டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க ஃபேஸ்லிஃப்ட் வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்! இதோட விலை எவ்வளவு தெரியமா?

விற்பனையில் பன் மடங்கு வளர்ச்சியைக் கண்டிருக்கும் டாடா நெக்ஸானுக்கு போட்டியளிக்க ஹூண்டாய் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

ஹூண்டாய் வென்யூ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த காரை கடந்த 2019ம் ஆண்டிலேயே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, ஹூண்டாய். இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதே வென்யூ காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

புதுப்பித்தலின் வாயிலாக பல்வேறு சிறப்பு அம்சங்களை வென்யூவில் ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் பல சூப்பரான மாற்றங்களை அது மேற்கொண்டிருக்கின்றது. இதனால், அண்மையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய ஜென் டக்சனை போல் வென்யூ-வின் முகப்பு மாறியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. புதிய பாராமெட்ரிக் ஜுவல் ரக க்ரில், புதிய தோற்றம் கொண்ட லைட்டு ஆகியவை ஃபேஸ்லிஃப்ட் வென்யூவில் வழங்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

இதேபோல் காரின் பின் பக்கத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் க்ராஸோவர் காரில் இடம் பெற்றிருப்பதைப் போன்ற பம்பர் பின் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கருப்பு நிற கிளாடிங் காரை சுற்றிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், டெயில் லைட்டுகளை இணைக்கும் வகையில் புதிய லைட் பார் ஒன்றும் வென்யூவில் வழங்கப்பட்டிருக்கின்றது.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

தேர்வுகள் மற்றும் விலை விபரம்:

இந்த மாதிரியான மாற்றங்களால் 2022 வென்யூ பல மடங்கு சூப்பரான தயாரிப்பாக மாறியிருக்கின்றது. பன்முக மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காருக்கு ரூ. 7.53 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும். இ (E), எஸ் (S), எஸ் பிளஸ்/ எஸ் (ஓ) (S+/S[O]), எஸ்எக்ஸ் (SX) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) (SX[O]) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும்.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

முழுமையான விலை விபரம்:

Venue Engine Variant Price
Kappa 1.2 MPi Petrol E 5MT ₹7,53,100
Kappa 1.0 Turbo GDi Petrol S (O) iMT ₹9,99,900
U2 1.5 CRDi Diesel S+ 6 MT ₹9,99,900
டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

நிற தேர்வுகள்:

2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஒட்டுமொத்தமாக 7 விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் ட்யூவல் டோன் ஆப்ஷனும் அடங்கும். டைஃபூன் சில்வர், டைடன் கிரே, டெனிம் ப்ளூ, பேந்தம் பிளாக், போலார் ஒயிட் மற்றும் ஃபையரி ரெட் ஆகிய ஒற்றை நிற தேர்வுகளுடன் சேர்ந்து ஃபையரி ரெட் - பேந்தம் பிளாக் ரூஃப் என்ற ட்யூவல் டோன் நிறத் தேர்வும் வென்யூவில் கிடைக்கும். இந்த காரின் கேபின் பகுதியும் இரு நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

எஞ்ஜின் தேர்வுகள்:

2022 வென்யூ மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான மோட்டார் தேர்வுகளிலேயே அது கிடைக்கும். இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

அதேநேரத்தில், இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வெர்ஷன் 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், 1.5 லிட்டர் தேர்விலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு வசதியாக வழங்கப்படும்.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

சிறப்பம்சங்கள்:

வென்யூ காரில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ரீபிளேஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது டிஜிட்டல் ரக க்ளஸ்டரே உயர்நிலை வேரியண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், 2 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக் கூடிய பின் பக்க இருக்கைகள், ப்ளூ லிங்க் தொழில்நுட்பம், 60 பிளஸ் கார் இணைப்பு அம்சங்கள், 12 மொழிகளில் சப்போர்ட், ஓவர் தி ஏர் அப்டேட்டுகள் என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

மேலே பார்த்தவை மட்டுமின்றி, கூகுள் மற்றும் அலெக்சா சப்போர்ட், வாய்ஸ் அசிஸ்டன்ட், ரிமோட் க்ளைமேட் கன்ட்ரோல் டூர் லாக் மற்றும் அன்லாக் வசதி, வெயிக்கிள் ஸ்டேட்டஸ் செக், ஃபைண்ட் மை கார், டயர் பிரஷ்ஷர் இன்ஃபர்மேஷன், ஃப்யூவல் லெவல் இன்ஃபர்மேஷன், ஸ்பீடு அலர்ட், டைம் ஃபென்சிங் உள்ளிட்டவையும் வென்யூவில் வழங்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

2022 ஹூண்டாய் வென்யூ காரின் வருகை இந்தியாவில் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் டாடா நெக்ஸான் காருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு மட்டுமின்றி, மாரதி சுஸுகி விட்டாரா ப்ரெஸ்ஸா, கியா சொனெட், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார் மாடல்களும் ஃபேஸ்லிஃப்ட் வென்யூவின் வருகை டஃப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

ஹூண்டாய் நிறுவனம் 2021ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2.5 லட்சம் யூனிட் எஸ்யூவி கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இதில் 42 சதவீதம் வென்யூ கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக ஹூண்டாய் வென்யூ இந்திய சந்தையில் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பது தெளிவாக தெரிகின்றது.

டாடா நெக்ஸானுக்கு டஃப் கொடுக்க புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை களமிறக்கியது ஹூண்டாய்... இதோட விலை எவ்வளவு?

அதேவேலையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் வென்யூ 22 சதவீத பங்கை பிடித்திருப்பதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே இதற்கு கிடைக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில் 2022 வென்யூ இந்திாயவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாடர்ன் மற்றும் இளம் தலைமுறையினர் நிச்சயம் இது கவரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai venue facelift model launched in india at inr 7 53 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X