செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ... இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம்...

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் செம அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்? என்னென்ன புதிய வசதிகள் வருகிறது? முழுமையாகக் காணலாம் வாருங்கள்

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சாஃப்ட்வேர் டெவலப்பர்களுக்கான கருத்தரங்க கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது இந்தாண்டிற்கான கருத்தரங்க கூட்டம் I/O 2022 என்ற பெயரில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூகுள் நிறுவனம் தனது தயாரிப்புகளின் புதிய அப்டேட்கள் குறித்த அறிவிப்பையும் புதிய தயாரிப்புகள் குறித்த அறிமுகத்தையும் நடத்தும். அந்த வகையில் இந்தாண்டு கூகுள் நிறுவனம் செய்த அறிவிப்பில் முக்கியத்துவம் பெறுவது ஆண்ட்ராய்டு ஆட்டோவில் அந்நிறுவனம் கொண்டு வந்துள்ள அப்டேட்கள் தான்.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

ஆண்ட்ராய்டு ஆட்டோ என்பது வாகனங்களில் கனெக்ட்டிவிட்டிக்காக கூகுள் நிறுவனம் வழங்கும் வழங்கும் தளம். இந்த வசதி கொண்ட வாகனங்களில் நீங்கள் பயணிக்கும் போது உங்கள் ஆண்ட்ராய்டு செல்போனை வாகனத்துடன் கனெக்ட் செய்து ஆண்ட்ராய்டு ஆட்டோவில் உள்ள வசதிகளைப் பயன்படுத்த முடியும். முக்கியமான ஆன்லைனில் பாட்டுக் கேட்பது, செல்லும் இடத்திற்கான வழியை மேப் மூலம் பார்ப்பது, போனிற்கு வரும் அழைப்புகளை போனை பயன்படுத்தாமலேயே பேசுவது உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்கின்றன.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

இதில் கூகுள் நிறுவனம் தற்போது புதிய அப்டேட்களை செய்துள்ளது. இந்தாண்டு அந்நிறுவனம் பல தயாரிப்புகளில் வெளியிட்ட அப்டேட்களை விட இந்த ஆண்ட்ராய்டு ஆட்டோவில் வெளியிட்ட அப்டேட்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனப் பலர் கூறி வருகின்றனர். கூகுள் நிறுவனம் இதில் என்னென்ன அப்டேட்களை வழங்கியுள்ளது எனக் காணலாம் வாருங்கள்

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

புதிய இன்டர்பேஸ்

ஆண்ட்ராய்டு ஆட்டோ தளம் புதிய இன்டர்பேஸ் அப்டேட்டை பெற்றுள்ளது. இதனால் மேப்பை பயன்பாடு வேகமாகவும், மீடியா கண்ட்ரோல் எளிமையாகவும், ஆண்ட்ராய்டு ஆட்டோவில் உள்ள முக்கியமான அம்சங்களை எளிமையாகவும், குழப்பமின்றி பயன்படுத்தும்படி அதன் இன்டர்பேஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் பயனர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றத்தைக் கூகுள் நிறுவனம் செய்துள்ளது.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

ஸ்பிலிட் ஸ்கிரின்

ஆண்ட்ராய்டு ஆட்டோவில் மிக முக்கிய அம்சமாக, ஸ்பிலிட் ஸ்கிரின் அப்டேட்டை பெறுகிறது. அதாவது ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் ஒரே நேரத்தில் இதில் உள்ள பல ஆப்ஸ்களை பயன்படுத்தும் படி வடிவமைத்துள்ளது. நீங்கள் மேப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதே நேரத்தில் உங்களுக்கு திடீரென பாட்டு கேட் வேண்டும் எனத் தோன்றினால் மோப்பை கிளோஸ் செய்யாமலேயே மீடியாவை கண்ட்ரோல் செய்ய முடியும். அதே நேரம் உங்களுக்கு போன வருகிறது. என்றால் அதையும் பேச முடியும்.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை பயன்படுத்துவதற்கு ஏற்ப ஸ்கிரீனில் லே அவுட்கள் தானா மாறிக்கொள்ளும், ஸ்கிரின் அளவிற்கு ஏற்றபடி இதன் சைஸில் மாற்றம் தானாக நிகழும்படி ஆண்ட்ராய்டு ஆட்டோ அப்டேட் செய்யப்படுகிறது.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

மேலும் இந்த அப்டேட்டில் முக்கிய அம்சமாகக் கூகுள் அசிஸ்டென்ட் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் பயணத்தின் போது மெசேஜ்களுக்கு ரிப்ளே அனுப்புவது, விரும்பிய பாடலை பிளே செய்வது, நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் நண்பருக்கு அனுப்புவது, நீங்கள் எவ்வளவு நேரத்தில் பயணத்தில் அடைய வேண்டிய இடத்திற்குச் செல்வீர்கள் என ஸ்கிரனை பார்க்காமலேயே தெரிந்து கொள்வது, வாய்ஸ் மூலமே கால்களைச் செய்வது என இந்த வசதியைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள இந்த அப்டேட்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் வெகு நாட்களாக அப்டேட்களை எதிர்பார்த்து வந்த நிலையில் சரியான நேரத்தில் கூகுள் நிறுவனம் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

செம அப்டேட்டை பெற்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ . . . இனி காரில் செல்லும் போது மாஸ் காட்டலாம் . . .

தற்போது தயாரிக்கப்படும் கார்கள் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆப்ஷன்களுடன் வருவதால் எதிர்காலத்தில் எல்லா கார்களும் கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தில் இருக்கும் என்பதால் கூகுள் நிறுவனம் இந்த தயாரிப்பில் தற்போது முக்கியத்துவம் காட்டத் துவங்கியுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஆண்ட்ராய்டு தளம் போலவே ஆண்ட்ராய்டு ஆட்டோ தளமும் பல அப்டேட்களை பெறும் என எதிர்பார்க்கலாம்

Most Read Articles

English summary
Google announces new features on android auto in io 2022
Story first published: Saturday, May 14, 2022, 9:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X