பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அதன் பெட்ரோல் & டீசல் என்ஜின்கள் மேம்பாட்டு பிரிவை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

உலகளவில் எதிர்கால போக்குவரத்து பேட்டரி மூலமாக இயங்கக்கூடிய எலக்ட்ரிக் வாகனங்களை தான் சார்ந்திருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கு ஏற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எரிபொருள் என்ஜின்களில் இருந்து எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரிக்கு மாறி வருகின்றன.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இதில் பெரும்பாலான முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கான காலக்கெடுவை தாமாக நிர்ணயித்து கொண்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஹூண்டாய், எலக்ட்ரிக் வாகனங்களில் கூடுதலாக கவனம் செலுத்த தென்கொரியா, நம்யங்க் பகுதியில் உள்ள அதன் எரிபொருள் என்ஜின்கள் மேம்பாட்டு மையத்தினை மூடுவதாக தற்போது அறிவித்துள்ளது.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இதனால் இந்த மையத்தில் இருந்து இனி எந்தவொரு எரிபொருள் என்ஜினும் புதியதாக வடிவமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது. தென்கொரியாவில் உள்ள இந்த ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு (R&D) மையமானது ஹூண்டாயின் பிரதான எரிபொருள் என்ஜின் R&D மையமாக விளங்கியது. இந்த மையத்தில் மட்டும் மொத்தம் 12,000 ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இவர்கள் அனைவருக்கும் மையம் மூடப்படுவது குறித்த அறிவிப்பினை மையத்தின் முதன்மை அதிகாரி இ-மெயில் மூலமாக தெரிவித்துள்ளார். இந்த குறுஞ்செய்தியில், 'மின்மயமாக்கலாக மாற்றுவது தவிர்க்க முடியாதது' என குறிப்பிடப்பட்டுள்ளது. 1983இல் ஹூண்டாய் நிறுவனர் மறைந்த சங்க் ஜு-யுங்க் அவர்களால் நிறுவப்பட்ட இந்த R&D மையத்தில் இருந்து முதல் என்ஜின் 1991இல் வெளிவந்தது.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

ஆல்பா என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த என்ஜினை தொடர்ந்து பெல்டா, தீட்டா மற்றும் நு என்ற பெயர்களிலான என்ஜின்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. தற்போது, கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பிறகு இந்த மையத்தில் எரிபொருள் என்ஜின்களின் மேம்பாட்டு பணிகள் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளன ஆனால் இந்த மையத்தின் கட்டமைப்பையும், இது அமைந்துள்ள பகுதியினையும் நிச்சயமாக ஹூண்டாய் நிறுவனம் பயன்படுத்தி கொள்ளாமல் விடாது.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இந்த மையமானது விரைவில் ஹூண்டாயின் மின்மயமாக்கல் மேம்பாட்டு குழுவினரால் எலக்ட்ரிக் பவர்ட்ரெயின்களை ஆராய மற்றும் கண்டுப்பிடிக்க பயன்படுத்தி கொள்ளப்பட உள்ளது. இதற்கேற்ப இந்த மையம் சற்று மாடிஃபை செய்யப்பட உள்ளது. இந்த மையத்தில் முன்பு பணியில் இருந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் மின்மயமாக்கல் வடிவமைப்பு மையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இருப்பினும் சிலர், இன்னும் சில ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கவுள்ள எரிபொருள் என்ஜின்களை மாடிஃபை செய்ய அங்கேயே தொடர்ந்து பணியாற்றவுள்ளனர். மின்மயமாக்கல் மேம்பாட்டு குழுவினருக்கு ஏதுவாக பேட்டரி மேம்பாட்டு மையம் ஒன்றையும் ஹூண்டாய் நிறுவியுள்ளது. ஏனெனில் ஒரு எலக்ட்ரிக் காரின் இயக்கத்திற்கு அதில் வழங்கப்படும் பேட்டரி தொழிற்நுட்பம் தான் மிக முக்கியமானது ஆகும்.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இந்த பேட்டரி மேம்பாட்டு மையத்தில் காரில் பொருத்தப்படும் பேட்டரியின் வடிவம், பேட்டரி செயல்படுதிறன் மேம்பாடுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல், எரிபொருள் என்ஜின்கள் கண்டுப்பிடிப்பில் இருந்து இவி பவர்ட்ரெயின் கண்டுப்பிடிப்பிற்கு மாற்றப்பட்டுள்ள இந்த தென்கொரிய R&D மையத்தில் இருந்த பவர்ரெயின் அமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் பவர்ட்ரெயின் செயல்படுதிறன் மேம்பாட்டு மையங்கள் முறையே மின்மயமாக்கல் சோதனை மையம் மற்றும் மின்மயமாக்கல் செயல்படுதிறன் மேம்பாட்டு மையமாக மாற்றப்பட்டுள்ளன.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

தென்கொரியாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தினை ஹூண்டாய் மூடியிருப்பது முதற்கட்ட பணியே. ஏனெனில் 2040ஆம் ஆண்டிற்குள் எரிபொருள் என்ஜின்களே இல்லாத முழு எலக்ட்ரிக் கார் பிராண்டாக மாற வேண்டுமென ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் டீசல் என்ஜின் தயாரிப்பு பணிகளில் இருந்து முற்றிலுமாக விலகி, பெட்ரோல், ஹைப்ரீட் மற்றும் முழு-எலக்ட்ரிக் பவர்ட்ரெயின்களில் மட்டும் முழு கவனம் செலுத்த உள்ளதாக ஹூண்டாய் அறிவித்திருந்தது.

பெட்ரோல் & டீசல் என்ஜின் ஆராய்ச்சி மையத்தை மூடும் ஹூண்டாய்!! இவி-யில் கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை!

இதில் பெட்ரோல் & ஹைப்ரீட் பவர்ட்ரெயின்களை சேர்த்திருப்பது தற்போதைக்கு தற்காலிகமானதே தவிர, ஹூண்டாயின் டார்க்கெட் மொத்தமும் எலக்ட்ரிக் வாகனங்களின் மீதே உள்ளது. இதன் மூலமாக 2026இல் இருந்து உலகளவில் வருடந்தோறும் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை 17 லட்சங்களாக கொண்டுவர வேண்டும் என சுயமாக இலக்கை இந்த தென்கொரிய நிறுவனம் நிர்ணயித்து கொண்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai shuts down petrol diesel engine development division in south korea
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X