போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

புதிய கார் பக்கம் வாடிக்கையாளர்கள் சாய தொடங்கியிருப்பதால், டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஜீப் மெரிடியன் (Jeep Meridian). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) உள்ளிட்ட கார்களுடன் ஜீப் மெரிடியன் கார் போட்டியிட்டு கொண்டுள்ளது. ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 29.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்டின் விலை 36.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் நீளம் 4,769 மிமீ ஆகவும், அகலம் 1,859 மிமீ ஆகவும், உயரம் 1682 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,794 மிமீ ஆகவும் உள்ளது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

ஜீப் நிறுவனத்தின் மற்றொரு முன்னணி எஸ்யூவி காரான காம்பஸ் (Jeep Compass) உடன், ஜீப் மெரிடியன் கார் பிளாட்பார்ம்மை பகிர்ந்து கொண்டுள்ளது. அதாவது ஜீப் காம்பஸ் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

ஜீப் மெரிடியன் காரில் இடம்பெற்றிருப்பதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த சூழலில், ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கை தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

இதன்படி ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 500க்கும் மேற்பட்ட மெரிடியன் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. துல்லியமாக சொல்வதென்றால், கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 507 மெரிடியன் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த எஸ்யூவி கார், தனது போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலை வழங்கி வருவது நிரூபணமாகிறது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ஜீப் மெரிடியன் காரை போலவே ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் 607 காம்பஸ் கார்களையும் ஜீப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த 2 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 1,114 ஆகும்.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்த இரண்டு கார்களுமே சற்று விலை உயர்ந்த பிரீமியம் மாடல்கள் என்னும் நிலையில், இது சிறப்பான விற்பனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 19.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 30.84 லட்ச ரூபாயாக உள்ளது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கிடையே ஜீப் நிறுவனம் மெரிடியன் காரின் புதிய வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வெர்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்த புதிய வெர்ஷனின் வருகைக்கு பின், இந்திய சந்தையில் ஜீப் மெரிடியன் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட்டில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மிகவும் பிரபலமான மாடலாக திகழ்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த எஸ்யூவி கார்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒன்று.

போட்டி சூடுபிடிக்குது... புதிய கார் பக்கம் சாய தொடங்கிய வாடிக்கையாளர்கள்... நடுக்கத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர்

அப்படிப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காருக்கே, ஜீப் மெரிடியன் காரின் மூலமாக கடுமையான போட்டி உருவாகியுள்ளது. எனவே ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் புதிய மாடலின் இந்திய அறிமுகத்திற்கு பின்னர், இந்த செக்மெண்ட்டில் போட்டி இன்னும் கடுமையாவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep meridian september 2022 sales report
Story first published: Wednesday, October 12, 2022, 13:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X