நாடே காத்து கிடக்கும் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடங்குகிறது... விலையை குறைக்க ஹூண்டாய் மாஸ்டர் பிளான்!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) மவுசு அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் டாடா (Tata), எம்ஜி மோட்டார் (MG Motor) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற பல்வேறு நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன.

இதில், ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரையில் கோனா என்ற ஒரே ஒரு எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) காரை மட்டுமே விற்பனை செய்து கொண்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து அடுத்து வரவுள்ள எலெக்ட்ரிக் கார் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும்.

நாடே காத்து கிடக்கும் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடங்குகிறது... விலையை குறைக்க ஹூண்டாய் மாஸ்டர் பிளான்!

இந்த எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் காணப்படுகிறது. இப்படி ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு வெகு விரைவில் முன்பதிவு தொடங்கப்படவுள்ளது.

வரும் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து (December 20) ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு தொடங்கப்படும் என ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2023 (Auto Expo 2023) திருவிழாவில் வைத்து ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ-ஜிஎம்பி என சுருக்கமான அழைக்கப்படும் Electric-Global Modular Platform (E-GMP) அடிப்படையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 58 kWh மற்றும் 72.6 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச ரேஞ்ச் (Range) 480 கிலோ மீட்டர்கள் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பேட்டரி ஆப்ஷன்களுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்படும்.

இதன்படி பனரோமிக் சன்ரூஃப், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றுக்கு தலா 1 திரைகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் என பல்வேறு வசதிகளை ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசைனை பொறுத்தவரையில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை இடம்பெறலாம்.

மேலும் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் மற்றும் சுறா துடுப்பு ஆன்டெனா ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகச்சிறந்த எலெக்ட்ரிக் காராக ஹூண்டாய் ஐயோனிக் 5 இருக்கலாம். இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, ஹூண்டாய் ஐயோனிக் 5 மிக முக்கியமான போட்டியாளராக இருக்கும். கியா இவி6 எலெக்ட்ரிக் காரை விட, ஹூண்டாய் ஐயோனிக் 5 மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கு சிபியூ வழியில்தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் கொண்டு வரப்பட்டுள்ளது. (Completely Built Unit என்பதன் சுருக்கம்தான் CBU. அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே வரிகள் (Tax) உள்ளிட்ட காரணங்களால், கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார், 59.95 லட்ச ரூபாய் முதல் 64.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரை போல் அல்லாமல், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவுள்ளது. எனவே கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு மிகவும் குறைவான விலையை ஹூண்டாய் நிறுவனத்தால் நிர்ணயம் செய்ய முடியும். இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Hyundai ioniq 5 electric car india official booking details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X