வாடிக்கையாளர்களை ஏமாற்றிய புது டொயோட்டா இன்னோவா... இந்த விஷயத்தை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார், வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. வரும் ஜனவரி மாதம், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) எஸ்யூவி ரக காருக்கு, புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் கடும் போட்டியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் இருக்கும் ஒரு சில முக்கியமான வசதிகள், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இல்லை. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய புது டொயோட்டா இன்னோவா... இந்த விஷயத்தை யாரும் கவனிச்சிருக்க மாட்டீங்க!

மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள்

இன்றைய காலகட்டத்தில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள் ஆகியவை மிகவும் முக்கியமான வசதிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த 2 வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இந்த வசதிகள் வழங்கப்படவில்லை. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றமடைய செய்யும் ஒரு விஷயம்தான்.

பெரிய திரைகள்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் கேபின் வசதிகள் நிரம்பியதாகவும், பிரீமியமான ஒன்றாகவும் உள்ளது. இந்த காரில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

டீசலும் இல்ல... ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் இல்ல!

2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த காரின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களில் ஆப்ஷனல் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. அத்துடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் கிடையாது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், ஃப்ரண்ட் வீல் டிரைவ் கார் ஆகும்.

மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் இல்லயா!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இந்த 2 இன்ஜின்களுடனும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

ஆனால்...

இப்படி ஒரு சில விஷயங்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை விட, மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மேம்பட்டதாக இருந்தாலும், மற்றொரு முக்கியமான குறைபாடு அந்த காரில் காணப்படுகிறது. மிகவும் நீண்ட காத்திருப்பு காலம்தான் அது. ஆம், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு ஏராளமான முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதன் காரணமாக இந்த காருக்கு நீண்ட காத்திருப்பு காலம் காணப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு தற்போதைய நிலையில் வேரியண்ட்களை பொறுத்து, கிட்டத்தட்ட 2 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. முன்பதிவு செய்து விட்டு, டெலிவரிக்காக இவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு பதிலாக, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய விஷயம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Important features mahindra xuv700 suv has over new toyota innova hycross hybrid
Story first published: Monday, December 5, 2022, 23:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X