2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சில கவர்ச்சிக்கரமான சலுகைகளை அதன் குறிப்பிட்ட சில கார்களுக்கு இந்த 2022 ஜனவரி மாதத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது. அவற்றை பற்றி முழுமையான இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவிப்பது உண்டு. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று கொண்டிருப்பது பொங்கல், மஹா சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்ட சிறப்புமிக்க மாதமாகும்.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

இந்தியர்கள் பொதுவாகவே பண்டிகை காலத்தில் புது காரை புக் செய்வதையும், டெலிவிரி பெறுவதையும் விரும்பக்கூடியவர்கள். நன்னாளில் வீட்டில் புதியதொரு உறுப்பினரை சேர்க்க யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும்? இதனை சரியாக புரிந்து வைத்துள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழக்கம்போல் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் சலுகைகளை அறிவித்துள்ளது.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

இந்த சலுகைகளில் சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியோஸ், அவ்ரா மற்றும் ஐ20 உள்ளிட்ட மாடல்கள் அடங்குகின்றன. இவற்றிற்கான சலுகைகள் கடந்த ஜன.1ஆம் தேதியில் இருந்தே கொடுக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இந்த ஜனவரி மாதம் முழுக்க இந்த சலுகைகள் அமலில் இருக்கும் என ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

ஹீண்டாய் சாண்ட்ரோ ஹேட்ச்பேக் காரின் குறைவான விலையிலான ஆரம்ப நிலை ‘எரா' ட்ரிம் நிலைக்கு ரூ.10,000 பணம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு எந்தவொரு சலுகையும் இல்லை. ஆனால் அதேநேரம் மை 2021 சாண்ட்ரோ காரை வாங்குபவர்களுக்கு ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடியும், மை2022 செலிரியோ காரை வாங்குபவர்களுக்கு ரூ.15,000 வரையில் பணம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

இவை மட்டுமின்றி இந்தியாவில் தற்போதைக்கு மலிவான விலையில் கிடைக்கும் ஹேட்ச்பேக்குகளுள் ஒன்றான சாண்ட்ரோவிற்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை பொருத்தவரையில், அதன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்களுக்கு ரூ.35,000 பணம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சாண்ட்ரோவை போல் இதன் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கும் எந்தவொரு சலுகையும் கிடையாது.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

1.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்விலும் கிராண்ட் ஐ10 நியோஸ் விற்பனை செய்யப்படுகிறது. அந்த என்ஜினை கொண்ட வேரியண்ட்களுக்கு ரூ.10,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனல் வழங்கப்பட்டுள்ளது. அவ்ரா மாடலின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்கள் ரூ.35,000 பணம் தள்ளுபடியை ஏற்றுள்ளன.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

ஆனால் இதன் சிஎன்ஜி மாடல்களுக்கும் சலுகைகள் இந்த ஜனவரி மாதத்தில் இல்லை. இந்த ஜனவரி மாதத்தில் இந்த ஹூண்டாய் செடான் காரின் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.35,000 வரையில் சேமிக்கலாம். கிராண்ட் ஐ10 நியோஸை போல் இதன் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

சில வருடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் சிறப்பம்சமாக ஐஎம்டி (iMT- இண்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த காரை வாங்குவோர் ரூ.25,000 வரையில் இந்த மாதத்தில் சேமிக்கலாம். ஆனால் ஐ20-இன் டீசல் வேரியண்ட்களுக்கும், பெட்ரோல்-மேனுவல் வேரியண்ட்களுக்கும் எந்தவொரு பணம் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

ஆனால் இவை மொத்தத்திற்கும் சேர்த்து ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி ஐ20 என் காரை வாங்குவோர் இந்த ஜனவரியில் எந்தவொரு சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மட்டுமின்றி, ரூ.3,000 (மை2022 கார்கள்) & ரூ.5,000 (மை2021 கார்கள்) கார்பிரேட் போனஸையும் ஹூண்டாய் நிறுவனம் இந்த 4 கார்களுக்கு அறிவித்துள்ளது.

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

இவை தவிர்த்த, வென்யூ, வெர்னா, க்ரெட்டா, அல்கஸார், எலண்ட்ரா, டக்ஸன் மற்றும் கோனா என மற்ற ஹூண்டாய் கார்களுக்கு இந்த 2022 ஜனவரி மாதத்தில் எந்தவொரு சலுகையையும் ஹூண்டாய் நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் உள்ளது (ஆனால் கடந்த 2021 டிசம்பர் மாத விற்பனையில் டாடா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.)

2022 ஜனவரிக்கான ஹூண்டாய் மோட்டார்ஸின் சிறப்பு சலுகைகள்!! இந்த கார்களை வாங்கினால் பணம் மிச்சம்!

குறிப்பாக எஸ்யூவி கார்கள் விற்பனையில் ஹூண்டாய் தான் முதலிடம் என சொல்லலாம். இருப்பினும் தன்னுடைய இந்த நிலையை தொடர்ந்து நீட்டிக்கும் விதமாக ரூ.5 லட்சம் என்கிற குறைந்த விலையில் புதிய எஸ்யூவி காரினை கொண்டுவரும் திட்டத்தில் ஹூண்டாய் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles

English summary
Hyundai India January 2021 Offers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X