இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான்... டாடா,மாருதி இப்ப தலையே சுத்திருமே...

ஹோண்டா நிறுவனம் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட் சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் புதிய கார்களை உருவாக்கி வருகின்றனர். இது குறித்த தகவலைக் காணலாம் வாருங்கள்.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இந்தியாவில் இன்று அதிகமாக விற்பனையாகும் கார்கள் என்றால் அது எஸ்யூவி செக்மெண்ட் கார்கள் எனச் சின்ன குழந்தையை கேட்டாலும் சொல்லும். இந்த செக்மெண்ட் மக்களுக்கு அதிகமாகப் பிடித்துவிட மக்கள் எல்லோரும் இந்த ரக கார்களையே விரும்புகின்றனர். இதனால் செடான் ரக கார்களுக்கு பெரும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாக எஸ்யூவி கார்களையே புதிதாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

ஹூண்டாய், டாடா, கியா, மாருதி என பல நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் கார்களை விற்கப் போட்டிப் போட்டு வரும் நிலையில் இந்த செக்மெண்டில் புதிதாக கார்களை களம் இறக்க ஹோண்டா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் நொய்டாவில் செயல்பட்டு வந்த அதன் ஆலையை மூடியுள்ளது.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இதனால் ஹோண்டா சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் அமேஸ், சிட்டி, ஜாஸ் மற்றும் டபிள்யூஆர் வி ஆகிய கார்கள் மட்டுமே இருக்கிறது. இதிலும் ஜாஸ் மற்றும் டபிள்யூஆர் வி கார்களின் விற்பனை பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த கார்களும் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இந்நிலையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மற்றும் சிஇஓ டக்குயா துஷ்மோரா சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் "இந்தியாவில் எஸ்யூவி மார்கெட் அபரிவிதமாக வளர்ந்து விட்டது. மொத்தமாக விற்பனையாகும் கார்களில் 50 சதவீதம் எஸ்யூவி வகை கார்கள் தான். ஆனால் அதில் நாங்கள் இல்லை. ஆனால் விரைவில் அதில் நாங்கள் இணையப்போகிறோம். அடுத்த ஆண்டு முதல் எங்கள் எஸ்யூவி கார்கள் வெளியாகும்" எனக் கூறினார்.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

ஹோண்டா நிறுவனம் தற்போது காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் சைஸ் எஸ்யூவி ஆகிய செக்மெண்ட்களில் 2 கார்களை உருவாக்கி வருகிறது. மிட் சைஸ் எஸ்யூவி காருக்கு அந்நிறுவனம் 3US என்ற கோட் பெயரை வைத்துள்ளது. இந்த கார் கிட்டத்தட்ட ஜாஸ் காரும் டபிள்யூஆர் வி காரும் கிராஸ் ஓவர் செய்ததை போன்ற டிசைனில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த கார் இந்த கார் அமேஸ் கார் தயாராகும் அதே பிளாட்ஃபார்மில் தான் தயாராகும் எனக் கூறப்படுகிறது.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

ராஜஸ்தான் மாநிலம் டுப்புகாரா பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனட், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப் 4 மீட்டர் செக்மெண்டில் எந்த காரிலும் இல்லாத பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெரும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட் மட்டுமே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. ஹோண்டாவிடம் உள்ள டீசல் இன்ஜின் மாடல் தற்போது உள்ள எமிசன் ஸ்டாண்டை பாஸ் ஆகாது என்பதால் டீசல் கார்கள் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 1.5-லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் பொருத்தப்படுமா என்பது தெரியவில்லை பெரும்பாலும் அமேஸ் காரில் உள்ள அதே 1.2-லிட்டர் i-VTEC

பெட்ரோல் இன்ஜின் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இந்த கார் ஜாஸ் காருக்கு மாற்றாக மார்கெட்டில் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அந்த ஆண்டே விற்பனைக்கும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஒன்றையும் ஹோண்டா உருவாக்கி வருகிறது. இந்த கார் ஹோண்டா சிட்டி காருக்கு மாற்றாகக் களம் இறங்கலாம்.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இந்த மிட் சைஸ் எஸ்யூவி கார் வரும் 2024ம் ஆண்டு தான் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்பேக்ட் எஸ்யூவி காருக்கான வரவேற்பைப் பொருத்து தான் மிட்சைஸ் காரின் விற்பனை இருக்கும் என கூறலாம். மிட் சைஸ் எஸ்யூவி காரின் வடிவமைப்பு தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. இது குறித்த விரிவாகத் தகவல்கள் தற்போது இல்லை.

இவ்வளவு நாள் ஹோண்டா பதுங்கியிருந்ததே பாய்வதற்குத் தான் . . . டாடாவுக்கு மாருதிக்கு இப்ப தலையே சுத்திருமே . . .

இந்த இரண்டு கார்களும் மார்கெட்டிற்கு வந்தால் ஏற்கனவே இந்த செக்மெண்டில் கிங்காக இருக்கும் மாருதி மற்றும் டாடா நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் பிரெஸ்ஸா மற்றும் டாடாவின் நெக்ஸான் கார்களுக்கு சிறப்பாக வரவேற்பு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் இந்த வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகத் தான் தனது காம்பேக்ட் எஸ்யூவி காரை களம் இறக்கும் எனக் கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda plans to launch new SUV cars in 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X