விலையை கேட்டா பதறி ஓடிருவீங்க... ஜீப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய கிராண்ட் செரோகி கார்

ஜீப் இந்தியா நிறுவனம் கிராண்ட் செரோகி காரை இந்தியாவில் ரூ77.5 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தலைமயிடமாக கொண்ட ஜீப் நிறுவனம் இந்தியாவில் தங்கள் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கு இந்தியாவில் தனியாக ரசிகர்களே இருக்கின்றனர். இந்நிலையில் ஜீப் நிறுவனம் தனது கிராண்ட் செரோகி எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலையை கேட்டா பதறி ஓடிருவீங்க... ஜீப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய கிராண்ட் செரோகி கார்

ஜீப் நிறுவனம் இந்த கார்களுக்கான உதிரிப் பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. இந்த காருக்கான டெலிவரிகள் இந்த மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல்இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 268 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் ஜீப் நிறுவனத்தின் குவாட்ராட்ராக் ஆல் வீல் டிரைவிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 4 விதமான டிரைவ் மோட்கள் உள்ளன. ஆட்டோ, ஸ்போர்ட், மட்/ சாண்ட் மற்றும் ஸ்னோ என்ற டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஜீப் கிராண்ட் செரோகி கார் 4915 மிமீ நீளம், 1979 மிமீ அகலம் மற்றும் 1816 மிமீ உயரம் கொண்டது. 2964 மிமீ வீல் பேஸை கொண்டது. மேலும் மேலும் 215 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், மற்றும் 533 மீட்டர் நீரில் மூழ்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்டது.

விலையை கேட்டா பதறி ஓடிருவீங்க... ஜீப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய புதிய கிராண்ட் செரோகி கார்

இந்த கார் வெளிநாட்டில் விற்பனையாகி வருவதை விட இந்தியாவிற்கு வருவதில் சில வெளிப்புற தோன்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட் முன்பக்கம் உள்ள 7 சிலாட் கிரிலிற்கு தகுந்தார் போல மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில் ஹெட்லைட்டிலிருந்து டெயில் லைட்டை இணைக்கும் ஒரு கேரக்டர் லைனும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வீல் ஆர்ச் பெரிய சதுர வடிவில் வழங்கப்பட்டுள்ளது. வீல்களும் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின் பக்கத்தைப் பொருத்தவரை பெரிய எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரூஃப் ஸ்பாயிலர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஜீப் கிராண்ட் செரோகி காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 2 டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. டிரைவர் இன்ஃபோடெயின்மெண்ட், பயணிக்கான டிஸ்பிளே என வழங்கப்பட்டுள்ளது. இரண்டும் 10.1 இன்ச் அளவு டச் ஸ்கிரினை கொண்டது. இன்ஃபோயடெயின்மெண்ட் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யும் வசதியைக் கொண்டது. இந்த காரின் உட்புறம் பிளஷ் மற்றும் பிரிமியம் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

லெதர், உட் மற்றும் கிளாஸ் பிளாக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் ஹெச்விஏசி சிஸ்டத்திற்காக பட்டன் வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், வென்டிலேட்ட் சீட், பவர்டு டெயில் கேட் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் இந்த காரில் பாதுகாப்பு வசதிக்காக மல்டிபிள் ஏர்பேக், பிளைட் ஸ்பார்ட் மானிட்டரிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆக்டிவ் லேன் மேனேஜ்மெண்ட், லேன் டிப்பார்ச்சர் வார்னிங் உடன் ஏடிஏஎஸ் லெவல் 2, மற்றும் வெகிஹில் மாட்டரிங், அலெக்ஸா இன்டகேஷன், ரிமோட் வெஹிகில் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட 30 கனெக்டெட் கார் தொழிற்நுட்பங்கள் இதில் இருக்கிறது.

இந்த 2022 ஜீப் கிராண்டே கார் முழு சொகுசு மற்றும் விலை அதிகம் உள்ள காராக அறிமுகமாகியுள்ளது. இந்த கார் முன்னரே சொன்னபடி ரூ77.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. விலைபற்றி கவலையில்லை ஒரு நல்ல சொகுசு எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என நினைத்தால் இந்த கிராண்ட் செரோகி கார் நல்ல சாய்ஸாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep launches grand Cherokee car in India
Story first published: Friday, November 18, 2022, 16:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X