ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை... குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்!

இந்தியாவில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் சற்றே கூடுதல் விலையைக் கொண்டவையாக சிஎன்ஜி வாகனங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றின் சிறப்பு வசதிகள் ஏராளம் என்பதால் இந்தியர்கள் சிஎன்ஜி பேராதரவை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

குறிப்பாக, அதிக மைலேஜை அவை வழங்கும் என்கிற காரணத்திற்காகவே இந்தியர்கள் சிஎன்ஜி கார்களை அதிகளவில் வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அதேவேலையில், பெட்ரோல் மற்றும் டீசலைக் காட்டிலும் கணிசமான அளவு சிஎன்ஜி வாயு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுபோன்று பன்முக காரணங்களினாலேயே சமீப சில காலமாக சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் காணப்படுகின்றது.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

விற்பனைக்கு அதிகரித்துக் காணப்படுகின்ற காரணத்தினால் வாகன உற்பத்தியாளர்கள் சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதில் அதிக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனம் அண்மையில் ஸ்விஃப்ட் கார் மாடலை சிஎன்ஜி வெர்ஷனில் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே, இந்நிறுவனம் பல்வேறு கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வை வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் சமீபத்தில் ஸ்விஃப்டையும் சிஎன்ஜி மோட்டாருடன் விற்பனைக்கு வழங்கி வழங்கியது.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

இந்த தேர்விற்கு அறிமுக விலையாக ரூ. 7.77 லட்ச நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் மாத சந்தா திட்டத்தீன் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டணம் ரூ. 16,499இல் இருந்து ஆரம்பிக்கின்றது. ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 30.90 கிமீ வரை மைலேஜ் தரும்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

இதுபோன்று இன்னும் பல சிஎன்ஜி கார்கள் அதிக மைலேஜ் திறனுடன் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பட்டியலையே இந்த பதிவில் நாம் இப்போது பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சிஎன்ஜி மோட்டார் வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களையே பார்க்க உள்ளோம் வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG)

டாடா மோட்டார்ஸ் அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளில் மட்டுமே சிஎன்ஜி தேர்வை வழங்குகின்றது. அவற்றில் மிகக் குறைவான விலைக் கொண்ட சிஎன்ஜி கார் மாடலாக டியாகோ இருக்கின்றது. இது ரூ. 6.29 லட்சம் என்கிற மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வாகனம் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு அதிகபட்சமாக 26 கிமீ மைலேஜ் தரும்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

இதில் பொருத்தப்பட்டிருக்கும் சிஎன்ஜியால் இயங்கக் கூடிய மோட்டார் 72 எச்பி பவரை வெளியேற்றும். மேலும், இந்த தேர்வில் கூடுதல் சிறப்பு வசதிகளாக புரெஜ்க்டர் ரக ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், ரியர் பார்க்கிங் கேமிரா, தானியங்கி டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல் மற்றும் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் டியாகோ சிஎன்ஜியில் இடம் பெற்றிருக்கின்றன.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

மாருதி சுஸுகி செலிரியோ சிஎன்ஜி (Maruti Suzuki Celerio CNG)

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காராக மாருதி சுஸுகி செலிரியோ இருக்கின்றது. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தரும் என அராய் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது. இதேபோல், இதன் சிஎன்ஜி தேர்வும் அதிக மைலேஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அது ஒரு கிலோவிற்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

மாருதி நிறுவனம் செலிரியோவின் சிஎன்ஜி வெர்ஷனில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 55 எச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த கார் ரூ. 6.58 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

மாருதி சுஸுகி வேகன்ஆர் சிஎன்ஜி (Maruti Suzuki WagonR CNG)

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலே இந்த வேகன்ஆர். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலிலும் இந்த கார் மாடல் முதல் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காரின் விற்பனைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் வேகன்ஆர் கார் மாடலில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய இரு வேரியண்டுகளில் சிஎன்ஜி தேர்வை நிறுவனம் வழங்குகின்றது. இரண்டிலும், 55 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.0 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது செலிரியோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே மெக்கானிசமே வேகன்ஆர் காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் கிலோ சிஎன்ஜிக்கு 34 கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது. வேகன்ஆர் சிஎன்ஜி ஆப்ஷன் ரூ. 6.42 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி (Hyundai Grand i10 Nios CNG)

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் சிஎன்ஜி கார் பிரிவில் தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் குறைந்த விலை சிஎன்ஜி காராக கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. மக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரு ட்ரிம்களில் சிஎன்ஜி தேர்வை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோவிற்கு 28 கிமீ வரை மைலேஜ் தரும். 1.2 லிட்டர் மோட்டாரே சிஎன்ஜி கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 66 எச்பி திறன் வரை வெளியேற்றும். இதன் ஆரம்ப விலை ரூ. 7.10 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

டாடா டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் கார் மாடலை பெட்ரோல், மின்சாரம் மற்றும் சிஎன்ஜி என பன்முக தேர்வில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இதுபோன்று மூன்று விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே கார் மாடல் இதுவாகும். இதன் சிஎன்ஜி தேர்வு ரூ. 7.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி கார்கள்... ஸ்விஃப்ட் முதல் டாடா டிகோர் வரை!

எக்ஸ்இசட், எக்ஸ்இசட்பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் ட்யூவல் டோன் என சிஎன்ஜி-யையே பன்முக தேர்வில் இந்த டிகோர் கார் மாடலில் டாடா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 27 கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது. டாடா மோட்டார்ஸ் அடுத்து வரும் காலங்களில் இதுபோன்று இன்னும் பல மின்சார மற்றும் சிஎன்ஜி கார்களைத் தொடர்ச்சியாக இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Here is list of cng cars available for sale under rs 10 lakh in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X