என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க... குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார்...

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரில் என் லைன் வேரியன்ட்டை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சிறப்பாக விற்பனை செய்துவரும் கார் வென்யூ இந்த காரை அப்டேட் செய்து என்-லைன் என்ற பெயரில் புதிய காராக இன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காருக்கான புக்கிங்கை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

ஹூண்டாய் நிறுவனம் இந்த என்-லைன் காரை என்6 மற்றும் என்8 ஆகிய இரண்டு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்துகிறது. இந்த என் லைன் காருக்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் டிசைன் மோட்டார் ஸ்போர்ட் ஹெரிடேஜிலிருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

இந்த காரின் கலரை பொறுத்தவரை 3 டூயல் டோன் கலர்களும், 2 மோனோ டோன் கலர்களும் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புற டிசைனை பொருத்தவரை முன்பக்க கிரில் க்ரோம் ஃபினிஷ் உடன் என் லைன் எம்பளத்துடன் இருக்கிறது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

இதே என்-லைன்எம்பளம் பக்கவாட்டு பகுதியிலும், பின்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்போர்ட்டி ஸ்பாயிலர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட 16 இன்ச் டைமண்ட் கட் ஆலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரேக் கேலிபர்கள் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு நிறம் சேர்க்கை பம்பர், சைடு சில்ஸ், ரூஃப் ரெய்ல்ஸ், உள்ளிட்ட பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

இந்த ஹூண்டாய் என் லைன் காரில் டூயல் கேமரா செட்டப் உடன் கூடிய டேஷ்கேம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. டேஷ் போர்டின் மத்தியில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி இருக்கிறது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

மேலும் இந்த காரில் ப்ளுலிங்க் டெக் கனெக்ட்டிவிட்டி வசதி இருக்கிறது. இதன் மூலம் அலெக்ஸா, கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 60 கனெக்ட்டிங் தொழிற்நுட்பங்கள் இந்த காரில் இருக்கிறது. இதே போல தான் ஹூண்டாய் ஐ20 காரின் என்லைன் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே மெக்கானிக்கல் மாற்றம் தான் இந்த காரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

பழைய மாடலிலிருந்து இந்த காரில் சஸ்பென்சன் சற்று இறுக்கமாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. ஸ்டியரிங்கள் ஃபோர்ட்டி ஃபீட் பேக்கை கொடுக்கின்றன. எக்ஸாஸ்டும் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. பிரேக்கிங் திறனை அதிகரிக்க 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளன.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

இந்த காரில் மொத்தம் 30 பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 20க்கும் அதிகமான அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி வெஹிகில் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்ட கண்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், டூயல் ஏர் பேக்கள், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட் சென்சார்கள், டைனமிக் கைடுலைன்களுடன் கூடிய கேமராக்கள், ஹெட்லேம்ப் எக்ஸ்கார்ட் ஃபங்சன் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கிறது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் நார்மல், எக்கோ, மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவ் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக இந்த ஹூண்டாய் வென்யூ என் லைன் காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 120 பிஎஸ் பவரையும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

என்ன விலையை இவ்வளவு சீப்பா சொல்லிட்டாங்க . . . குறைந்த விலையில் அறிமுகமான ஹூண்டாய் வென்யூ என் லைன் கார் . . .

இந்த காரின் விலையைப் பொருத்தவரை என் 6 வேரியன்ட் ரூ12,16,000 என்ற விலையிலும் என் 8 வேரியன்ட் ரூ13,15,000 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கு நாம் ஏற்கனவே சொன்னது போல புக்கிங் ஏற்கனேவ துவங்கி நடந்துவருகிறது. ஹூண்டாய் சிக்னேச்சர் டீலர் ஷிப் மற்றும் ஹூண்டாய் கிளிக் ஆன்லைன் தளத்திலும் இந்த காரை ரூ21000 முன்பணம் கொடுத்து புக்கிங் செய்யலாம்.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai launches venue n line car know full details here
Story first published: Tuesday, September 6, 2022, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X