ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய 2022 டாருஸ் காரினை சர்வதேச சந்தைகளில் வெளியீடு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் விரைவில் விற்பனையை துவங்கவுள்ள இந்த ஃபோர்டு காரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

ஃபோர்டு டாருஸ் ஆனது சீனாவில் விற்பனையில் உள்ள ஃபோர்டு மோண்டேயோ-வின் ரீபேட்ஜ்டு வெர்சனாகும். இதனால் மோண்டேயோவின் அதே அட்வான்ஸ்டு எதிர்கால தோற்றத்தினை புதிய டாருஸ் மாடலும் கொண்டுள்ளது. இந்த காரின் முன்பக்கத்தில் நேர்த்தியான, பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் அமைப்பு, பெரிய அளவிலான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

காரின் பக்கவாட்டு பகுதி காற்றியக்கவியலுக்கு இணக்கமானதாகவும், மொத்த காருக்கும் ஸ்போர்டியான தோற்றத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளது. பக்கவாட்டில், கதவுகளுக்கு கீழே சில்வர் நிற ஃபினிஷிங், க்ரோம் ஜன்னல் லைன்களுடன் காட்சி தருகிறது. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் காரின் மொத்த அகலத்திற்கும் எல்இடி விளக்கு பார் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

அதேநேரம் பின் பம்பரானது க்ரோம் தொடுதல்களை கொண்டதாக உள்ளது. அத்துடன் 2022 டாருஸின் பின்பக்கத்தில் போலியான எக்ஸாஸ்ட் குழாயையும் காண முடிகிறது. உட்புறத்தில் 2022 ஃபோர்டு டாருஸ் சற்று கவர்ச்சிக்கரமான தோற்றத்தினை கொண்டுள்ளது. இதன் டேஸ்போர்டில் 8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் & 13.2 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை என இரு திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

இவற்றுடன் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் இரட்டை-நிற கேபின் உள்ளிட்டவையும் இந்த ஃபோர்டு காரில் வழங்கப்பட்டுள்ளன. மைய கன்சோலில் கியர் லிவருக்கு மாற்றாக வட்ட வடிவிலான கியர் தேர்ந்தெடுப்பான் கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் & வாகனத்தின் பாதுகாப்பிற்கு தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, மோதல் தவிர்ப்பான் போன்றவை 2022 டாருஸில் உள்ளன.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

இவை தவிர்த்த மற்ற அம்சங்களாக வயர் இல்லா ஸ்மார்ட்போன் சார்ஜர், ஸ்மார்ட்போன் இணைப்பு (ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே) உள்ளிட்டவற்றை சொல்லலாம். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2022 ஃபோர்டு டாருஸில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 சிலிண்டர், ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

இந்த என்ஜின், டிரான்ஸ்மிஷன் & மற்ற அமைப்புகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளின் அதிக வெப்பத்தையும், மணலையும் தாங்கக்கூடிய அளவிற்கு திறனுடன் உள்ளனவா என்பது தகுந்த சோதனைகள் மூலம் பரிசோதிக்கப்பட்டதாக ஃபோர்டு தெரிவிக்கிறது. ஏனெனில் ஃபோர்டு டாருஸ் ஆனது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான செடான் காராக விளங்குகிறது.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக...

2021இல் இந்த பிரீமியம் தர ஃபோர்டு கார் யுஏஇ, சவுதி அரேபியா, ஓமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. இதனால் டாருஸின் புதிய தலைமுறை மாடல் இந்த நாடுகளில் மேலும் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையை பொறுத்தவரையில், இங்கிருந்து ஃபோர்டு வெளியேறிவிட்டதால், டாருஸ் நம் நாட்டில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.

ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் உடன் முற்றிலும் புதிய ஃபோர்டு டாருஸ்!! மத்திய கிழக்கு நாடுகளுக்காக

ஏனெனில் இந்தியாவை விட்டு சமீபத்தில்தான் ஃபோர்டு நிறுவனம் வெளியேறியது. இதனால் இந்தியாவில் ஃபோர்டு கார்களின் உற்பத்தி நிறுத்திக்கொள்ளப்பட்டது. போதிய விற்பனையின்மையால் இந்த நடவடிக்கையை கொண்டுவந்துள்ள ஃபோர்டு, மஸ்டங் போன்ற லக்சரி & ஸ்போர்ட்ஸ் கார்கள் தங்களது பிராண்டில் இருந்து தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இருப்பினும் 2022 டாருஸ் மாடலை எதிர்பார்க்க முடியாது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
All-New Ford Taurus Makes Global Debut With 2.0L EcoBoost Engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X