Just In
- 2 hrs ago
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- 2 hrs ago
மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..
- 5 hrs ago
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- 6 hrs ago
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
Don't Miss!
- News
ஹைதராபாத்தில் பரவும் ‛க்யூ’ காய்ச்சல்.. கறிக்கடைக்கு போறீங்களா உஷார் மக்களே!என்ன செய்யும்? விபரம்
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் குழும நிறுவனங்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இந்தியாவில் தயாரிப்பது டப்பா கார் இல்லை என நிரூபித்த ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ்.. கிராஷ் டெஸ்டில் அசத்தல்!
இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் செடான் ரக கார் மிக மிக பாதுகாப்பானது என்ற சான்றை லத்தீன் என்சிஏபி இடம் இருந்து பெற்றிருக்கின்றது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் கூடுதல் முக்கிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா, மஹிந்திரா மட்டுமல்ல நம் நாட்டில் சில வெளிநாட்டு நிறுவனங்களும் வாகன உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இந்தியாவில் வாகன உற்பத்தியை செய்து வரும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஃபோக்ஸ்வேகனும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவிற்காக மட்டுமின்றி சில வெளிநாடுகளுக்காகவும் இங்கு வைத்தே கார்களை தயாரித்து வருகின்றது. அவ்வாறு, அது உள் மற்றும் வெளி நாடுகளுக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் விர்சுஸ்-ம் ஒன்றாகும்.

இந்த கார் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அந்த வகையில், இலத்தீன் சந்தைக்கும் நம் நாட்டில் இருந்தே விர்சுஸ் கார் மாடல் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த இந்திய தயாரிப்பு ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரே அதீத பாதுகாப்பு திறன் கொண்டது என்ற புகழைப் பெற்றிருக்கின்றது. சமீபத்தில் லத்தீன் என்சிஏபி 'மேட் இன் இந்தியா' விர்சுஸ் காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது.
காரின் பாதுகாப்பு திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் விர்சுஸ் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற்று அசத்தி உள்ளது. இதனால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக, இந்த அதிகபட்ச ரேட்டிங் ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமீப சில காலமாக இந்திய தயாரிப்பு கார்கள் நல்ல தர மதிப்பைப் பெற்ற வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையிலேயே ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இது சர்வதே சந்தையில் இந்தியாவிற்கு சிறந்த அங்கீகாரத்தைப் பெற்று தரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் பெரியவர்களின் பாதுகாப்பில் 92.35 சதவீத புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பில் 91.84 சதவீத புள்ளிகளையும் பெற்றிருப்பதாக லத்தீன் என்சிஏபி தெரிவித்துள்ளது. இது மிக சிறப்பான புள்ளிகளாகும். இந்த அதிக புள்ளிகளின் வாயிலாகவே விர்சுஸ் மிக மிக அதிக பாதுகாப்பானது என்பது உறுதியாகியுள்ளது.
அதாவது கடுமையான விபத்துகளின் போது காரில் பயணிக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பான சூழல் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதுமட்டுமில்லைங்க இந்தியாவில் தயாரிக்கப்படும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் அதிக உறுதித் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பதும் இந்த அதிக புள்ளிகளின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் அதிக உறுதித் தன்மைக் கொண்டதாக மட்டுமே தயாரிக்கப்படவில்லை. அந்த காரில் அதிகளவில் பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், அவசர காலத்தில் தானாக பிரேக் பிடிக்கும் சிஸ்டம் மற்றும் இஎஸ்சி போன்ற மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் இலத்தீனுக்கான விர்சுஸ் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை தாங்கியிருக்கின்ற காரணத்தினாலேயே மோதல் ஆய்வில் மிக சிறப்பான புள்ளிகளை விர்சுஸால் பெற முடிந்திருக்கின்றது. இந்த அம்சங்களே கடுமையான விபத்து ஏற்பட்டாலும் பயணிகளுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் ஓர் செடான் ரக காராகும். இந்தியாவில் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த செடான் காராக இது விற்பனையில் இருக்கின்றது. இந்த கார் ரூ. 11.22 லட்சம் தொடங்கி ரூ. 17.92 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இந்த கார் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மட்டுமே உருவாக்கப்பட்டவில்லை. ஏற்கனவே கூறியதைப் போல் அதிகம் பிரீமியம் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த காராகவும் காட்சியளிக்கின்றது.
அந்தவகையில் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரில் தொடுதிரை வசதிக் கொண்ட 10 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன்), வென்டிலேட் இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன்ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட எக்கசக்க சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், மும்முனை ஆங்கர் சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், மல்டி கொல்லிசன் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேசன் வார்னிங் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விர்சுஸ் காரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர் ஜனவரியில் அறிமுகமாவது உறுதி... இந்த தகவலுக்குதான் இந்தியாவே காத்து கெடந்துச்சு!
-
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?
-
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?