மோதல் சோதனையில் அனைவரையும் மிரள வைத்த 2023 ஹூண்டாய் க்ரெட்டா!! இவ்வளவு பாதுகாப்பானதா...

பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் கார்கள் அவற்றின் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது கடந்த சில வருடங்களாக பரவலாக பிரபலமாகி வருகிறது. என்சிஏபி (NCAP) எனப்படும் இந்த பாதுகாப்பு சோதனையில் கார்கள் பல்வேறு மோதல்களுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.

இதில் கிடைக்கும் முடிவுகளை அந்த காரின் விளம்பரத்திற்காகவும் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தி கொண்டுள்ளதை இதற்கு முன் பார்த்துள்ளோம். அதேநேரம் எதிர்மறையான சோதனை முடிவுகள் அந்த காருக்கு எதிராக அமைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்த மோதல் சோதனைகள் உலகளவிலும் நடத்தப்படுகிறது. இதற்கு க்ளோபல் என்சிஏபி (GNCAP) என பெயர். அதேநேரம் ஆசியன் என்சிஏபி என்ற பெயரில் ஆசிய அளவிலும் இந்த சோதனைகள் நடத்தப்படுவது உண்டு.

மோதல் சோதனையில் அனைவரையும் மிரள வைத்த 2023 ஹூண்டாய் க்ரெட்டா

இதில் ஆசியன் என்சிஏபி மோதல் சோதனையில் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் 2023 க்ரெட்டா எஸ்யூவி மற்றும் சமீபத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஸ்டார்கஸர் எம்பிவி கார்கள் உட்படுத்தப்பட்டன. இவை இரண்டும் இந்தோனிஷியா நாட்டு சந்தைக்காக இந்த 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவைகள் ஆகும். இதில் 2023 க்ரெட்டா எஸ்யூவி கார் முழு 5 நட்சத்திரங்களையும், ஸ்டார்கஸர் 4 நட்சத்திரங்களையும் பெற்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தை பெருமை அடைய வைத்துள்ளன.

இந்தோனிஷியாவிற்கான ஹூண்டாய் க்ரெட்டாவில் ட்யூவல் ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. இது போதாது என நினைப்பவர்கள் கூடுதலாகவும் ஏர்பேக்குகளை பெற முடியும். அதாவது இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி வேண்டியிருக்கும். மற்ற ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்களாக சீட்-பெல்ட் ப்ரீ-டென்ஷ்னர் மற்றும் லோடு லிமிட்டெர் உள்ளிட்டவற்றை 2023 க்ரெட்டாவில் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தோனிஷியா மட்டுமில்லாமல் இதே கார் தான் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியாட்நாமிலும் விற்பனையில் உள்ளது.

பெரியவர்கள் பாதுகாப்பில் இந்த இந்தோனிஷிய க்ரெட்டா கார் 32 புள்ளிகளுக்கு 27.78 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த சோதனையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் போன்றதான டம்மிகளுடன் கார் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டாக மோதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதேபோல் மோதலின் போது டம்மிகளின் தலை பகுதி எந்த அளவிற்கு சேதமடைகிறது என்பதும் ஆராயப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பை பொறுத்தவரையில் 2023 க்ரெட்டா கார் 51 புள்ளிகளுக்கு 39.67 புள்ளிகளை பெற்றுள்ளது.

மோதல் சோதனையில் அனைவரையும் மிரள வைத்த 2023 ஹூண்டாய் க்ரெட்டா

இந்த சோதனையில் குழந்தைகளை அமர்த்துவதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் இருக்கைகள் எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பதும், சாலையில் குழந்தைகளை எவ்வாறு கார் அடையாளம் காணுகிறது என்பதும் சோதனை செய்யப்பட்டன. இத்துடன் 2023 க்ரெட்டாவில் உள்ள பிரேக்குகள், சீட்பெல்ட் நினைவூட்டுவான், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அட்வான்ஸ்டு பாதுகாப்பு தொழிற்நுட்பங்களும் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனையின் முடிவில் க்ரெட்டாவில் பாதுகாப்பு அம்சங்களுக்கு 21 புள்ளிகளுக்கு 14.79 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டார்கஸரை பொறுத்தவரையில், இந்த ஹூண்டாய் எம்பிவி கார் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் சற்று குறைவே. ஆசியன் என்சிஏபி மோதல் சோதனையில் ஐந்திற்கு 4 நட்சத்திரங்களை பெற்றுள்ள ஸ்டார்கஸர் இந்தோனிஷியாவில் இருந்து புருனே, லாஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. க்ரெட்டா காரை போன்று ஸ்டார்கஸரிலும் சைடு & டாப்-சைடு ஏர்பேக்குகள் கூடுதல் தேர்வாகவே வழங்கப்படுகின்றன.

மோதல் சோதனையில் அனைவரையும் மிரள வைத்த 2023 ஹூண்டாய் க்ரெட்டா

ஆசியன் என்சிஏபி மோதல் சோதனையில் இந்த எம்பிவி கார் 32 புள்ளிகளுக்கு 25.97 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 51 புள்ளிகளுக்கு 36.92 புள்ளிகளை பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் தொழிற்நுட்பங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு 21 புள்ளிகளுக்கு 12.64 புள்ளிகளை ஏற்றுள்ளன. மேலும் ஸ்டார்கஸர் எம்பிவி கார் சாலையில் வரும் மோட்டார்சைக்கிள்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பை வழங்குகிறது என்பதும் சோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் 16 புள்ளிகளுக்கு 7 புள்ளிகளை இந்த கார் பெற்றுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Indonesian hyundai creta scores 5 star asean ncap tests
Story first published: Wednesday, December 7, 2022, 18:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X