இன்னும் 5 மாசம்தான்... அப்புறம் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் இந்த கார்களை வாங்க முடியாது!

ஹோண்டா நிறுவனம் பிஎஸ்6 கட்டுப்பாடுகள் காரணமாகத் தனது டீசல் இன்ஜின் தயாரிப்பை நிறுத்தப்போவதால் சில டீசல் இன்ஜின் கார்கள் இன்னும் சில மாதங்களில் காணாமல் போகவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்

இந்தியாவில் மாசு கட்டுப்பாட்டிற்காக பிஎஸ் என் கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்படுகிறது. அதன்படி இந்தியாவில் தற்போது பிஎஸ் 6 முதல் கட்ட விதி அமலில் உள்ளது. வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2ம் கட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகிறது.

இன்னும் 5 மாசம்தான்... அப்புறம் கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் இந்த கார்களை வாங்க முடியாது!

இந்த இரண்டாம் கட்ட விதிமுறையில் இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கான இன்ஜினில் ரியல் டைம் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதாவது இன்ஜினிலிருந்து எவ்வளவு மாசு வெளியாகிறது என்பது எப்பொழுதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாசு வெளியேறினால் உடனடியாக எச்சரிக்க வேண்டும். இந்த விதிமுறைக்கு ஹேண்டா நிறுவனத்தின் டீசல் இன்ஜின் ஒத்து வராது.

இந்நிலையில் பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுப்பாடுகள் வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது டீசல் இன்ஜின் தயாரிப்பை வரும் 2023 பிப்ரவரி மாதத்துடன் நிறுத்த முடிவு செய்துள்ளது. அந்த இன்ஜினின் வரும் கார்கள் எல்லாம் வரும் 2023 மார்ச் மாதத்திற்குப் பிறகு விற்பனை செய்யப்படாது.

ஹோண்டா நிறுவனம் தற்போது 1.5 லிட்டர் ஐ-டிஇசி டர்போ டீசல் இன்ஜினை இந்திய வாகனங்களுக்காகத் தயாரித்து வருகிறது. இது போக 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் இன்ஜினை தாய்லாந்து மார்கெட்டில் விற்பனையாகும் காரான ஹோண்டா சிஆர்-வி காருக்காக தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது டீசல் இன்ஜின் தயாரிக்கப்படும் ஆலையையே ஹோண்டா நிறுவனம் மூடப்போகிறது.

இனி ஹோண்டாவின் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின்களில் மட்டுமே கார்கள் வெளியாகும். அதே போல அடுத்த ஆண்டே ஹோண்டா நிறுவனம் புதிதாக ஒரு எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜினை கொண்டா எஸ்யூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹோண்டாநிறுவனம் தனது சிட்டி செடான் காரில் ஹைபிரிட்டை விற்பனை செய்து வருகிறது.

பிஎஸ்6 ரியல்டைம் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாட்டிற்காக ஹோண்டா நிறுவனம் மட்டும் டீசல் கார்களை நிறுத்தவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதிசுஸூகி நிறுவனமும் தனது டீசல் இன்ஜின் கார்களை நிறுத்திவிட்டு தற்போது பெட்ரோல், சிஎன்ஜி, பெட்ரோல் மைல்டு மற்றும் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் கார்களையே அதிகம் தயாரித்து வருகிறது. மாருதி நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் காரையும வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நிஸான், ரெனால்ட், ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆகி நிறுவனங்களும் தங்களது டீசல் காரை நிறுத்திவிட்டனர். தற்போது இந்திய மார்கெட்டில் ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரு நிறுவனங்கள் தான் டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இருவரும சிறிய கார்களில் டீசல்இன்ஜின் ஆப்ஷன் ஆர்டிஇ கட்டுப்பாடு வந்ததும் நீக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

டொயோட்டா நிறுவனமும் டீசல் இன்ஜின் வாகனத்தை நிறுத்த துவங்கிவிட்டது. அந்நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி காரை பொருத்தவரை பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட் இன்ஜின்கள் மட்டுமே உள்ளன. டீசல் இன்ஜின் இந்த காரில் பொருத்தப்படுவதில்லை. கம்பேக்ட் எஸ்யூவியில் வெளியான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரிலும் இதே கதை தான்.

டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தான் தொடர்ந்து டீசல் இன்ஜின் கார்களை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்கின்றனர். இந்திய மக்கள் டீசல் கார்களை அதிகம் விரும்புவதாலும், இன்ஜின் ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்குள் ஏற்றதாக இருப்பதாலும் இந்த இன்ஜினை கொண்ட கார்கள் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் ஹோண்டாவிடம்உள்ள சிட்டி, அமேஸ், டபிள்யூஆர்-வி போன்ற கார்களின் டீசல் வேரியன்ட் இன்னும் 5 மாதத்தில் நிறுத்தப்படும். இந்த கார்களை வாங்கும் எண்ணத்திலிருந்தால் இப்பவே வாங்கிடுங்க...

Most Read Articles
English summary
Honda pulling out diesel engine production For bs6 RDE Norms
Story first published: Tuesday, November 22, 2022, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X