இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது என்பது பற்றிய புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்த முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இது குறித்த விரிவான தகவலைக் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதத்தில் மிக அமோகமான விற்பனை வளர்ச்சியை அவை பெற்றிருக்கின்றன. குறிப்பாக, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது கடந்த மே மாத வாகன விற்பனை புள்ளி விபரங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

2022 மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 15,94,286 யூனிட்டுகள் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த பிரமாண்ட எண்ணிக்கையில் 65,835 யூனிட்டுகள் மின்சாரங்கள் ஆகும். இந்தளவே இந்தியாவில் சென்ற மே மாதத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

இந்த எண்ணிக்கை அடுத்து வரும் மாதங்களில் லட்சமாக மாறும் என யூகிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இதைவிட குறைவான எண்ணிக்கையிலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது அவை 65,835 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

வாகனங்களின் ரகங்கள் வாரியாக மின்சார வாகனங்களின் விற்பனை நிலவரம்:

12,22,994 யூனிட்டு இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இவற்றில் 39,490 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் (பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்) ஆகும். ஒட்டுமொத்த விற்பனையில் இது 3.2 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

இதேபோல் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மிக மிக சூப்பரான வரவேற்பை இந்தியாவில் பெற்றிருக்கின்றது. மிக மிக சூப்பர் என குறிப்பிடுவதற்கு ஓர் காரணம் இருக்கின்றது. ஏனென்றால், 2022 மே மாதத்தின் மூன்று சக்கர வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் 3-வீலர்கள் 56.2 சதவீதம் பங்கை பிடித்திருக்கின்றன.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

அதாவது, ஒட்டுமொத்தமாக 41,508 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 23,321 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் 3 சக்கர வாகனங்கள் ஆகும். இது மிக மிக சூப்பரான விற்பனை எண்ணிக்கை ஆகும். இதன் வாயிலாக இந்தியாவில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு டிமாண்ட் பன் மடங்கு அதிகரித்துக் காணப்படுவது மிக தெளிவாக தெரிகின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

இதேபோல் பயணிகள் வாகன பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் கணிசமான நல்ல டிமாண்ட் கிடைத்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக சென்ற 2022 மே மாதத்தில் 2,63,152 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இவற்றில் 2,838 யூனிட்டுகள் பேட்டரியால் இயங்கக் கூடியவை ஆகும். இது ஒட்டுமொத்த விற்பனையில் 1.1 சதவீத பங்காகும். இது சற்று குறைவுதான், இருப்பினும் இது சிறந்த வளர்ச்சிக்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

கமர்சியல் வாகன பிரிவில் சற்று குறைவான அளவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதன் விளைவாக இந்த பிரிவில் மின்சார வாகனங்களின் விற்பனை இப்போதும் முதல் கட்டத்திலேயே உள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் 66,632 யூனிட்டுகள் வர்த்தக வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 186 யூனிட்டுகள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். இது, ஒட்டுமொத்த விற்பனையில் 0.3 சதவீத பங்கு மட்டுமே ஆகும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம் தற்போது நெக்ஸான் இவி, நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் டிகோர் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் நெக்ஸான் இவி-க்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நிலவரம் எப்படி இருக்கின்றது?.. இது உங்களை ஆச்சரியமடைய செய்யலாம்!

நடப்பாண்டு மே மாதத்தில் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3,454 பயணிகள் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில் மிக அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் இவியே விற்பனையாகியிருக்கின்றன. இதேபோல், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் ஒகினவா நிறுவனம் நாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனமாக மாறியுள்ளது. முன்னதாக இந்த முதல் இடத்தை ஓலா நிறுவனம் பிடித்திருந்த நிலையில் அதனை ஒகினவா நிறுவனம் சென்ற மே மாதத்தில் தட்டி பறித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Electric vehicles may 2022 sales report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X