இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) உட்பட மொத்தம் ஆறு புதுமுக கார்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. அவைகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

இந்திய வாகன சந்தையை அலங்கரிக்கும் வகையில் இந்த ஆகஸ்டு மாதத்தில் அதிகளவில் புதுமுக கார்கள் அறிமுகத்தைக் காண இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இன்று (ஆகஸ்டு 12) அறிமுகம் செய்யப்பட இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காருடன் சேர்த்து ஆறு கார்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

1. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic):

மஹிந்திரா நிறுவனம் அண்மையில் ஸ்கார்பியோ என் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே இக்காருக்கான புக்கிங் பணிகளை ரூ. 25 ஆயிரம் முன்தொகையில் தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே ஒரு லட்சம் புக்கிங்கிகள் புதிய ஸ்கார்பியோ என் காருக்கு கிடைக்கப்பட்டது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

தற்போதைய நிலவரப்படி இந்த புக்கிங் எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் உயர்ந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை வெர்ஷனாகவே இந்த ஸ்கார்பியோ என் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த காரின் அறிமுகத்தை உறுதிப்படுத்திய மஹிந்திரா நிறுவனம். இதன் வருகை எந்த விதத்திலும் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்திருந்தது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

மேலும், ஸ்கார்பியோ கிளாசிக் எனும் புதிய பெயர் அவதாரத்திலேயே அது விற்பனைக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த ஸ்கார்பியோவின் வருகையே இன்று (ஆகஸ்டு 12) அரங்கேற இருக்கின்றது. இன்றைய தினமே அதன் வருகைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை மற்றும் முக்கிய அம்சங்களின் விபரங்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

2. மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனம் (Mahindra Electric Vehicle Concept):

மஹிந்திரா நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் கார் ஒன்றை வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஐந்து புதுமுக மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், ஒன்றே இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. நிறுவனம் என்ன மாதிரியான எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது தெரியவில்லை. ஆகையால், அந்த வாகனம் குறித்த முழுமையான விபரங்களை எங்களால் வெளியிட முடியவில்லை.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

3. ஓலாவின் புதுமுக மின்சார வாகனம் (Ola New Product Unveil):

ஆகஸ்டு 15ம் தேதி அன்று மஹிந்திரா நிறுவனத்தைப் போலவே புதுமுக மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமும் காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் முன்னதாக ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஓலா எஸ்1 ஆகிய இரு விதமான தேர்வுகளில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வந்தது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

இதில், எஸ்1 ப்ரோவின் வணிகத்தை திடீரென நிறுத்தியது. இது சற்று மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இதன் வெளியேற்றத்தால் நிறுவனத்தின்கீழ் தற்போது குறைவான விலையில் மின்சார வாகனம் விற்பனைக்குக் கிடைக்காத சூழல் நிலவுகின்றது. இந்த பற்றாக்குறையை போக்கும் விதமாக நிறுவனம் விரைவில் மலிவு விலை மின்சார வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனத்தின் அறிமுகமே வரும் ஆகஸ்டு 15இல் அரங்கேறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை. ஆகையால், நிறுவனம் என்ன வாகனத்தை அறிமுகம் செய்யப்போகின்றது என்கிற ஆர்வம் நம் அனைவரிடத்திலும் உச்சளவில் நிலவ ஆரம்பித்திருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

4. புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (New Maruti Suzuki Alto K10): August 18

மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் ஆல்டோ கே10 காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. வரும் ஆகஸ்டு 18ஆம் தேதியே இதன் வருகைக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் பல மடங்கு சூப்பரான காராக அது மாற்றப்பட்டிருக்கின்றது. ஸ்போர்ட்டி தோற்றம், அதிக சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் என பல ஆல்டோ கே10 காரில் வழங்கப்பட உள்ளது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

செலிரியோ மற்றும் ஆல்டோ 800 ஆகிய இரு கார்களின் கலவையாக புதிய ஆல்டோ கே10 வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகவே ஆல்டோ கே10 காருக்கு ஸ்போர்டி தோற்றம் கிடைத்திருக்கின்றது. தற்போது ரூ. 11 ஆயிரம் முன்தொகையில் ஆல்டோ கே10 காருக்கான புக்கிங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஆல்டோவும் ஒன்று. இந்த வரவேற்பு புதிய ஆல்டோ கே10 மாடலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

5. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரும் ஒன்று. இந்த காரை டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாகவே உருவாக்கியிருக்கின்றது. இந்த வாகனம் மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இருவிதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

இந்தியாவில் தற்போது ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதை உணர்ந்து இவ்வாறு இரு சூப்பரான ஹைபிரிட் ஆப்ஷன்களில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை விற்பனைக்குக் கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்த காரின் வருகை ஆகஸ்ட் 16ம் தேதி அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 9.50 லட்சம் தொடங்கி ரூ. 19 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

ஒயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகள் கொண்ட 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய எம்ஐடி உடன் கூடிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹெட்ஸ் அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 6 ஏர்பேக்குகள் என எக்கசக்க அம்சங்களுடன் இந்த டொயோட்டா கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

6. மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் (Mercedes-AMG EQS 53 4Matic+):

மேலே பார்க்கப்பட்ட கார்களைத் தொடர்ந்து இந்த வருடத்தின் இறுதியை அலங்கரிக்கும் வகையில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதன் வருகை ஆகஸ்டு 24ஆம் அன்றே அரங்கேற இருக்கின்றது. அதிக சொகுசு வசதிகள் கொண்ட வாகனமாக இதனை மெர்சிடிஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது ஸ்கார்பியோ கிளாசிக்... இதுமட்டுமா இன்னும் பல புதிய கார்கள் தொடர்ச்சியாக அறிமுகமாக இருக்கு!

மிக முக்கியமாக 400 வோல்ட், 107.8 kWh பேட்டரி பேக் ஆகியவற்றுடன் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆமாங்க, இது ஓர் எலெக்ட்ரிக் கார்தாங்க. இப்பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக 513 கிமீ முதல் 570 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான மின்சார காரை சிபியூ (Completely Built Unit) வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது மெர்சிடிஸ். இதுமட்டுமின்றி அதிக லக்சூரி வசதிகளுடன் இவ்வாகனம் விற்பனைக்கு வர உள்ளது.

Most Read Articles
English summary
Here is 6 upcoming cars list mahindra scorpio classic to maruti suzuki alto
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X