எல்லாரும் ரெடியாகுங்க! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்வது எப்படி? முழு விபரம் இதோ!

வரும் 2023 ஜனவரி மாதம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவார்கள். இந்த ஆட்டோ எக்ஸ்போ எங்கு, எப்பொழுது நடக்கிறது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? எப்பொழுது எப்படிக் கலந்து கொள்வது உள்ளிட்ட விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்டோமொபைல் துறைக்கு என ஒவ்வொரு ஆண்டும் பிரத்தியேகமாகக் கண்காட்சி ஒன்று நடத்தப்படும். அந்த கண்காட்சியில் அந்நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள். ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு இந்த கண்காட்சி மிகவும் முக்கியமான ஒன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆட்டோமொபல் துறைக் கான கண்காட்சி நடக்கிறது.

எல்லாரும் ரெடியாகுங்க! 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்வது எப்படி? முழு விபரம் இதோ!

இந்த கண்காட்சியின் போது இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறையில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை அனைவரும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்காகவே தங்களின் புதிய தயாரிப்புகளை உருவாக்குவார்கள்.இந்த கண்காட்சியின் போது அதிக மக்களின் கவனம் இதில் இருப்பதால் இதில் தங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால் மக்களின் கவனம் இங்கு இருக்கும் என்பதால் இதைச் செய்து வருகின்றனர்.

இப்படியாக 2023ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ளது. நொய்டா பெருநகர பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் பகுதியில் இந்த கண்காட்சி நடக்கவுள்ளது. இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 12ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை சுமார் 1 வாரம் நடக்கவிருக்கிறது.இந்த எக்ஸ்போவில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றனர்.

ஜனவரி 12ம் தேதி காலை 10 மணிக்கு இந்த கண்காட்சி துவங்குகிறது. இந்த கண்காட்சியில் முதலில் ஊடகத்தினருக்கான பதிவுகள் மற்றும் அவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. அதில் இந்தியாவில் உள்ள அத்தனை ஆட்டோமொபைல் குறித்த தகவல்களை வழங்கும் ஊடகங்களும் கலந்து கொள்ளவுள்ளது. அப்படியே தொடர்ந்து ஜனவரி 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை பிஸ்னஸ் வசிட்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

அதாவது இந்தியாவில் ஆட்டோமொபைல்துறையில் டீலர்களாக இருப்பவர்கள்,ஆட்டோமொபைல் துறை சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இது போக ஊடகத்தினருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஒவ்வொரு நிறுவனங்களாக தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளன. இந்த தேதிகளில் காலை 10 மணிக்குத் துவங்கும் இந்த கண்காட்சி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

ஜனவரி 15ம் தேதி தொழில் முறை பார்வையாளர்களுக்கான நேரம் முடிவடைகிறது. ஜனவரி 14ம் தேதி காலை 10 மணி முதலே பொது பார்வையாளர்களுக்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. ஜனவரி 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம்.

இந்த கண்காட்சிக்கான டிக்கெட் தற்போது ஆன்லைன் முறையில் விற்பனையாகிறது. 13ம் தேதி தொழில்முறை பார்வையாளர்களுக்கான அனுமதிச் சீட்டிற்கு ஒரு நபருக்கு ரூ750 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன் பின்னர் நடக்கவுள்ள பொதுமக்களுக்கான பார்வை கட்டணமாக 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு டிக்கெட் ரூ475 என்ற விலையிலும், 16 முதல் 18ம் தேதிகளில் பொதுமக்களுக்கு ஒரு டிக்கெட் ரூ350 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்கள் தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ள விரும்பினால் இப்பொழுதே உங்கள் டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்!

Most Read Articles

English summary
Here find the dates and ticket price details for auto expo 2023
Story first published: Friday, December 9, 2022, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X