ஆஹா இவ்ளோ பெரிய பிளான் போட்டு இருக்கா இந்த சீன நிறுவனம்!.. சஞ்சய் கோபாலகிருஷ்ணன் அளித்த பிரத்யேக பேட்டி!

சீனாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் 'பில்ட் யூர் டிரீம்ஸ்' (Build Your Dreams). பிஒய்டி (BYD) என்ற பெயரில் இது அறியப்படுகின்றது. மின்சார வாகன உற்பத்தியாளரான இந்த நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டு வரும் தனது வர்த்தக பணிகளை விரிவாக்கம் செய்யும் விதமாக, சமீபத்தில் அட்டோ 3 எனும் புதுமுக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் பிரீமியம் வசதிகள் நிறைந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகும்.

இதுவே நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பாகும். நீண்ட காலமாக இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வழங்கி வந்த நிலையில், அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதனை பிரீமியம் வசதிகள் கொண்ட காரை விரும்புவோரைக் கவரும் விதமாக பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்நிறுவனம் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டில் இருந்தே தனது செயல்பாடுகளை மேற்கொள்ள தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஒய்டி

நோக்கியா போன்ற முன்னணி செல்போன் நிறுவனங்களுக்கான உதிரிபாகங்களையே இது ஆரம்பத்தில் தயாரித்து வந்தது. சென்னையில் உள்ள ஆலையிலேயே இந்த பணிகளை நிறுவனம் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் மின்சார பேருந்து விற்பனையைத் தொடங்கும் முயற்சியில் பிஒய்டி களமிறங்கியது. இதன் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் கே9 எனும் மின்சார பேருந்தை இறக்குமதி செய்து, அதனை சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தியது. சோதனையோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து அதிகாரப்பூர்வமாக எலெக்ட்ரிக் பேருந்தை பிஒய்டி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதுவே நிறுவனம் இந்தியாவில் வாகன வர்த்தக பணிகளைத் தொடங்கி அறிமுகம் செய்த முதல் வாகனம் ஆகும். இதைத்தொடர்ந்தே கார்களையும் அது விற்பனைக்கு வழங்கும் பணியில் களமிறங்கியது. இதன் அடிப்படையில் இந்தியா கொண்டு வரப்பட்ட முதல் காரே இ6. இந்த எலெக்ட்ரிக் எம்பிவி காரை ஆரம்பத்தில் பி2பி பிரிவிற்கு மட்டுமே அது விற்பனைக்கு வழங்கியது. அதாவது, டாக்சி போன்ற பொது சேவைக்கு பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தது.

இந்த பிரிவில் இ6 எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து தனி நபர்களும் இந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம் என பிஒய்டி அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் ஷோரூம்களை அமைக்கும் பணியை பிஒய்டி கையில் எடுத்தது. இத்துடன், அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரையும் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த காரையே அண்மையில் நாங்கள் ரைடு ரிவியூ செய்து அதுகுறித்த தகவலை வெளியிட்டிருந்தோம்.

இதேபோல், பிஒய்டி நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான சஞ்ஜய் கோபாலகிருஷ்ணன் உடன் நேர்காணல் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த சந்திப்பின் வாயிலாக பல முக்கிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. குறிப்பாக, நிறுவனத்தின் எதிர்கால இந்திய பிளான் என்ன என்பது போன்ற முக்கிய விபரங்களே கிடைத்திருக்கின்றன. கோபால கிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, பிஒய்டி நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் 15 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்ய திட்டமிட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் காரே அதிகம் விற்பனையாகும் என சீன நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது. இதன் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த காரை இந்தியாவில் 1,500 பேர் புக் செய்துவிட்டனர். விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சூழலே நாட்டில் தென்படுகின்றது.

இ6 எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டாளர்களே அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை பெருமளவில் புக் செய்திருப்பதாக கோபாலா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், 600-க்கும் அதிகமான இ6 எலெக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவல்களுடன் சேர்த்து நிறுவனத்திற்கு சொந்தமான டச் பாயிண்டுகளில் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை பிஒய்டி உருவாக்கி வருவதையும் கோபால கிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். டச் பாயிண்டுகள் மட்டுமின்றி சர்வீஸ் மையங்கள் மற்றும் டீலர்ஷிப்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகளில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதுதவிர நாட்டின் சில முக்கிய பகுதிகளிலும் சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான பணிகளை கூட்டணியின் வாயிலாக பிஒய்டி முன்னெடுத்து வருகின்றது. இந்த பணிகளுடன் சேர்த்து நாட்டில் புதுமுக கார்களைக் களமிறக்குவதற்கான வேலையிலும் பிஒய்டி ஈடுபட்டு வருவாதக கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டிற்குள் மேலும் சில புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதுமட்டுமின்றி, நாட்டின் தேவையைப் பொருத்து வாகன உற்பத்தியை அதிகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இப்போதே மின்சார பயணிகள் வாகனத்திற்கான தேவை அதிகரித்து வருவதாகவும், எதிர்காலம் பொற்காலம் போல் இருக்கும் என்றும் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #பிஒய்டி #byd
English summary
Interview sanjay gopalakrishnan byd india svp
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X