டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஜீப் மெரிடியன் (Jeep Meridian). இது மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காருக்கான முன்பதிவுகளை, ஜீப் இந்தியா நிறுவனம் நடப்பு மே மாத தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கியது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

இந்தியாவில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காருக்கு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இந்த சூழலில், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 29.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

லிமிடெட் மற்றும் லிமிடெட் (O) என மொத்தம் 2 வேரியண்ட்களில், ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் கிடைக்கும். ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் நீளம் 4,769 மிமீ ஆகும். இது டொயோட்டா ஃபார்ச்சூனரை விட 26 மிமீ குறைவாகும். ஆனால் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் வீல்பேஸ் நீளம் 2,782 மிமீ ஆகும். இது டொயோட்டா ஃபார்ச்சூனரை விட 37 மிமீ அதிகம் ஆகும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

ஏனெனில் டொயோட்டா ஃபார்ச்சூனரின் வீல்பேஸ் நீளம் 2,745 மிமீ மட்டுமே. ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்பிளிட் எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, மல்டி-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

ஆனால் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 168 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

தற்போதைய நிலையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வுதான் என்றாலும் கூட, இந்த எஸ்யூவி காரில் விரைவில் பெட்ரோல் இன்ஜின் தேர்வை ஜீப் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4) ஆகியவை ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

அத்துடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) எஸ்யூவி காருக்கும், ஜீப் மெரிடியன் விற்பனையில் மிக கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை ஜீப் இந்தியா நிறுவனம் இன்னும் தொடங்கவில்லை. வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

இந்திய சந்தையில் ஜீப் நிறுவனம் வலுவாக அடித்தளம் அமைக்க உதவிய கார்களில் ஜீப் காம்பஸ் முக்கியமானது. தற்போது அதன் 3 வரிசை இருக்கைகளை கொண்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மெரிடியன் எஸ்யூவி கார், ஜீப் நிறுவனத்தை இந்திய சந்தையில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!

ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவது கூடுதல் சிறப்பு. மஹாராஷ்டிரா மாநிலம் ரஞ்சன்கான் பகுதியில் அமைந்துள்ள ஆலையில்தான் இந்த மூன்று வரிசை எஸ்யூவி கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவி காரின் டெலிவரி தொடங்குவதற்காக முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் தற்போது ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep meridian suv delivery details
Story first published: Sunday, May 22, 2022, 8:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X