வேகமாகச் செல்லும் காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யனும்?

வேகமாகச் செல்லும் காரில் பிரேக் ஃபெயிலியர் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் விபத்தில் சிக்காமல் தப்பிப்பது எப்படி எனக் காணலாம்

நீங்கள் காரில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்படிச் செல்லும் போது திடீரென குறுக்கே ஒரு வாகனமோ அல்லது நபரே அல்லது வேறு ஏதாவது விஷயமோ வந்தால் நாம் உடனடியாக பிரேக் பிடிப்போம். அப்படி பிரேக் பிடிக்கும்போது பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

வேகமாகச் செல்லும் காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யனும்?

பதறாதீர்கள், இன்று விற்பனையாகும் பெரும்பாலான கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பிரேக் தொழிற்நுட்பம் வெகுவாக முன்னேறிவிட்டது. இன்று ஏபிஎஸ் (Anti lock Braking System), இபிடி (electronic brake distribution) உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் பிரேக்கில் வந்துவிட்டது. பழைய வாகனம் போல திடீரென பிரேக் ஃபெயிலியர் நடக்க வாய்ப்புகள் 99 சதவீதம் இல்லை.

இருந்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இப்படியாக பிரேக் ஃபெயிலியர் நடந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. பிரேக் ஃபெயிலியர் என்பது கார் வேகமாக செல்லும் போதும் நடக்கலாம். அல்லது பம்பர் டூ பம்பர் டிராஃபிக்கில் செல்லும் போது நடக்கலாம். பொதுவாக பிரேக் ஃபெயிலியர் நடக்க பிரேக் கேலிபர் உடைவது, மாஸ்டர் சிலிண்டரில் லீக், பிரேக் ஃப்ளூயிட் வெளியேறுவது, பிரேக் பைப்லைன் உடைவது இந்த காரணங்களால் மட்டுமே பிரேக் ஃபெயிலியர் நடக்க வாய்ப்பு உள்ளது.

முதலில் பிரேக் பிடிக்கும் போது சரியாக வேலை செய்யவில்லை என நீங்கள் உணர்ந்தால் பிரேக்கை அடுத்தடுத்து தொடர்ந்து மதித்து பார்க்கலாம். ஏதாவது லூஸ் காண்டேக்ட் அல்லது தூசி அடைப்பு உள்ளிட்டவற்றால் பிரேக் பிடிக்காமல் இருக்கலாம். அதனால் தொடர்ந்து பிடிப்பது நல்லது. அப்படியும் பிடிக்கவில்லை என்றால் உடனடியாக கிளட்சை மிதித்து கியரை முதல் கியருக்கு கொண்டு வந்துவிட வேண்டும். அதன் பின் ஆக்ஸிரேட்டரை மதிக்காமல் மெதுவாக ரிலீஸ் செய்தால் கார் வேகம் தானாகக் குறைந்துவிடும்.

முதல் கியரில் மாற்றியதும் காரின் வேகம் வெகுவாக குறைந்துவிடுமே தவிர கார் நிற்காது. கார் நிற்க வேண்டும் என்றால் வேகம் குறையும் போதே காரை மெதுவாக சாலையோரம் மற்ற வாகன ஓட்டிகளுக்குத் தொந்தரவு இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் மெதுவாக ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி காரை நிறுத்த முயற்சி செய்யலாம். ஹேண்ட் பிரேக் மெக்கானிக்கல் பிரேக் தான் ஹைட்ராலிக் பிரேக் கிடையாது. இது காரின் பின் வீலில் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

காரில் நீங்கள் பிரேக் ஃபெயிலியர் என உணர்ந்ததும் காரின் ஹசார்ட்ஸ் லைட்டை ஆன் செய்து விடுங்கள் அப்பொழுது தான் சாலையில் இருக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு உங்கள் காரில் ஏதோ பிரச்சனை இருப்பது தெரியும். அதனால் அவர்கள் கவனமாக வருவார்கள். சாலையில் உங்களுக்குக் காரை ஒதுக்க வழி கிடைக்கும். இப்படிச் செய்வதால் நீங்கள் விபத்தையும் தவிர்க்க முடியும்.

இதற்கிடையில் சாலையில் வேகத்தைக் குறைக்கும் போது அருகில் ஏதாவது மண், அல்லது சகதி நிறைந்த சாலை இருந்தால் அதில் காரை இறக்கினால் அதிலும் வேகம் வேகமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. இதுவும் ஒரு சிறந்த வழி தான். கார் பிரேக் ஃபெயிலியர் ஆன பிறகு உங்கள் எண்ணம் எல்லாம் கார் விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக நிற்க வேண்டும். காரில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த நேரத்தில் காரின் உதிரிப் பாகங்கள் ஏதாவது சேதமாவதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். உயிரை விட அது ஒன்றும் பெரியதல்ல

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
How to stop your car when brake failure
Story first published: Thursday, November 24, 2022, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X