ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் காரின் டீசர் படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த என் லைன் கார் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அதன் கூடுதல்-ஸ்டைலிஷான கார்களை என்-லைன் முத்திரையின் கீழ் வழங்கி வருகிறது. சர்வதேச சந்தைகளில் இந்த நிறுவனத்தின் ஐ10, ஐ20, ஐ30, எலண்ட்ரா, சொனாட்டா, கோனா மற்றும் டக்ஸன் கார்களின் என் லைன் வேரியண்ட்கள் விற்பனையில் உள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்தியாவை பொறுத்தவரையில், ஐ20 என்-லைன் கார் மட்டுமே விற்பனையில் உள்ளது. உலகளவில் விரைவில் வென்யூ என்-லைன் காரும் கொண்டுவரப்பட உள்ளது. இதனை தொடர்ந்தோ அல்லது இதற்கு முன்பாகவோ வென்யூ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும். இந்தியாவிலும் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த ஜூன் மாதத்தில் வெளியீடு செய்யப்பட உள்ளதாக கூறி வருகிறோம்.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

ஆனால் க்ரெட்டா என் லைன் மாடலானது ஹூண்டாய் நிறுவனமே இன்னும் முழுமையாக இறுதிசெய்யாத மாடலாகவே இருக்க வேண்டும். இருப்பினும் ஹூண்டாய் பிரேசில் நிறுவனம் க்ரெட்டா என்-லைன் காரின் புதிய டீசர் படத்தினை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் பிரேசில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் படத்தில் என்-லைன் முத்திரை மட்டுமே நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

மற்றப்படி இது க்ரெட்டாவின் என்-லைன் வேரியண்ட் என்பது அங்கிருந்துவரும் செய்திகள் கூறியே நமக்கு தெரியவருகிறது. ஆதலால் க்ரெட்டா என்-லைனை பற்றிய விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. தோற்றத்தை பொறுத்தவரையில், மற்ற என்-லைன் கார்களை போன்று க்ரெட்டா என்-லைன் மாடலும் அதன் ஸ்டாண்டர்ட் வெர்சனையே பெரிதும் ஒத்து காணப்படும்.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

இவ்வாறான என்-லைன் கார்கள் உலகளவில் ஹூண்டாயின் இரு மேம்பாட்டு மையங்களின் பிரதிப்பலிப்பாக பார்க்கப்படுகிறது. இதில் ஒரு மையம் தென்கொரியாவில் நம்யங் பகுதியிலும், மற்றொன்று ஜெர்மனியில் நர்பர்க்ரிங் பகுதியிலும் உள்ளன. இவற்றின் மூலம் வடிவமைக்கப்படும் புதிய க்ரெட்டா என்-லைனின் முன்பக்கத்தில் என்-லைன் பேட்ஜ் உடன் கட்டக்கட்டமான ஸ்டைலிலான முன் க்ரில், முன் பம்பர் & பக்கவாட்டில் சிவப்பு நிற ஹைலைட்களை எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

அதேபோல் பிரேக் காலிபர்கள் காரில் இருந்து தனித்து தெரியும் வகையில் சிவப்பு நிறத்தில் வழங்கப்படலாம். இவ்வளவு ஏன் புதிய க்ரெட்டா என்-லைன் காருக்கு அலாய் சக்கரங்களும் புதியவைகளாக கொடுக்கப்படலாம். இவற்றிற்கு இணையாக, உட்புற கேபினிலும் டேஸ்போர்டு & இருக்கைகளில் சிவப்பு நிற தொடுதல்கள் வழங்கப்படும். இந்த கருப்பு-சிவப்பு நிற கலவையானது உலகளவில் பிரபலமானதாக விளங்குகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

இதனாலேயே இந்த நிறக்கலவையை தனது என்-லைன் கார்களில் ஹூண்டாய் நிறுவனம் தைரியமாக பயன்படுத்தி வருகிறது. உட்புறத்தில் என்-லைன் முத்திரைகள் காரின் இருக்கைகள், கியர் க்னாப் & ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்படலாம். ஆனால் உண்மையில் என்-லைன் கார்கள் அதிகப்படியான காஸ்மெட்டிக் மேம்பாடுகளை கொண்டவைகளாக விளங்குகின்றன. இது க்ரெட்டா என்-லைனிலும் தொடரப்படும்.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்திய சந்தையில் தற்சமயம் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என 3 விதமான என்ஜின் தேர்வுகளில் க்ரெட்டா விற்பனை செய்யப்படுகிறது. இவை அப்படியே புதிய என்-லைன் மாடலுக்கும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & ஐவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

அதுவே டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் ஒரேயொரு 7-ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. வென்யூவை போன்று க்ரெட்டாவும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெறவுள்ளது. ஆனால் க்ரெட்டா என்-லைன் ஆனது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலாகவே இருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?

அதாவது இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை க்ரெட்டாவின் அடிப்படையிலானதாகவே புதிய க்ரெட்டா என்-லைன் வேரியண்ட் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது தற்சமயம் இந்தொனிஷிய மார்க்கெட்டில் மட்டுமே விற்பனையில் உள்ளது. இந்தியாவில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் நடப்பு 2022இன் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai creta n line officially teased india launch likely
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X