பெட்ரோல் வாகனங்களுக்கு கும்பிடுபோட வேண்டிய நேரம் வந்தாச்சு... இந்தியாவிலேயே ஹைட்ரஜன் கார்களை தயாரிக்க போறாங்க!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஹைட்ரஜன் வாகன உற்பத்தியில் ஓர் மாநிலம் இறங்க இருக்கின்றது. இதற்கான பேச்சுவார்த்தை வெற்றி கரமாக நிறைவுற்றிருப்பதாகவும், விரைவில் ஹைட்ரஜன் வாகன உற்பத்தி மாநிலத்தில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எலெக்ட்ரிக் வாகனங்களையே மிஞ்சக் கூடிய வசதிக் கொண்டவையாக ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய வாகனங்கள் இருக்கின்றன. இவையும் மின்சாரத்தாலேயே இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இதைக் காட்டிலும் மிக சூப்பரான வாகனமாக ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் கருதப்படுகின்றன. இத்தகைய வாகனங்களையே இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியில் ஓர் மாநில அரசு களமிறங்கியிருக்கின்றது. இதன் விளைவாக தற்போது மின்சார வாகனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போல விரைவில் ஹைட்ரஜன் மின்சார வாகனங்களின் ஆதிக்கமும் நாட்டில் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஹைட்ரஜன்

மஹாராஷ்டிரா மாநிலமே இந்த சூப்பரான முயற்சியில் களமிறங்கி உள்ளது. அண்மையில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ட்ரைடன் உடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனமே இந்த ட்ரைடன் ஆகும். இதன் உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தை மிக சுமூக முடிவடைந்திருப்பதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்த பேச்சுவார்த்தை மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அவரது வர்ஷா இல்லத்தில் நடைபெற்றது. இதில், மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹிமான்ஷி படேல் மற்றும் ட்ரைடன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவரும் பங்கேற்றனர். இவர்களுடன் இந்த பேச்சு வார்த்தையில் அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த்-ம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 2023 ஜனவரியில் டாவோஸில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகையால், விரைவிலேயே மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுத் தொடங்கப்படும் எனில் நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜன் வாகனத்தை தயாரிக்கும் மாநிலம் என்ற பெறுமையை மஹாராஷ்டிரா அடையும். சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஹைட்ரஜன் வாகன உற்பத்திக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளும் ட்ரைடன் நிறுவனத்திற்கு வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

ட்ரைடன் நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் மட்டுமின்றி ஹைட்ரஜன் வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் மஹாராஷ்டிரா அரசு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே கூறியதை போல் மின்சார வாகனங்களைக் காட்டிலும் மிக சிறந்த வாகனமாக ஹைட்ரஜன் வாகனங்கள் காட்சியளிக்கின்றன. ஹைட்ரஜன் மின்சாரமாக மாற்றப்பட்டு அதன் வாயிலாகவே ஹைட்ரஜன் வாகனங்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த செயலினால் துளியளவும் காற்று மாசு ஆகாது. கார்பனுக்கு பதிலாக நீராவியே ஹைட்ரஜன் மின்சாரமாக மாறும்போது வெளியாகும். எனவே சுற்றுச் சூழலுக்கு எந்த விதத்திலும் இந்த வாகனம் தீங்கு விளைவிக்காது. இதன் விளைவாகவே சில உலக நாடுகள் இந்த ரக வாகனத்தையும் ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. அந்த நாடுகளில் ஒன்றாக விரைவில் இந்தியாவும் மாறு என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, இந்தியாவில் மின்சார வாகனங்கள், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இவற்றின் வரிசையில் ஹைட்ரஜன் வாகனங்களும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹைட்ரஜன் ரக கார்களில் ஹைட்ரஜனை சேமித்து வைப்பதற்கு என தனி சிலிண்டர்கள் வழங்கப்படும். அதாவது, சிஎன்ஜி கார்களில் இருப்பதைப் போலவே இந்த வாகனங்களிலும் தனியாக ஹைட்ரஜன் சேமிப்பு சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த சிலிண்டர்களை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் வழக்கமான மின்சார வாகனங்களில் பயணிப்பதைக் காட்டிலும் பல நூறு கிமீ தூரம் கூடுதலாகவே பயணிக்க முடியும்.

மேலும், இதனை நிரப்ப அதிக நேரம் தேவைப்படாது. பெட்ரோல், சிஎன்ஜி வாகனங்களை நிரப்புவதுபோல் விரைவிலேயே ஹைட்ரஜனை நிரப்பிக் கொள்ள முடியும். அதேவேளையில், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மின்சார வாகனங்களை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் முதல் 8 மணி நேரங்கள் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த அவல நிலையில் இருந்து ஹைட்ரஜன் வாகனங்கள் விடுதலை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles

English summary
Hydrogen car in maharashtra
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X