ஒரே நேரத்தில் 17 பேர் போகலாம்... ஒவ்வொருத்தருக்கும் தனி ஏசி... இந்தியால இப்படி ஒரு வண்டியா!

இந்தியாவில் ஃபோர்ஸ் மோட்டார் நிறுவனம் 17 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய அர்பேனியா என்ற வேனை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோர்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் T1N என்ற கோட் பெயரை கொண்ட வேனை அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ1000 கோடி செலவில் புதிதாக மோனோக்யூ பேனல் வேன் பிளாட்ஃபார்மை கட்டமைத்தது.

ஒரே நேரத்தில் 17 பேர் போகலாம்... ஒவ்வொருத்தருக்கும் தனி ஏசி... இந்தியால இப்படி ஒரு வண்டியா!

2020ல் கொரோனா வந்தததால் இந்தப்பணிகள் தொய்வடைந்த நிலையில் தற்போது முதற்கட்டமாக இந்த பிளாட்ஃபார்மில் ஃபோர்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை அர்பேனியா வேனை வடிவமைத்துள்ளது. இது ஷேர்டு மொபிலிட்டி ஃபிளாட்பார்மாகும். தற்போது முழு வீச்சில் இந்த வேனை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த வேன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்ஸ் நிறுவனம் இந்த பிளாட்ஃபார்மை சர்வதேச தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளது. இதில் தயாராகும் வேன்கள் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா, ஆசிய நாடுகள், தென்அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 17 பேர் போகலாம்... ஒவ்வொருத்தருக்கும் தனி ஏசி... இந்தியால இப்படி ஒரு வண்டியா!

இந்த வேனில் முக்கிய அம்சங்களாக இதன் காக்பிட் டிரைவருக்கு வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக இதன் ஸ்டியரிங் பகுதியும் காரின் ஸ்டியரிங்போல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் மற்றும் ஆங்கிளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இதில் இருக்கிறது.

இந்த அர்பேனியா வேனில் டிரைவர் மற்றும் முன்பக்க பயிணிக்கான ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 4 வீல்களிலும் வென்டிலேட் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக வேனின் பாதுகாப்பிற்காக இஎஸ்பி, ஏபிஎஸ், இபிடி மற்றும் இடிடிசி ஆகிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் முகப்பு பக்கம் டே ரன்னிங் டிஆர்எல்கள், புரோஜெக்டர் ஹெட்லைட்கள், சிக்னெச்சர் டெயில் லைட்கள், இருக்கிறது.

ஒரே நேரத்தில் 17 பேர் போகலாம்... ஒவ்வொருத்தருக்கும் தனி ஏசி... இந்தியால இப்படி ஒரு வண்டியா!

மேலும் பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியா ஏசி வென்ட்கள், ரிக்லைனிங் சீட்கள், பானரோமிக் விண்டோ, ரீடிங் லேம்ப், மற்றும் யூஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அர்பேனியா வேன் தயாரித்த இந்த பிளாட்ஃபார்ம் 2 பாக்ஸ் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இன்ஜினை முற்றிலும் பயணிகள் இருக்கும் கம்பார்ட்மெண்ட் உடன் தொடர்பு இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இருக்கும் பகுதியில் அதிர்வுகள் சத்தம் எல்லாம் குறைவாக இருக்கும்.

மேலும் இந்த வேனின் முன்பக்க சஸ்பென்சனை பொருத்தவரை டிரான்ஸ்வெர்ஸ் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளது. இது வேனிற்கான சிறந்த ரைடிங் குவாலிட்டியை வழங்குகிறது. இந்த வேனின் இன்ஜினை பொருத்தவரை மெர்சிடீஸ் டிரைவ்டு 2.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 115 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்

அர்பேனியா வேனை பொருத்தவரை மொத்தம் ஷார்ட், மீடியம், மற்றும் லாங் வேரியன்ட்களில் முறையே 10,13 மற்றும் 17 ஆகிய சீட்டர் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது பகிர்ந்து பயணிக்கும் வகை வாகனமாகப் பயன்படுத்தலாம். குறிப்பாகப் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பெரிய நிறுவனங்களுக்கான ஆட்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள், டூர் வாகனங்கள் போன்ற பயன்பாட்டிற்குப் பயன்படுத்தலாம். தற்போது உள்ள டிராவர் வேனிற்கு மாற்றாக இதைப் பயன்படுத்த முடியும்.

இந்த வேன் எப்பொழுது அறிமுகமாகப் போகிறது, இதை விலை என்ன போன்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவிலேயே இது விற்பனைக்கு வரும் என் தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த வேன் என்ன விலையிலிருந்தால் நன்றாக இருக்கும்? இதில் என்னென்ன வசதிகளை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Force unveiled urbania van with mercedes derived engine
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X