வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரின் ஓராண்டு விழாவை முன்னிட்டு அனிவர்சரி எடிசன் (Volkswagen Anniversary Edition) எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் பிரபல கார் மாடலான டைகுனின் அனிவர்சரி எடிசனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டைகுன் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி ஓராண்டு ஆவதை முன்னிட்டு இந்த அனிவர்சரி எடிசனை ஃபோக்ஸ்வேகன் களமிறக்கியிருக்கின்றது.

கடந்த செப்டம்பர் மாதத்திலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் காரை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

டைகுன் ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி ரக காராகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தற்போது இந்தியாவில் நற்பெயர் நிலவிக் கொண்டிருப்பதில் இந்த காருக்கும் பெரும் பங்குண்டு. இதன் விளைவாகவே நிறுவனம் இக்காரின் முதல் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, குறிப்பாக, டைகுனுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அனிவர்சரி எடிசனை களமிறக்கியிருக்கின்றது.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

வழக்கமான டைகுன் கார் மாடலைக் காட்டிலும் பல மடங்கு அழகுமிக்க வெர்ஷனாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 'டைனமிக் லைன்' எனும் வேரியண்டை தழுவியே இச்சிறப்பு பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓர் உயர்நிலை வேரியண்ட் ஆகும். அதாவது, சிறப்பு வசதிகள் நிரப்பட்ட வேரியண்ட். அதிக பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இந்த வேரியண்ட் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

இதனை மேலும் சிறப்பிக்கும் வகையிலேயே அனிவர்சரி எடிசன் இருக்கின்றது. ஆமாங்க, கூடுதல் அலங்கார அம்சங்களை இந்த அனிவர்சரி எடிசனில் ஃபோக்ஸ்வேகன் சேர்த்துள்ளது. குறிப்பாக, புதிய வண்ணம், 1ஸ்ட் அனிவர்சரி எடிசன் எனும் எம்பளம், அதிக பிரீமியம் தர இன்டீரியர் உள்ளிட்டவற்றால் அனிவர்சரி எடிசன் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஹை-லக்ஸ் பனி மின் விளக்கு, உடல் நிறத்திலான டூர் கார்னிஷ், கருப்பு நிற 'சி' பில்லர்கள், கருப்பு நிற ரூஃப் ரெயில்கள், டூர் எட்ஜ் குவார்ட், கருப்பு நிற ஓஆர்விஎம் கேப், விண்டோ விஷர்கள் மற்றும் அலுமினிய பெடல்களால் இந்த அனிவர்சரி எடிசன் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வண்ண தேர்வுகளில் டைகுன் அனிவர்சரி விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரைசிங் ப்ளூ (Rising Blue), குர்குமா யெல்லோ (Curcuma Yellow) மற்றும் ஒயில்டு செர்ரி ரெட் (Wild Cherry Red) ஆகிய நிற தேர்வுகளே அவை ஆகும். அழகு அம்சங்கள் பாதுகாப்பு கருவிகளும் இந்த காரில் அதிகளவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

சுமார் 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அந்தவகையில் டைகுன் அனிவர்சரி எடிசனில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், மல்டி கொலிசன் பிரேக்குகள், ரியர் வியூ கேமிரா, சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் மற்றும் டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

இத்துடன், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், மும்முனை சீட் பெல்டுகள் (முன் மற்றும் பின் என இருபக்க இருக்கையாளர்களுக்கும் இது வழங்கப்பட்டிருக்கின்றது) உள்ளிட்ட அம்சங்களும் அனிவர்சரி எடிசனில் இடம் பெற்றிருக்கின்றன. வழக்கமான டைகுனில் வழங்கப்படுவதைப் போலவே இந்த சிறப்பு பதிப்பிலும் இரு விதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ ஆகிய இரு மோட்டார் தேர்வுகளிலேயே டைகுன் அனிவர்சரி விற்பனைக்கு வந்துள்ளது. இதில், 1.0 லிட்டர் மோட்டாரானது 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

வழக்கமான டைகுனைவிட ரொம்ப ரொம்ப அழகா இருக்கு... ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் அறிமுகம்!

ஆனால், இதன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ மோட்டாரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜியும், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இந்த மோட்டார் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமாதிரியான சூப்பரான வசதிகளுடனேயே ஃபோக்ஸ்வேகன் டைகுன் அனிவர்சரி எடிசன் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பை குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Here is full details about volkswagen taigun anniversary edition
Story first published: Thursday, September 22, 2022, 19:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X