லாரியே வந்து மோதினாலும் சும்மா கல்லு மாதிரி நிக்கும்! கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய ஹோண்டா சிவிக்

ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் இ:எச்இவி ஹைபிரிட் கார் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஹோண்டா நிறுவனம் சர்வதேச அளவில் தனது 11வது தலைமுறை சிவிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த டெஸ்டில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

லாரியே வந்து மோதினாலும் சும்மா கல்லு மாதிரி நிக்கும்... கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய ஹோண்டா சிவிக் கார்

இந்த டெஸ்டில் இந்த கார் முன்பக்கம் மோதினால் பெரியவர்களுக்கு ஏற்படும் இம்பேக்டில் மொத்தம் 16 புள்ளிகளுக்கு 13.6 புள்ளிகளையும் லேட்ரல் இம்பேக்டில் மொத்தமாக 16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த கிராஷ் டெஸ்டில் முன்பக்க பயணிகள் இருக்கை பாதுகாப்பாக இருந்துள்ளது. டிரைவரின் இருக்கையில் நெஞ்சு பகுதி மட்டும் வீக்காக இருந்துள்ளது. ஆனால் கால் முட்டி மற்றும் தொடைப் பகுதிகள் பாதுகாப்பாக இருந்துள்ளது.

இந்த கிராஷ் டெஸ்டில் சர்வதேச சிவிக் மாடல் கார்பயன்படுத்தப்பட்டது. இதில் மொத்தம் கால் முட்டி உட்பட 11 ஏர் பேக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் முன்பக்க பயணிகள் பாதுகாப்பாக இருப்பார்கள். பின் சீட்டில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பாக சைடு ஏற்பேக்குகள் உள்ளன.இது சர்வதேச மாடல் தான். இந்திய மாடல் காரில் மொத்தமே 6 ஏர்பேக் தான் இருக்கிறது.

சர்வதேச மாடல் காரில் முதன் முறையாகப் பக்கவாட்டில் விபத்து நடக்கும் போது முன்பக்க பயணி மற்றும் டிரைவர் ஆகியோர் மோதிக்கொள்ளாமல் இருக்க முன்பக்கத்தில் சென்டர் ஏர்பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏர்பேர் பொருத்தப்பட்ட முதல் கார் இது தான். இது போக பக்கவாட்டில் நடக்கும் விபத்தின் இம்பேக்டை குறைக்க வீல் ஆர்ச் பகுதியில் ஃபிரேம்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பாதுகப்பில் இந்த கார் 16க்கு 13 புள்ளிகளை முன்பக்க விபத்து இம்பேக்டிலும், லேட்ரல் இம்பேக்டில் 16க்கு 16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதற்கு இன்டர்கிரேட்டட் ஐஎஸ்ஓ பிக்ஸ் மவுண்ட்கள் முக்கியமான காரணம். இந்த புதிய சிவிக் காரில் 100 டிகிரி கேமரா மற்றும் ஃபார்வேர்டு கோலிஷன் வார்சின் சிஸ்டம் உள்ளது.

ஹோண்டா நிறுவனத்திடம் இந்த கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற சிஆர்-வி, ஜாஸ் ஆகிய கார்கள் இருக்கும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் சிவிக் காரும் இணைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda bags 5 star rating for civic ehev in euro NCAP
Story first published: Friday, November 18, 2022, 13:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X