டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

டாடா உட்பட முன்னணி நிறுவனங்கள் சில வெகு விரைவில் இந்திய சந்தையில் புதுமுக எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க இருக்கின்றன. இதனால், வரும் 2023ம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக 20 எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் கால் தடம் பதிக்க உள்ளன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டிற்குள் 20க்கும் மேற்பட்ட புதுமுக மின்சார கார்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. இரண்டு, மூன்று மற்றும் நான்கு என அனைத்து பிரிவுகளிலும் விற்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் மிக சூப்பராக நிலவிக் கொண்டிருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இந்த டிமாண்டை பூர்த்தி செய்யும் வகையில் டாடா, ஃபோர்டு உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளன. அந்தவகையில் எந்தெந்த நிறுவனம் என்ன மாதரியான கார் மாடலை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3 புதுமுக எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நிறுவனம் டிகோர் இவி (நாட்டிலேயே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார கார் மாடல் இது) மற்றும் நெக்ஸான் இவி (நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மின்சார கார் மாடல் இது) ஆகிய இரு கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இவற்றின் வரிசையிலேயே விரைவில் மூன்று புதுமுக எலெக்ட்ரிக் கார்கள் சேர்க்கப்பட உள்ளன. டியாகோ இவி, சியாரா இவி மற்றும் அல்ட்ராஸ் இவி ஆகியைவே இந்த மூன்று எலெக்ட்ரிக் கார்களாகும். இவற்றை மட்டுமின்றி இன்னும் சில புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல்களைத் தயாரிக்கும் பணியிலும் டாடா ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மையில், அவற்றை அது கான்செப்ட் மாடலாகக் காட்சிப்படுத்தியது. அவின்யா மற்றும் கர்வ் இவ்விரு கார் மாடல்களே அவை ஆகும்.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

டியாகோ இவி, சியாரா இவி மற்றும் அல்ட்ராஸ் இவி இந்த மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களும் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக இக்கார்கள் அறிமுகம் செய்யப்படும். இதில், சியாரா இவி அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில், டியாகோ இவி ஆனது ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் ஒரே ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கின்றது. இஎக்ஸ்யூவி 300 கார் மாடலையே இதற்காக தயார்படுத்தியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையை புதுமுக வாகனங்களால் அலரிக்க திட்டமிட்டு, அந்த பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் எக்ஸ்யூவி 700-ம், இதைத்தொடர்ந்து, ஸ்கார்பியோ என் காரையும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது, மஹிந்திரா. இந்த நிலையிலேயே அடுத்த தயாரிப்பாக இஎக்ஸ்யூவி 300 காரை அறிமுகம் செய்யும் பணியில் அது களமிறங்கியிருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இரு புதுமுக எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் கோனா இவி எனும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து இதுவே, நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் காராகும்.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனுடன் சேர்த்து புதுமுக கார் ஒன்றையும் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. அந்த புதுமுக எலெக்ட்ரிக் உலக புகழ்பெற்ற ஐயோனிக் 5 ஆகும். கியா இவி6 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்பாரத்தில் வைத்தே இக்காரை ஹூண்டாய் உருவாக்கியிருக்கின்றது. இந்த காரை ஏற்கனவே ஹூண்டாய் வெளியீடு செய்துவிட்டது. வெகுவிரைவில் இக்காரை விற்பனக்கான அறிமுகத்தையும் செய்ய இருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனமும் இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் கார் பிரிவில் தனது பங்களிப்பை வழங்க இருக்கின்றது. இந்நிறுவனம் அதன் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் காராக என்யாக் ஐவி-யைக் களமிறக்க இருக்கின்றது. இதன் வெளியீடு 2023ம் ஆண்டின் இரண்டாம் கலாண்டிற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

ஸ்கோடாவின் இந்த முதல் தயாரிப்பு ஓர் முழு சார்ஜில் 520 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இத்தகைய சூப்பரான ரேஞ்ஜிற்காக என்யாக் ஐவி எலெக்ட்ரிக் காரில் 82.0 kWh பேட்டரி பேக்கை ஸ்கோடா பயன்படுத்த இருக்கின்றது. இக்காரை சிபியூ வாயிலாகவே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஆகையால், இதன் விலை ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரையில் இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

சிட்ரோன்

பிரெஞ்சு நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் சி5 ஏர் கிராஸ் எனும் ஒரே ஒரு கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் இரண்டாவது தயாரிப்பாக சி3 காம்பேக்ட் எஸ்யூவியை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதே காரின் மின்சார வெர்ஷனையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இந்த காரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கார், டாடா நெக்ஸான் இவி மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் மஹிந்திரா இஎக்ஸ்யூவி 300 எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

வால்வோ

வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எனும் புதுமுக கார் மாடலையே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவிற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இது ஓர் அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட வாகனம் என்பதால் ரூ. 60 லட்சத்திற்கு அதிகமான விலையில் இக்கார் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இதன் அறிமுகம் கியா இவி6 மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. வால்வோ எக்ஸ்சி40 ஓர் முழுமையான சார்ஜில் 418 கிமீ ரேஞ்ஜை வழங்கும். அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன், எண்ணற்ற லக்சூரி அம்சங்கள் என பல்வேறு சிறப்புகளுடன் இந்த மின்சார கார் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

மெர்சிடிஸ் பென்ஸ்

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பென்ஸ் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக மூன்று புதுமுக எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே இக்யூசி எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இக்யூஎஸ், இக்யூஏ மற்றும் இக்யூஎஸ் எஸ்யூவி ஆகிய மூன்று கார் மாடல்களைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அனைத்து எலெக்ட்ரிக் கார்களும் இந்தியாவில் வைத்தே கட்டமைக்கப்பட்டு, விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனம் இரு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஐ7 மற்றும் ஐஎக்ஸ்1 ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது, பிஎம்டபிள்யூ நிறுவனம். இதில், பிஎம்டபிள்யூ ஐ7 மிக மிக விலையுயர்ந்த காராக விற்பனைக்கு வர உள்ளது. அது 2.5 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

சிபியூ வாயிலாகவே சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் அக்காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் ஐஎக்ஸ் மற்றும் ஐ4 ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில், மிகக் குறைவான விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக ஐ4 இருக்கின்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 69.90 லட்சம் ஆகும்.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

ஆடி

ஆடி நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் இ-ட்ரான் ஜிடி மற்றும் இ-ட்ரான் என இரு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார்களின் வரிசையில் விரைவில் க்யூ4 இ-ட்ரான் எனும் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இந்த ஒரு காரை மட்டுமே அது களமிறக்க இப்போதைக்கு அது திட்டம் போட்டிருக்கின்றது. இந்த வாகனமும் சிபியூ வாயிலாகவே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனம், தங்களின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் மிகக் குறைவான வரவேற்புக் கிடைப்பதாகக் கூறி சந்தையைவிட்டு வெளியேறியிருக்கின்றது. சந்தையைவிட்டு முழுமையாக வெளியேற மனமில்லாத இந்நிறுவனம் குறிப்பிட்ட முன்னணி கார் மாடல்களை மட்டும் இறக்குமதி வாயிலாக விற்பனைக்கு வழங்க அது திட்டமிட்டுள்ளது.

டாடா இத்தன எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க போகுதா!.. மொத்தமா 20 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!

இந்த திட்டத்தின் அடிப்படையிலேயே நிறுவனம் ஓர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. அது மஸ்டாங் மேக் இ ஆகும். இந்த காரின் அறிமுகம் வெகு விரைவில் அரங்கேற இருக்கின்றது. அதாவது, நடப்பாண்டின் இறுதிக்குள் ஃபோர்டு மஸ்டாங் மேக் இ காரை அது வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த வாகனம் ரூ. 70 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Here is list top 20 electric cars that expected coming 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X