சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று ஹூண்டாய் கோனா (Hyundai Kona Electric SUV). இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் தற்போது சத்தமில்லாமல் அப்டேட் ஒன்றை செய்துள்ளது. இதன்படி ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் கலர் ஆப்ஷன்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

ஆனால் இதை தவிர வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதாவது மெக்கானிக்கல் அம்சங்களோ அல்லது வசதிகளின் பட்டியலோ மாற்றியமைக்கப்படவில்லை. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முதலில் 4 கலர் ஆப்ஷன்களில் கிடைத்து வந்தது. அவை போலார் ஒயிட், பாந்தம் பிளாக், டைபூன் சில்வர், பாந்தம் பிளாக் உடன் போலார் ஒயிட் ஆகும்.

சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

இதில், டைபூன் சில்வர் கலர் ஆப்ஷன் நீக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் டைபூன் சில்வர் கலர் ஆப்ஷனில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கிடைக்காது. ஆனால் அதற்கு பதிலாக 2 புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை இரண்டுமே ட்யூயல்-டோன் கலர் ஆப்ஷன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

இதன்படி ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் ஃபயரி ரெட் மற்றும் பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் டைட்டன் க்ரே ஆகிய 2 கலர் ஆப்ஷன்கள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. எனவே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இனிமேல் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை பின்வருமாறு:

சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!
  • போலார் ஒயிட்
  • பாந்தம் பிளாக்
  • பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் போலார் ஒயிட்
  • பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் ஃபயரி ரெட்
  • பாந்தம் பிளாக் மேற்கூரையுடன் டைட்டன் க்ரே
  • சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

    மற்றபடி ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், அதே 39.2kWh பேட்டரி தொகுப்புன்தான் தொடர்ந்து வழங்கப்படும். ஸ்டாண்டர்டு ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை முழுமையாக நிரம்புவதற்கு சுமார் 6 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் ஆகும்.

    சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

    அதே நேரத்தில் 100kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்தால், வெறும் 57 நிமிடங்களில் பேட்டரி பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரம்பி விடும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 452 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

    முன்பு ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS Electric SUV) கார் மட்டுமே போட்டியாக இருந்தது. ஆனால் தற்போது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக மாறியுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon Electric SUV) மிகவும் பிரபலமாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும்.

    சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

    இதுதான் தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷனை, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய மாடல், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் மட்டுமல்லாது, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடனும் நேரடியாக போட்டியிடும்.

    சத்தமே இல்லாமல் கோனா எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்த ஹூண்டாய்... டாடாவை சமாளிக்க இதெல்லாம் பத்தாது!

    போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதை தொடர்ந்து வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் போட்டிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai kona electric suv gets two new dual tone colour options
Story first published: Saturday, July 23, 2022, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X