இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நாட்டிலேயே மிக அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராக கியா இவி6 வெகு விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா (Kia) நிறுவனம் வெகுவிரைவில் இவி6 எனும் எலெக்ட்ரிக் புதுமுக காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் மின்சார கார் மாடலாகும். இக்காருக்கான புக்கிங் பணிகள் வரும் 26ம் தேதியில் இருந்து தொடங்கப்பட இருக்கின்றன.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த நிலையிலேயே கியா இவி6 (Kia EV6) தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற மின்சார கார் மாடல்களைக் காட்டிலும் மிக அதிக ரேஞ்ஜ் தரும் மின்சார காராக விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி இன்னும் பல முக்கிய தகவல்கள் மின்சார கார் குறித்து தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா இவி6 மின்சார காரின் பிராச்சர் (Brochure) படங்களே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதன் வாயிலாகவே பல முக்கிய தகவல்கள் தற்போது தெரிய வந்திருக்கின்றன. அதாவது, கியா இவி6 என்ன மாதிரியான பேட்டரி பேக், மின் மோட்டார், சிறப்பம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பது பற்றிய விபரங்கள் வெளி வந்துள்ளன.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, கியா இவி6 எலெக்ட்ரிக் காரில் 77.4 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 528 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய ரேஞ்ஜை வழங்குமாம்.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இது தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு மின்சார காரும் வழங்காத மிக அதிகபட்ச ரேஞ்ஜ் திறன் ஆகும். இக்காரை 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக சார்ஜ் செய்யும்போது 18 நிமிடங்களிலேயே பத்து சதவீத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜை பெற்றுவிடும். இது சூப்பர் ஃபாஸ்ட் வேக சார்ஜ் திறன் ஆகும்.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Source: Team BHP

அதேநேரத்தில் 50 kW ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் போது 73 நிமிடங்களிலேயே 80 சதவீதம் வரை சார்ஜேற்றிக் கொள்ள முடியும். இதுவும் மிக சிறப்பான வேகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, பின் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் என்ற தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதில், பின் வீல் இயக்கம் தேர்வுடன் வரவிருக்கும் கியா இவி6 அதிகபட்சமாக 229 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வு 325 பிஎஸ் மற்றும் 605 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதுமாதிரியான மிக சிறப்பான பவர்ஃபுல்லாக இவி6 வரவிருப்பதையே பிராச்சர் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இக்காரின் உயர்நிலை தேர்வில் பன்முக சிறப்பு வசதிகள் இடம் பெற இருப்பதாகவும் பிராச்சர் தெரிவித்திருக்கின்றது. அந்தவகையில், 14 மெரிடியன் ஆடியோ ஸ்பீக்கர்கள், கார் பாடி நிறத்திலான ஃப்ளஷ் ரக ஆட்டோ டூர் ஹேண்டில்கள், உயர் ரக ஹெட்ஸ்-அப் திரை, மல்டி லிங்க் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுதவிர, அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் இவி6 விற்பனைக்கு வர உள்ளது. 8 ஏர் பேக்குகள், அடாஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், எலெக்ட்ரிக் சன் ரூஃப், 64 நிற ஆம்பியன்ட் லைட், இரட்டை 12 அங்குல திரை, 60 மேற்பட்ட கியா கார் இணைப்பு அம்சங்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற பல வகையான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் இவி6இல் வழங்கப்பட இருக்கின்றன.

இந்தியாவின் அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக வருகிறது கியா இவி6... எவ்ளோ ரேஞ்ஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

கியா நிறுவனம் இந்த பூஜ்ஜிய உமிழ்வு வசதிக் கொண்ட காரை சிபியூ வாயிலாகவே நாட்டில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆகையால், முதலில் இதன் 100 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் ஷோரூம்களில் தரிசனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
India spec kia ev6 e car brochure leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X