போட்டி நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்த மஹிந்திரா... வாடிக்கையாளர்கள் எதிர்பாத்த முடிவை எடுத்துட்டாங்க!

மஹிந்திரா நிறுவனம் தனது அதிரடி முடிவால் தற்போது போட்டி நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார்களை உற்பத்தி செய்வதில் மிகவும் பிரபலமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் எஸ்யூவி கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் தற்போது போட்டி போட்டு கொண்டுள்ளனர்.

போட்டி நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்த மஹிந்திரா... வாடிக்கையாளர்கள் எதிர்பாத்த முடிவை எடுத்துட்டாங்க!

குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700), மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆகிய கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. நிறைய பேர் முன்பதிவு செய்துள்ளதால், இந்த கார்களுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக உள்ளது.

குறிப்பாக எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்களின் காத்திருப்பு காலம்தான் வாடிக்கையாளர்களை பாடாய்படுத்துகிறது. எக்ஸ்யூவி700 காருக்கு தற்போதைய நிலையில் 4-6 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஸ்கார்பியோ என் காருக்கான காத்திருப்பு காலம் 15 வாரங்கள் முதல் 105 வாரங்கள் வரை இருக்கிறது.

போட்டி நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்த மஹிந்திரா... வாடிக்கையாளர்கள் எதிர்பாத்த முடிவை எடுத்துட்டாங்க!

இந்த கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், வேரியண்ட்களை பொறுத்து, இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் கார் கைக்கு கிடைக்கும். இந்த நீண்ட காத்திருப்பு காலம், வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது. எனவே மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

ஆம், காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக கார்களின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி எக்ஸ்யூவி300 காரின் உற்பத்தி ஒரு மாதத்திற்கு 9,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 5,000 எக்ஸ்யூவி300 கார்கள் மட்டும்தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதே போல் எக்ஸ்யூவி700 காரின் உற்பத்தியும் ஒரு மாதத்திற்கு 6,000 என்ற அளவில் இருந்து 10,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. மறுபக்கம் ஸ்கார்பியோ என் காரின் உற்பத்தியும் தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு வெறும் 6,000 என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. இதுவும் ஒரு மாதத்திற்கு 10,000 கார்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த வரிசையில் தார் எஸ்யூவி காரின் உற்பத்தியையும் மஹிந்திரா நிறுவனம் அதிகரிக்கவுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு மாதத்திற்கு 4,000 தார் எஸ்யூவி கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 6,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. உற்பத்தி அதிகரிக்கப்படவுள்ளதால், மஹிந்திரா கார்களின் காத்திருப்பு காலம் குறையும்.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி கிடைக்கும். எனவே மஹிந்திரா நிறுவனத்தின் கார்களை முன்பதிவு செய்து விட்டு, டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உற்பத்தி அதிகரிக்கப்படவுள்ள காரணத்தால், மஹிந்திரா கார்களின் விற்பனை எண்ணிக்கையும் உயரவுள்ளது. இது போட்டி நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Good news for mahindra car customers
Story first published: Friday, November 11, 2022, 20:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X