைட்டர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, எம்ஹாக் எனும் பேட்ஜ் அங்கு ஒட்டப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் பின் பகுதியும் மிக அழகானதாகக் காட்சியளிக்கின்றது. நீளமான ஸ்டாப் லைட்டு, அதற்கு கீழாக அடுக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கும் இன்டிகேட்டர்களே காரின் பின் பக்க அழகிற்கு காரணமாக இருக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

2006 ஃபேஸ்லிஃப்ட் மாடலிலேயே முதல் முறையாக இந்த ஸ்டைலில் லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பின்னர் 2014 ஆம் ஆண்டில் வெளியாகி ஸ்கார்பியோவில் இந்த ஸ்டைல் அகற்றப்பட்டு, தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுடன், மஹிந்திரா பேட்ஜ் மற்றும் ஸ்கார்பியோ பேட்ஜும் பின் பகுதிக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதுதவிர, பின்பக்கத்தில் பயணிகள் சுலபமாக ஏறி, இறங்குவதற்காக பெரிய படிகட்டு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய ஸ்பாய்லரும் பின் பகுதியில் தக்க வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

காரின் கேபின் பகுதி:

மிகவும் முரட்டுத் தனமான வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்பவே காரின் உட்பக்கத்தையும் மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. அதேவேலையில், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவும் இது காட்சியளிக்கின்றது. பெரியளவில் சொகுசு வசதிகளையும், மிக நீளமான சிறப்பம்சங்களையும் உட்பக்கம் கொண்டிருக்கவில்லை என்றாலும் கார் பிரியர்களின் கவனத்தை இந்த கார் ஈர்க்க தவறவில்லை.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இதற்கு மிக சிறந்த உதாரணமாக பீஜ் நிற இருக்கைகள் இருக்கின்றன. காரின் உட்பக்கத்தில் நுழைந்த உடன் பயணிகளின் கவனத்தை ஈர்க்கக் கூடிய இந்த நிறம் கொண்ட இருக்கைகள் இருக்கின்றன. இதில் மிக நீண்ட தூர பயணத்தைகூட எந்தவொரு அசௌகரியமும் இன்றி மேற்கொள்ள முடியும். அந்தளவிற்கு சொகுசானதாகவும், மிருதுவானதாகவும் இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

அதேவேலையில் இருக்கையின் மீது பயன்படுத்தப்பட்டிருக்கும் துணி சற்று ரஃபானதாக காட்சியளிக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக காருக்குள் கவனத்தை ஈர்க்கக் கூடிய அம்சமாக ஸ்டியரிங் வீல் இருக்கின்றது. எக்ஸ்யூவி 500 இல் பயன்படுத்தப்படும் அதே ஸ்டியரிங் வீலையே இந்த காரிலும் மஹிந்திரா பயன்படுத்தியிருக்கின்றது. பன்முக கன்ட்ரோல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

க்ரூஸ் கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல்கள் என பன்முக கன்ட்ரோல்கள் ஸ்டியரிங் வீலில் வழங்கப்பட்டுள்ளன. இந்த வீலுக்கு பின்பக்கத்திலேயே அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் நீல நிற பேக்லைட்டுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. பழைய ஸ்கார்பியோவிலும் இதே அம்சமே பயன்படுத்தப்பட்டிருக்கும். இதைத்தொடர்ந்து, ஸ்கார்பியோ கிளாசிக்கில் சிறிய எம்ஐடி திரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இது சிறியதாக இருந்தாலும் பன்முக தகவல்களை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக, கியர் பொசிஷன், ஓடோமீட்டர், டூ ட்ரிப் மீட்டர்கள், டெம்ப்ரேச்சர் கேஜ் மற்றும் ஃப்யூவல் அளவை இது காண்பிக்கும். இந்த எம்ஐடி திரையின் வலது மற்றும் இடது பகுதிகளிலேயே பெரிய அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் டோக்கோ மீட்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இதன் டேஷ்போர்டு மிகவும் அடக்கமானதாக உள்ளது. இதிலேயே 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடுதிரை வசதிக் கொண்டது. இத்துடன், ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியும் இந்த திரையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இத்திரையை பயன்படுத்தும்போது ஆன்ட்ராய்டு வசதிக் கொண்ட டேபை பயன்படுத்தும் அனுபவத்தை வழங்கும்.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

நாங்கள் இயக்கி பார்த்தது எஸ்11 வேரியண்ட் ஆகும். இதில், ஆறு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் லேசாக சலசலப்பை ஏற்படுத்தும் சத்தம் வெளியாவதை நாங்கள் உணர்ந்தோம். இருப்பினும், அது நம்முடைய என்ஜாய்மென்டிற்கு எந்தவிதத்திலும் தடையாக மாறாது. இந்த திரைக்கு மேற்பகுதியில் இரு ஏசி வெண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உட்பக்கத்தின் இரு மூலைகளிலும்கூட ஏசி வெண்டுகள் காரில் உள்ளவர்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

ஆனால், இந்த டேஷ்போர்டில் பெரியளவில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, ஃபாக்ஸ் உட் ரக பேனல் மட்டுமே இந்த காரின் டேஷ்போர்டு பிரீமியம் லுக் வழங்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், காரின் சிலர் அந்தளவு கவரக்கூடியதாக இல்லை என சிலரால் கூறப்படுகின்றது. குறிப்பாக, அதிகம் பிரீமியம் அம்சங்களை எதிர்பார்ப்போரின் எண்ணம் இதுவாக இருக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

கம்ஃபோர்ட் மற்றும் பூட் ஸ்பேஸ்:

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் டிரைவருடன் சேர்த்து 8 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். டிரைவருடன் ஒருவரும், அவரின் பின்னிருக்கையில் மூவரும், இதற்கு பின்னால் எதிரெதிர் திசையில் பார்த்தவாறு அமைக்கப்பட்டிருக்கும் இரு வரிசை இருக்கையில் நான்கு பேரும் அமர்ந்து பயணிக்க முடியும். சற்று குண்டான உருவம் கொண்டவர்கள் என்றால் பின்னால் இருவர் மட்டும் அமர்ந்து பயணித்தால் மட்டுமே சொகுசான ரைடிங் அனுபவத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

அதேவேலையில், இந்த இருக்கைகளையும் மடித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்ல ஏதுவாக இந்த அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க, நடு வரிசை இருக்கைகளையும் மடித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு செய்வதன் வாயிலாக 460 லிட்டர் பூட் ஸ்பேஸை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

ஸ்கார்பியோ கிளாசிக்கில் வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகள் அகலமானதாகவும், வசதியானதாகவும் இருக்கின்றன. ஒரு தட்டையான பெஞ்சில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை இந்த இருக்கைகள் வழங்கும். இதுதவிர, அதி லெக் ரூம், முழங்கால் அறை மற்றும் ஹெட்ரூம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் ஸ்கார்பியோ கிளாசிக்கில் குறையைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

எஞ்ஜின், எஞ்ஜினின் திறன் மற்றும் டிரைவிங் இம்பிரசன்:

மஹிந்திரா நிறுவனம் அதன் முதல் தலைமுறை ஸ்கார்பியோவில் 2.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜினையேப் பயன்படுத்தியது. இதுவே இந்த எஸ்யூவி காரை அந்த காலகட்டத்தில் அதிக பவர்ஃபுல்லான எஸ்யூவி என்ற பெயர் பெற காரணமாக இருந்தது. பல ஆண்டுகளால் இந்த மோட்டாரால் ஸ்கார்பியோ அலங்கரிக்கப்பட்டு வந்தநிலையில் நிறுவனம் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மோட்டாரால் அழகுப்படுத்தியது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

தற்போது இந்த மோட்டாரும் வெளியேற்றப்பட்டு, புதிதாக 2.2 லிட்டர் எம்ஹாவ்க் மோட்டார் பயன்படுத்தப்பட்டது. இதில் தற்போது பல்வேறு மாற்றங்களை மஹிந்திரா மேற்கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக முந்தையவற்றைக் காட்டிலும் மிகவும் எடைக் குறைவான யூனிட்டாக புதிய தலைமுறை 2.2 லிட்டர் எம்ஹாவ்க் மோட்டார் மாறியிருக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இது 3,750 ஆர்பிஎம்மில் 130 எச்பி பவரையும், 1600 மற்றும் 2800 ஆர்பிஎம்மில் 300 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது முந்தைய மோட்டாரைக் காட்டிலும் சற்று குறைவான திறன் வெளிப்பாடும். இருப்பினும், இது மேட்டர் ஸ்கார்பியோவின் வரவேற்பு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதன் எடை 55 கிலோ வரையில் குறைந்துள்ளது. ஆகையால், இதன் முடுக்கம் திறன் மிகுந்த உற்சாகமானதாக வெளிப்படுகின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் இந்த கார் வெறும் 13 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேக திறனுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட 2.2 லிட்டர் எம்ஹாவ்க் மோட்டாரே காரணம். இக்காரில் வழங்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்மிஷன் மிகவும் மென்மையான மாற்ற உணர்வை வழங்கும் வகையில் உள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

6 ஸ்பீடு கியர்பாக்ஸே இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான பற்கள் மோட்டாரில் இடம் பெற்றிருப்பதால் ிதன் சற்று குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில், 6 வது கியரில் 2,000 ஆர்பிஎம்மிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட இந்த எஞ்ஜின் பெரும் உதவியாக இருக்கின்றது. கியர் லிவர் கேபிள் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

ஆகையால், கியர் லிவர் லேசான தள்ளாடுதல் உணர்வைக் கூட வழங்காது. சுலபமாக ஷிஃப்டாகும். மேலும், அதிர்வும் மிக மிக குறைவு. இதைத் தொடர்ந்து மிக சிறப்பான இயக்க அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் விதமாக இக்காரில் ஸ்கார்பியோ என்-இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே சஸ்பென்ஷன் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. அடாப்டீவ் டேம்பர்கள் சஸ்பென்ஷனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இந்த சஸ்பென்ஷன் அதிக பள்ளம்-மேடு நிறைந்த சாலைகளைகூட நல்ல சாலைகளை மாற்றுவிடுகின்றன. அதாவது, கரடு-முரடான சாலையில் பயணிக்கும் அனுபவத்தை தவிர்க்க இந்த சஸ்பென்ஷன் பெரும் உதவியாக இருக்கும். ஆனால், குறைவான வேகத்தில் செல்லும்போது லேசான அசௌகரியமான பயண அனுபவத்தை இந்த கார் வழங்குகின்றது. இது உங்களை முகம் சுழிக்க செய்யலாம்.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

ஸ்கார்பியோ போன்ற முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட கார் மாடல்களில் வாகன காதலர்கள் எதிர்பார்க்கக் கூடிய மிக முக்கியமான வசதியே நான்கு வீல் இயக்கம் சிஸ்டம். ஆனால், இந்த அம்சத்தை ஒரு விருப்பத் தேர்வாக மஹிந்திரா வழங்கவில்லை. இது பெருத்த குறையாக வாகன பிரியர்கள் மத்தியில் காட்சியளிக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

இதுபோன்ற சில குறைகள் இந்த காரில் இடம் பெற்றிருந்தாலும் நாங்கள் ஓட்டி பார்த்ததில் ஸ்கார்பியோ கிளாசிக் எங்களின் மனம் கவர்ந்த வாகனமாகவே இருந்தது. குறிப்பாக, சிறந்த சவாரி அனுபவம், கையாளுதலை வழங்குவதில் இந்த கார் மிக சிறப்பாக செயல்பட்டது. இது என்ன மாதிரியான நிலப்பரப்பையும் சமாளிக்கும் திறனில் உருவாக்கப்பட்டிருப்பதும் எங்களைக் கவரக் கூடியதாக இருக்கின்றது.

இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

பாதுகாப்பு அம்சங்கள்:

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் பன்முக பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றிருக்கின்றது. இதோ அவற்றின் பட்டியல்:

  • டூயல் ஏர்பேக்
  • பேனிக் பிரேக் இன்டிகேசன்
  • கொல்லாப்சிபிள் ஸ்டியரிங்
  • எஞ்ஜின் இம்மொபிலைசர்
  • ஆன்டி தெஃப்ட் வார்னிங்
  • சீட் பெல்ட் ரிமைண்டர்
  • ஸ்பீடு அலர்ட்
  • ஆட்டோ டூர் லாக்
  • இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
  • உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த காரை குறை சொல்லவே மனசு வரலிங்க... மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கை ஓட்டி பார்த்தபோது எங்களுக்கு கிடைத்த அனுபவம்!

    சிறப்பம்சங்களின் பட்டியல்:

    • 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
    • 6 ஏர்பேக்குகள்
    • ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல்
    • 2 வரிசை இருக்கைகளுக்கும் ஏசி வெண்ட்
    • ஹைட்ராலிக் பானெட் ஸ்ட்ரட்ஸ்
    • ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள்
    • உள்ளிட்டவை ஸ்கார்பியோ கிளாசிக்கில் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Drivespark mahindra scorpio classic review
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X