அட போங்க இந்த இன்னோவா ஹைகிராஸ் எல்லாத்துலயுமே பெஸ்டா இருக்கு... இதுக்காகவே இந்த செல்லத்த வாங்கலாம் போலிருக்கு!

டொயோட்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி ரக காரை என்னென்ன காரணங்களுக்காக வாங்கலாம் என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, என்னென் விஷயங்களுக்கு இந்த கார் மிக சிறந்ததாக இருக்கின்றது என்பதையே இந்த பதிவில் விளக்கி உள்ளோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிலைக் காணலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் லேட்டஸ்ட் வருகையாக இன்னோவா ஹைகிராஸ் இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் கொண்ட வாகனமாக இதனை நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக நவீன தொழில்நுட்ப வசதி, மிக தாராளமான இட வசதி மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்டவை புதிய ஹைிகிராஸின் சிறப்புகள் ஆகும். இத்தகைய வாகனமாகவே இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

இதன் வருகை எந்த வகையிலும் இன்னோவா க்ரிஸ்டாவிற்கு பாதிப்பை விளைவிக்காது என நிறுவனம் தெரிவித்திருந்தது. அதாவது, இன்னோவா க்ரிஸ்டா உடன் இணைந்து இன்னோவா ஹைகிராஸும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் வாங்கலாம் என்பது பற்றிய விரிவான விபரத்தையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இன்னோவா ஹைகிராஸ் காரில் காரில் மறைந்திருக்கும் நல்ல விஷயங்கள்:

டொயோட்டா நிறுவனம் இந்த காரை டிஎன்ஜிஏ பிளாட்பாரத்தில் வைத்தே கட்டமைத்திருக்கின்றது. இந்த தளம் நவீன கால சிறப்பு வசதிகளுக்கு பெயர்போனதாக இருக்கின்றது. டூயல் இன்டிகேட்டர், வென்டிலேட் இருக்கை, பவர்டு பின் பக்க கதவு, பின் பக்கத்திற்கான சன்ஷேட், மல்டி - ஸோன் ஏசி, எலெக்ட்ரோ குரோமிக் ஐஆர்விஎம் மற்றும் ஓட்டோமேன் இருக்கைகள் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் சிஸ்டம் போன்ற சிறப்பு நவீன வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றுடனேயே ஹைபிரிட் பெட்ரோல் மோட்டார், இ-டிரைவ் டிரான்ஸ்மிஷன் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது.

எந்த வேரியண்டை வாங்கலாம்?

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலின் டாப் ஸ்பெக் மாடலிலேயே மிக அதிக வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது. ஆகையால், அதை வாங்கலாம் என்பது எங்களின் அறிவுறுத்தலாக இருக்கின்றது. இந்த வேரியண்டிலேயே செல்ஃப் சார்ஜ் வசதிக் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது. இது பெட்ரோல் செலவைக் குறைத்து, மைலேஜை அதிகரித்து வழங்க உதவும். இதுமட்டுமின்றி, ஏராளமான பிரீமியம் அம்சங்களும் இந்த வேரியண்டுகளிலேயே இடம் பெற்றிருக்கின்றது.

எஞ்ஜின் மற்றும் மைலேஜ் விபரங்கள்:

டொயோட்டா நிறுவனம் இரு விதமான பவர்டிரெயின் தேர்வுகளில் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. 2.0 பெட்ரோல் மோட்டார் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் உடன் ஓர் தேர்வும், மற்றொன்றில் 2.0 லிட்டர் பெட்ரோல் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதில், பெட்ரோல் மோட்டாரை மட்டுமே கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 16 கிமீ வரையிலும், ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கு 23 கிமீ வரையிலும் மைலேஜ் தரும். இந்த உச்சபட்ச மைலேஜ் திறனுக்காகவே இந்த காரை வாங்கலாம். இப்போது உயர்ந்துக் காணப்படும் பெட்ரோல் விலையில் இருந்து இது நம்மைக் காக்க உதவும்.

வாரண்டி பற்றிய விபரம்:

டொயோட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக 3 ஆண்டுகள் / 1 லட்சம் கிலோமீட்டர்கள் வாரண்டியை அறிவித்துள்ளது. இத்துடன், நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தையும் வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், 5 ஆண்டுகள் / 2 லட்சத்து 20 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தை வழங்க இருப்பதாக அது கூறியுள்ளது. இந்த திட்டத்துடன் 3 ஆண்டுகள் இலவச ரோடு சைடு அசிஸ்டன்ஸ் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மிக நீண்ட வாரண்டி திட்டமாக 8 ஆண்டுகளுக்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் இந்த கார்களை தாராளமாக வாங்கலாம் என்பதே அறிவுறுத்தலாக இருக்கின்றது. பிளஸ்களைப் போலவே சில மைனஸும் இந்த காரில் இருக்கின்றது. குறிப்பாக டாப் ஸ்பெக் மாடலின் கடைசி வரிசை இருக்கையான மூன்றாவது வரிசை இருக்கையை அணுகுவது சற்று கடினமாக இருக்கின்றது. இதைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இந்த கார் மிக சிறப்பானதாகவே காட்சியளிக்கின்றது.

நிற தேர்வுகள்:

டொயோட்டா நிறுவனம் இந்த புதிய இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அவை, சூப்பர் ஒயிட், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், சில்வர் மெட்டாலிக், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்கிளிங் பிளாக் பியர் கிரிஸ்டல் ஷைன், அவன்ட் கிரேட் ப்ரோன்ஸே மெட்டாலிக் மற்றும் பிளாக்கிஷ் ஏஜ்ஹா கிளாஸ் ஃப்ளேக் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி, காரின் உட்பகுதிக்கும் சில நிற தேர்வுகளை டொயோட்டா அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Here is why you can buy innova hycross
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X