Just In
- 59 min ago
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- 1 hr ago
நீங்க வச்சிருக்க ஆக்டிவாலாம் வேஸ்ட்! கார்களுக்கே உரித்தான அம்சத்துடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஆக்டிவா!
- 2 hrs ago
இந்த விஷயத்திலும் செம்ம பொருத்தம்.. இளம் ஜோடி கே.எல் ராகுல் & அதியாவின் மயக்க வைக்கும் லக்சரி கார் கலெக்ஷன்ஸ்
- 3 hrs ago
சார்ஜ் போடாமல் வெறும் சூரிய வெளிச்சத்திலேயே காரை இயக்க முடியுமா? இரவு நேரம் இது எப்படி இயங்கும்?
Don't Miss!
- Movies
ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியல் LIVE: லகானுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் நாமினேஷனில் இந்திய படம் வருமா?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- News
அண்ணாமலையின் ஆதரவு ஓபிஎஸ்க்கா? ..ஈபிஎஸ்க்கா?.. வந்து விழுந்த கேள்வி.. செங்கோட்டையன் அளித்த பதில்
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Sports
பாபர் அசாம் ஓரமா போங்க.. உலக சாதனையை தனதாக்கிய சுப்மன் கில்.. வெறும் 21 இன்னிங்ஸ்களில் ரெக்கார்ட்!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஒரு எலெக்ட்ரிக் காரால் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியுமா? ஃபோர்ட்-இன் இந்த காரால முடியும்!
வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளுக்கும் மூன்று நாட்கள் வரை கரண்ட் வழங்கும் வகையில் சிறப்பு சக்தியுடன் ஓர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த உலகில் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதற்கு உலகளவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் பல வகைகளில் அதிக பலனை வழங்குகின்றன. குறிப்பாக, சுற்றுச் சூழலுக்கு இது மாசை ஏற்படுத்தாது. மேலும், குறைந்த பராமரிப்பில் அதிக லாபத்தை வழங்கும். இதுபோன்ற எக்கச்சக்க காரணங்களினால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலக மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துக் காணப்படுகின்றது.

அதிலும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்கு வரும் புதுமுக மின்சார வாகனங்களுக்கு டிமாண்ட் ஏகபோகமாக நிலவுகின்றது. அந்தவகையில், ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்பான எஃப்-150 லைட்னிங் (F 150 Lightning) வாகனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஓர் பிக்-அப் ட்ரக் ரக எலெக்ட்ரிக் வாகனமாகும். இந்த வாகனத்திற்கு அமெரிக்கர்கள் மத்தியில் மிக சிறப்பான ரெஸ்பான்ஸ் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இக்காரின் முதல் பேட்ச் தற்போது டெலிவரிக்கு தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு வசதி பற்றிய தகவல் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக்கின் உயர்நிலை வேரியண்ட், ஓர் வீட்டின் அனைத்து மின் விளக்குகளுக்கும் மூன்று நாட்கள் வரை மின்சார திறனை வழங்கக் கூடிய அளவிற்கு திறன்படைத்தது என்கிற தகவலே வெளியாகியுள்ளது. இந்த தகவலே ஒட்டுமொத்த மின் வாகன உலகையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

இதுபோன்று இன்னும் பல அம்சங்களுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இதன் விலை சற்றே அதிகமானதாக காட்சியளிக்கின்றது. ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக்கின் உயர்நிலை வேரியண்டிற்கு 72,474 அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கும். பேக்-அப் பவர் எனும் சிறப்பம்சத்தின் வாயிலாகவே மூன்று நாட்களுக்கு ஓர் வீட்டின் மின் விளக்குகளுக்கு மின்சார திறனை வழங்கும் வசதியை உயர்நிலை தேர்விற்கு ஃபோர்டு வழங்கியிருக்கின்றது.

இந்த சிறப்பு வசதிக்காக நிறுவனம் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக்கில் 131 kWh பேட்டரி பைக்கை வழங்கியிருக்கின்றது. இந்த பேட்டரியானது சன்ரன், சோலார் கம்பெனியின் கூட்டணியின் வாயிலாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது 9.6 kW வரை பவரை வெளியேற்றும் திறன் கொண்டது.

இப்பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ வரை செல்லுவதற்கான மின்சார திறனை வழங்கும். இத்தகைய அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுடன் சேர்த்து பவர்-கட்டில் இருந்தும் இது நமக்கு விளக்களிக்கும். வாடிக்கையாளர் சன்ரன்ஸ்-இன் ஹோம் இன்டெக்ரேஷன் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்வர்டர் மற்றும் டிரான்ஸ்ஃபர் சுவிட்சுடன் கூடிய பேட்டரி அமைப்பை இது கொண்டிருக்கும்.

இது வழிகளில் பவரை வழங்க உதவும். கூடுதலாக சோலார் பவரையும் ஆப்ஷனலாக ஃபோர்டு எஃப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்-அப் ட்ரக் பயனர்களால் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இது கூடுதல் சிறப்பு வசதியை வீட்டிற்கு வழங்க உதவும். குறிப்பாக, வீட்டை எப்போதும் மின்சார திறன் நிறைந்த இல்லமாக மாற்ற வழிவகுக்கும்.
-
இங்கிலாந்து பிரதமருக்கு இவ்ளோ பெரிய அபராதமா! இந்தியால பஞ்சாயத்து கவுன்சிலருக்கு கூட போலீஸால ஃபைன் போட முடியாது
-
இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!
-
இவ்ளோ கம்மியான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வர போகுதா! பஜாஜ், டிவிஎஸ், ஏத்தர் நிறுவனங்கள் அதிரடி திட்டம்!