இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு கிடைப்பது உண்டு. இதன்படி ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கும் கடந்த காலங்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கின்றனர். ஆனால் சமீப காலமாக ஹோண்டா கார்களின் விற்பனை பெரிய அளவில் எடுப்படவில்லை.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

நம் நாட்டில் ஹோண்டா கார்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்யப்படவில்லை என்பதை இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம். இப்படிப்பட்ட நிலையில், ஹோண்டா அடுத்த 2023ஆம் வருடத்தில் புதியதாக அறிமுகம் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படும் 3 புதிய கார்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

1. புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி

சமீபத்திய ஆண்டுகளில் ஹோண்டாவின் வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக, இந்த பிராண்டில் இருந்து கவர்ச்சிக்கரமான எஸ்யூவி கார்கள் எதுவும் விற்பனையில் இல்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் இந்தியர்கள் பலர் தற்போதைக்கு புதியதாக, உயரம் அதிகம் கொண்ட கம்பீரமான எஸ்யூவி ரக கார்களை வாங்கவே விரும்புகின்றனர்.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

இதனாலேயே புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களை இந்திய சந்தையில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் டபிள்யூஆர்-வி எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இது புதிய அமேஸ் கார் உருவாக்கப்பட்ட அதே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதேநேரம் என்ஜின் தேர்வுகளை சிட்டி செடான் காரில் இருந்து பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா போன்ற பிரபலமான கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள இந்த புதிய ஹோண்டா காம்பெக்ட் எஸ்யூவி காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு பொத்தான் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

2. புதிய ஹோண்டா மிட்-சைஸ் எஸ்யூவி

பிரபலமான எஸ்யூவி கார் இல்லாததே இந்தியாவில் ஹோண்டா பிராண்ட் மங்கி வருவதற்கு முக்கிய காரணம் என கூறிவிட்டோம். இதனாலேயே அளவில் சிறிய காம்பெக்ட் எஸ்யூவி உடன் அளவில் சற்று பெரிய மிட்-சைஸ் எஸ்யூவி காரையும் 2023க்கு உள்ளாக ஹோண்டா நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

ஹோண்டா சிட்டி மாடலின் 5ஆம் தலைமுறை இந்தியாவில் வழக்கம்போல் வரவேற்பை பெற்றுள்ளதினால், அதன் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டே இந்த புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரும் உருவாக்கப்படும். ஹோண்டாவின் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரை 5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் எதிர்பார்க்கிறோம்.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

ப்ளாட்ஃபாரம் மட்டுமின்றி, என்ஜின் தேர்வுகளையும் 5ஆம் தலைமுறை சிட்டி செடான் காரில் இருந்தே இந்த புதிய ஹோண்டா கார் பெற்றுவரும் என தெரிகிறது. ஏனெனில் இதன் மூலமாக காரின் உற்பத்தி செலவை குறைக்க ஹோண்டா முயற்சிக்கும். இதன்படி 5ஆம் தலைமுறை சிட்டியில் வழங்கப்படும் ஹைப்ரிட் தொழிற்நுட்பத்துடனான 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜினை இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரில் எதிர்பார்க்கலாம்.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

3. ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்

கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பெரும் இழப்பை சமாளிக்கும் முயற்சியாக 5ஆம் தலைமுறை சிட்டி செடான் காரை ஹோண்டா நிறுவனம் 2020 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்தியாவிற்கு 5ஆம் தலைமுறை சிட்டி மாடல் விற்பனைக்கு வந்து 2 வருடங்கள் உருண்டோடிவிட்டதால், 2023இல் சில மாற்றங்களுடன் இந்த கார் அப்டேட் செய்யப்படலாம்.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

இதன்படி, தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் மற்றும் புதிய தொழிற்நுட்ப வசதிகளுடன் என்ஜினையும் அப்டேட் செய்யப்பட்டதாக தற்போதைய 5ஆம் தலைமுறை சிட்டி கார் பெறலாம். குறிப்பாக, பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் தேர்வுகளை வைத்து கொண்டு டீசல் என்ஜின் உடன் சிட்டி காரை விற்பனை செய்வதை ஹோண்டா நிறுவனம் அடுத்த ஆண்டில் இருந்து நிறுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இனி ஹோண்டா டாப் கியரில் போகும் போலயே!! 2023இல் 3 புதிய கார்கள்... ப்ளான் பக்காவா இருக்கு

ஏனெனில் தற்போது பெட்ரோல் வேரியண்ட்களையே சிட்டி மாடல் அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ளது. டீசல் வேரியண்ட்கள் வெறும் 3 மட்டுமே உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருப்பது நல்லது. இந்தியாவில் ஹோண்டா சிட்டிக்கு ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் போட்டியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda cars
English summary
Honda launching three cars in india soon
Story first published: Tuesday, November 1, 2022, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X