நயன்-விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித்...

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நடிகர் அஜித்தின் குடும்பம் வருகை தந்த கார் வித்தியாசமான காராக பலரைக் கவர்ந்தது. இது என்ன கார்? எவ்வளவு விலை? இதன் வரலாறு என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க இருவருக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

திருமண நிகழ்விற்கு ஒரு பிரபலங்களில் பட்டாளமே வந்த நிலையில் விருந்தினர்களுக்காக கார் பார்க்கிங் முழுவதும் ஏகப்பட்ட சொகுசு கார்களால் நிறைந்திருந்தது. ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, பென்ஸ், என பெரும் கூட்டம் இருந்தது. பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் தங்களது விலையுயர்ந்த காரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரஜினி காந்த் பிஎம்டபிள்யூ காரிலும், நடிகர் விஜய், ஷாருக்கான், ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் காரிலும், வந்திறங்கினர்.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இதில் சற்று வித்தியாசமான வாகனத்தில் வந்தது நடிகர் அஜித்தின் குடும்பம் தான். நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆகியோர் காரில் வராமல் ஒரு வேனில் வந்திறங்கினர். வழக்கமாகப் பெரிய நடிகர்கள் எல்லாம் விலையுயர்ந்த காரில் வந்திறங்கிய நிலையில் இவர்கள் வேனில் வந்தது சற்று கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த வேனில் நடிகர் அஜித் வரவில்லை. அவர் எப்படி விழாவிற்கு வந்தார் எனத் தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் வந்த வாகனம் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர். இதுவித்தியாசமாக இருந்ததால் பலர் இந்த வாகனத்தைத் தேடினர். இந்த வாகனத்தைப் பற்றி முழு தகவல் மற்றும் வரலாற்றைத் தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அஜித்தின் மனைவி மற்றும் மகள் வந்த வேன் டொயோட்டா நிறுவனத்தின் ஹைஏஸ் வேனாகும். இந்த வேன் இந்தியாவில் அதன் 5வது தலைமுறை மட்டுமே விற்பனையில் உள்ளது. ஆனால் நடிகர் அஜித் குடும்பம் வந்தது அதன் 6வது தலைமுறை வாகனம் ஆகும். இந்த வாகனம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. நடிகர் அஜித்தை இந்த வேனை நேரடியாக இறக்குமதி செய்திருக்கக்கூடும்.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இந்த வேனை டொயோட்டா நிறுவனம் பலவிதமாகப் பயன் தரும் வாகனமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இந்த வாகனம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்வது, சினிமா நடிகர், நடிகைகள் கேரவேனாக பயன்படுத்துவதற்கு, பெரும் நிறுவனங்களின் விளம்பர பயன்பாடு உள்ளிட்ட பல விதமாக இந்த காரை பயன்படுத்த முடியும். இதில் சீட்டிங்கை பொருத்தவரை 10 முதல் 18 வரை வரை சீட்டிங் அமைக்கும் வசதி இருக்கிறது. இந்த வாகனத்தை லைட் கமர்ஷியல் வாகனமாக டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்கிறது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இந்த ஹைஏஸ் வேனை பொருத்தவரை டொயோட்டா நிறுவனம் கடந்த 1967ம் ஆண்டு முதலே விற்பனை செய்து வருகிறது. இந்த வேனை முதன் முறையாக ஜப்பான் நாட்டில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது இதை கமர்ஷியல் வாகனமாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொருட்களை எடுத்து செல்லம் திரும்பக் கொண்டுவரவும் இந் வாகனத்தை வெளியிட்டது. மேலும் ஆட்களையும் ஏற்றிச்செல்லும் வசதியும் இருக்கிறது. 8 பேர் வரை இந்த வாகனத்தில் பயணிக்க முடியும்.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

அடுத்தாக இதன் இரண்டாவது தலைமுறை காரை 1977ம் ஆண்டு இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த காரில் சில மாற்றங்களைச் செய்து காரில் 15 பேர் வரை பயணிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜன் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டன. மேலும் காரின் பயன்பாட்டிற்கு ஏற்ப காருக்கு சிரீஸ் எண்கள் வழங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. லோடு வாகனம், பயணிகள் வாகனம், கமர்ஷியல் வாகனம் என இது மூன்றாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

மூன்றாவது தலைமுறை கார் கடந்த 1982ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தலைமுறை காரில் முகப்பு பகுதி மாற்றியமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. இதில் வாகனத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. இந்த தலைமுறை வாகனம் தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இந்த தலைமுறை முதல் இந்த கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. இரண்டாவது தலைமுறையை விடச் சற்று பெரிய காராக இது உருவாக்கப்பட்டது. இந்த தலைமுறையில் டாக்ஸி பயன்பாட்டிற்கு எனப் பிரத்யேக டிசைனை இந்நிறுவனம் உருவாக்கியது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

அடுத்தாக 4வது தலைமுறை கார். இதை பொருத்தவரை மிகப்பெரிய வீல் பேஸ், மற்றும் சிறிய வீல் பேஸ் என இரண்டுவேரியன்ட்கள் கொண்டு வரப்பட்டன. முக்கியமாக இந்த தலைமுறையில் காரின் உட்புற வசதிகள் மேற்படுத்தப்ட்டன. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 3.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த கார் வெளியிடப்பட்டது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

மேலும் இந்த காரின் சில வேரியன்ட்களில் ரியர் வீல் டிரைவ் சில வேரியன்ட்களில் 4 வீல் டிரைவ் தொழிற்நுட்பங்களும் பொருத்தப்பட்டன. இந்த கார் தான் மிகப்பெரிய ஹிட் அடித்து பல்வேறு நாடுகளுக்கு இந்த கார் செல்ல முக்கியமான காரணமாக இருந்தது. அதன் பின்பு இதே தலைமுறையில் பல அப்பேட் செய்யப்பட்ட மாடல்கள் கொண்டு வரப்பட்டன.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

பின்னர் 2004ம் ஆண்டு தான் இந்த காரின் 5வது தலைமுறை கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் பல தொழிற்நுட்ப வசதிகள் பொருத்தப்பட்டது. மேலும் மிக முக்கியமான மாற்றமாக இன்ஜின் மொத்தமாக மாறியது. காரின் வெளிப்புற லுக்கிலும் காரிலிருந்து வேன் தோற்றத்திற்கு இது மாற்றியமைக்கப்பட்டது. இந்த கார் அடுத்தடுத்து சில பல அப்டேட்களை பெற்றுவிட்டது. இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாட்டில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காரைஇந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த கார் ரூ55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

கடைசியாக இந்தகார் கடந்த 2019ம் ஆண்டு ஆறாவது தலைமுறையை கண்டது. 2019 பிப்ரவதி 18ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் இதன் 6வது தலைமுறை கார் அறிமுகமானது. இந்த தலைமுறை காரில் முகப்புபகுதி மாற்றியமைக்கப்பட்டது. இந்த காற் தற்போது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, தாய்லாந்து, ஆகிய நாடுகளில் விற்பனையாகிறது. இந்த காரில் தான் நடிகர் அஜித்தின் குடும்பம் நயன்தாரா திருமணத்திற்கு வந்திறங்கியது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இந்த கார் பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளது. காரில் 7 ஏர் பேக் வசதி இருக்கிறது. பெட்ரோலுக்கு 2.7 லிட்டர் மற்றும் 3.5 லி ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. டீசல் இன்ஜினை பொறுத்தவரை 2.8 லிட்டர் இன்ஜின பொருத்தப்பட்டுள்ளது.

நயன் - விக்கி திருமணத்தில் வித்தியாசமான காரில் வந்திறங்கிய ஷாலினி... இந்தியாவில் இப்படி ஒரு காரா என பலரை திரும்பி பார்க்க வைத்த அஜித் . . .

இந்த காரில் கிரான் ஏஸ், கிரான் வயா, மெஜஸ்டி, ஹைஏஸ் சூப்பர் கிராண்ட், ஹைஏஸ் விஐபி, க்வான்டம் விஎக் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகிறது. இந்த வேரியன்ட் இந்தியாவில் கிடைக்காது. வேண்டும் என்பவர்கள் வெளிநாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். அதனால் இதை சரியான விலையை கணக்கிட முடியாது. இது கஸ்டமைஷேன் பொருத்து விலை மாறுபடும்.

Most Read Articles
English summary
History of Toyata hiAce van actor ajith Using this for family
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X