எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Car) மற்றும் ஹைபிரிட் கார்கள் (Hybrid Car) இரண்டும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இரண்டில் எது பெஸ்ட் என்பது போன்ற பல முக்கிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

நாட்டில் மிக சூப்பரமான டிமாண்டை பெற்று வரும் வாகனங்களின் பட்டியலில் நீண்ட காலமாக ஹைபிரிட் கார்கள் உள்ளன. இந்தியர்கள் மத்தியில் ஹைபிரிட் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. சிஎன்ஜி, எலெக்ட்ரிக் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மக்கள் இந்த ரக வாகனங்களுக்கு அதிகளவில் வரவேற்பை வழங்கி வருகின்றனர்.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

இந்தியாவில், ஹோண்டா சிட்டி இ:எச்இவி, டொயோட்டா கேம்ரி உட்பட இன்னும் பல கார் மாடல்கள் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த அம்சம் கொண்ட கார்கள் அதிக மைலேஜ் மற்றும் குறைவான மாசை வெளியேற்றக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

ஆகையால், பசுமை இயக்கம் மற்றும் காசை மிச்சப்படுத்துவது என இரண்டிலும் ஹைபிரிட் கார்களை பயன்படுத்துவோர்களால் பங்கு கொள்ள முடிகின்றது. இத்தகைய வசதியைக் கொண்டிருப்பதனால் மின்சார வாகனங்களுக்கு இணையானதாக ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்கள் இருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

எனவே இரண்டில் எது பெஸ்ட் என்கிற சந்தேகம் பலர் மத்தியில் தென்பட தொடங்கியிருக்கின்றது. இந்த சந்தேகத்தை போக்கும் விதமாக இரு கார்களின் நற்பண்புகளையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவிான பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

ஹைபிரிட் தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஹைபிரிட் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்ட கார்கள் ஐசிஇ எனப்படும் எரிபொருளால் (பெட்ரோல் அல்லது டீசல்) இயங்கும் மோட்டார் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் மோட்டார் என இரு வகையான மோட்டார்களையும் கொண்டிருக்கும். இதுவே இந்த கார்களின் முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

இரண்டு மோட்டார்களும் இணைந்து காருக்கான உந்துவிசையை வழங்கும். சில வாகனங்களில் மின் மோட்டார் குறைவான வேகத்தில் இயங்கக் கூடியதாகவும், எரிபொருள் மோட்டார் அதிக வேகத்தில் இயங்கக் கூடியதாகவும் வழங்கப்படுகின்றன. மைலேஜை அதிகரித்து வழங்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான வசதியுடன் அவை வருகின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

இத்துடன், மின் மோட்டாருக்கான மின்சாரத்தை வழங்குவதற்கா பிரத்யேக பேட்டரியும் ஹைபிரிட் கார்களில் வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரி ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பத்தின் வாயிலாக காரின் இயக்கத்தில் இருந்தே மின்சாரத்தை சேமித்துக் கொள்ளும். எனவே தனியாக இந்த பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய வேண்டிய என்ற அவசியம் இருக்காது. அதேநேரத்தில், தனியாக சார்ஜ் செய்யும் வசதியும் சில விலையுயர்ந்த ஹைபிரிட் கார்களில் வழங்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

ரேஞ்ஜ் திறன் சூப்பரா இருக்கும்:

ஹைபிரிட் கார்கள் மிக சிறந்த ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. எரிபொருள் மற்றும் பேட்டரி ஆகிய இரண்டாலும் அவை இயங்குவதால் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெரும்பாலான மின்சார கார்கள் 450 கி.மீட்டருக்கும் குறைவான மைலேஜ் திறனிலேயே கிடைக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

ஹைபிரிட் அல்லது எலெக்ட்ரிக் கார் எதை வேகமாக நிரப்ப முடியும்:

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் இப்போதே வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கின்றது. ஆனால், பெட்ரோல், டீசல் பங்குகள் எக்கசக்கமாக உள்ளன. எனவே ஹைபிரிட் காரில் எரிபொருளை நிரப்புவது என்பது மிக சுலபமானது. அதேநேரத்தில், சில நிமிடங்கள் செலவிலேயே எரிபொருளை நிரப்பிவிட முடியும்.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

ஆனால், மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் தேவைப்படும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால்கூட குறைந்தபட்சம் அரை மணி நேரங்களாவது தேவைப்படும். ஆகையால், மின்சார வாகனத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிக வேகத்தில் நிரப்பக் கூடியதாக ஹைபிரிட் வாகனங்கள் காட்சியளிக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

அதேநேரத்தில், ஒரு வேலை எலெக்ட்ரிக் காரில் உள்ள பேட்டரி முழுமையாக தீர்ந்துபோய் நடு ரோட்டில் நின்று விடும் என்றால், அதை ரெகவரி வாகனம் அல்லது பிற வாகனங்களைக் கொண்டு உரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். ஆனால், ஹைபிரிட் வாகனங்கள் எரிபொருளிலும் இயங்கக் கூடியவை என்பதால் ஒரு கேனில் எரிபொருளை வாங்கி வந்து, அதை காரில் ஊற்றிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர முடியும். எனவே இவற்றில் ரிஸ்க் குறைவு.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

விலை விபரம்:

ஹைபிரிட் வசதிக் கொண்ட காராக இருந்தாலும் சரி, மின்சாரத்தால் இயங்கும் காராக இருந்தாலும் சரி, இரண்டும் அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் தர அம்சங்களுடனேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், மிக சொற்பமான விலை வித்தியாசத்திலேயே இரு ரக கார்களும் நாட்டில் விற்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

பயன்பாடு:

என்னதான் அனைத்து விஷயத்திலும் ஹைபிரிட் கார் உங்களுக்கு பெஸ்டானதாக தென்பட்டாலும், மின்சார கார்களை இயக்க மிக குறைவான செலவே ஏற்படுகின்றது. அதாவது, ஓர் ஹைபிரிட் காரின் எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்ப செலவாவதைக் காட்டிலும் பல மடங்கு குறைவான செலவே எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆகும். இதுமட்டுமின்றி, முழுக்க முழுக்க பசுமை இயக்கத்தை ஆதரிக்கும் வாகனமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தென்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார் vs ஹைபிரிட் கார்... எது பெஸ்ட்?.. மிக தெளிவாக விளக்கும் பதிவு!

இதுவே எதிர்காலத்திற்கு தேவையான மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. இருப்பினும், அவசர நிலை நம்மை ஹைபிரிட் கார்களின் பக்கம் ஈர்க்கின்றன. ஆகையால், பலர் தற்போது ஹைபிரிட் கார்களை ஆதரிக்கின்றனர். இதன் விளைவாக வாகன உற்பத்தியாளர்கள் அதிகளவில் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களை விற்பனைகுக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலே பார்க்கப்பட்டவையே இரு ரக கார்களுக்கும் இடையில் தென்படும் வித்தியாசங்களாக இருக்கின்றன. இதை வைத்து நீங்கள் ஹைபிரிட் அல்லது மின்சார கார் எது வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Hybrid cars vs electric cars which one is better alternative here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X