Just In
- just now
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- 14 min ago
"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா
- 53 min ago
காரை அழகாக்கிய ஒரே காரணத்திற்காக அபராதம் விதித்த நீதிமன்றம்... எவ்வளவுனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க?
- 2 hrs ago
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
Don't Miss!
- News
சதமடித்த தக்காளி விலை...இல்லத்தரசிகள் கவலை - பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு
- Sports
ஐபிஎல் இறுதிப் போட்டி - ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
- Movies
Nenjuku Needhi Review: ஆர்ட்டிக்கள் 15 படத்திற்கு நீதி செய்ததா நெஞ்சுக்கு நீதி? விமர்சனம் இதோ!
- Lifestyle
ஆரோக்கியமான இதயம் மற்றும் குடல் இயக்கத்திற்கு இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடுங்க போதும்...!
- Finance
ஊபரில் இனி ‘நோ கேன்சலேஷன்', ஆனால் கட்டணம் உயரும்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உற்பத்தி என்னமோ இந்தியாலதான் நடக்குது, ஆனா விற்பனைக்கு மட்டும் கிடைக்காது! சூப்பரான மேட்-இன் இந்தியா கார்கள்!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நம் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்காத முக்கியமான ஐந்து கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா, மாருதி சுஸுகி, டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் நம் நாட்டிற்காக மட்டுமில்லாமல், உலக நாடுகள் சிலவற்றிற்கான வாகனங்களையும் நம் நாட்டில் வைத்தே உற்பத்தி செய்து வருகின்றன. சுவாரஷ்யமாக இந்நிறுவனங்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே கார்களை தயாரித்து வருகின்றன.

அவற்றில் சிலவற்றிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆனால், அவற்றை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையையும் நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை. அப்படி என்ன மாடல்களை எல்லாம் மேலே பார்த்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்காக ஏற்றுமதி செய்து வருகின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் காணலாம், வாங்க.

மஹிந்திரா ஸ்கார்பியோ கேட்வே (Mahindra Scorpio Getaway)
இந்தியாவை தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் மஹிந்திரா, ஸ்கார்பியோ கார் அடிப்படையிலான பிக்-அப் டிரக் ரக காரை உலக சந்தை சிலவற்றில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அது, கேட்வே எனும் பெயரில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த காரை நிறுவனம் இந்தியாவிலும் விற்பனைக்கு வழங்கியது. ஆனால், போதுமான அளவில் அதற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை.

ஆகையால், 2007 - 2018 ஆம் ஆண்டு வரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த இக்காரை நிறுவனம் வர்த்தக பட்டியலில் இருந்து அகற்றியது. இந்தியாவில்தான் இந்த வாகனத்திற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. தெற்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

அதேவேலையில், தற்போது சந்தையில் பிக்-அப் டிரக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு, டொயோட்டா ஹைலக்ஸ் மற்றும இசுஸு பிக்-அப் டிரக்குகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பே மிக சிறந்த உதாரணம்.

மஹிந்திரா ரோக்ஸர் (Mahindra Roxor)
மஹிந்திரா நிறுவனம் மற்றுமொரு காரையும் வெளிநாட்டு சந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. ரோக்ஸர் மாடலே அதுவாகும். இது தார் காரின் முந்தைய வெர்ஷனாக பார்க்கப்படுகின்றது. வட அமெரிக்கா போன்ற முக்கியமான சந்தைகளுக்காக இக்கார் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த கார் மீது பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வாகன உலகில் பரவிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரபல அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான ஜீப், அது தயாரித்து வரும் முக்கியமான கார் மாடலின் காப்பி வெர்ஷன் என குறிப்பிட்டது.

சுஸுகி ஜிம்னி (Suzuki Jimny)
மாருதி சுஸுகியின் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு நாட்டில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. அதேநேரத்தில் நிறுவனம் வெளிநாடுகள் சிலற்றில் பிரத்யேகமாக விற்பனைச் செய்து வரும் தயாரிப்புகளுக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்தவகையில், மக்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் ஈர்த்து வரும் சுஸுகி தயாரிப்பாக ஜிம்னி இருக்கின்றது.

இக்காருக்கு வெளிநாடுகளில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. குறிப்பாக, ஆஃப்-ரோடு பயண பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனமாக அது காட்சியளிக்கின்றது. இக்காரை மாருதி சுஸுகி விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்கள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், நிறுவனம் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

டொயோட்டா ருமியன் (Toyota Rumion)
மாருதி சுஸுகி எர்டிகாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனே ருமியன். இந்த கார் மாடலை பிரத்யேகமாக தென் ஆப்பிரிக்கா சந்தைக்காக நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகின்றது. நிறுவனம் இந்தியாவிலும் சில மாருதி கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

பலினோ கார் மாடலை கிளான்ஸா எனும் பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸாவை அர்பன் க்ரூஸ் என்கிற பெயரிலும் அது ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றிற்கு தற்போது நல்ல டிமாண்ட் நாட்டில் நிலவி வருகின்றது. ஆகையால், நிறுவனத்தின் மற்றுமொரு ரீபேட்ஜ் மாடலான ருமியனும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறுவனத்தின் பிரபல கார் மாடலான இன்னோவா க்ரிஸ்டாவிற்கு கீழ்நிலையில் அமர்த்தப்படும்.

டொயோட்டா பெல்டா (Toyota Belta)
டொயோட்டா பெல்டா இதுவும் நிறுவனத்தின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகும். மாருதியின் சியாஸ் கார் மாடலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இதையே நிறுவனம் பெல்டா எனும் பெயரில் ரீபேட்ஜ் மற்றும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களைச் செய்து உலக சந்தை சிலவற்றில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனை நிறுவனம் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
-
வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!
-
ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?
-
காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம்... லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு...