Just In
- 16 min ago
டாடா வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கதிகலங்கி போன வாடிக்கையாளர்கள்! என்ன இப்படி பண்ணீட்டாங்க!
- 3 hrs ago
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- 4 hrs ago
மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..
- 7 hrs ago
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
Don't Miss!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
லான்ச் ஆக இன்னும் ஒரு நாள்தான் இருக்கு... இந்தியால நிறைய பேர் இந்த காருக்காகதான் வெயிட் பண்ணீட்டு இருக்காங்க!
இந்தியாவில் நிறைய பேர் ஆவலுடன் காத்து கொண்டுள்ள காரின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஜீப் மெரிடியன் (Jeep Meridian). இது மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட எஸ்யூவி (Three-Row SUV) ரக கார் ஆகும். ஜீப் மெரிடியன் காரின் அறிமுக தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் வரும் மே 19ம் தேதி (May 19) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் நாளை மறுநாள் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. ஜீப் மெரிடியன் காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டன. விலை மட்டும்தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தினத்தில், ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் விலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.

ஜீப் மெரிடியன் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. தற்போது முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜீப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களில், மெரிடியன் எஸ்யூவி காரை முன்பதிவு செய்யலாம். அல்லது ஜீப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரை விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும். மெரிடியன் எஸ்யூவி கார்களை முழு வீச்சில் உற்பத்தி செய்யும் பணிகளையும் ஜீப் இந்தியா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.

ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரஞ்சன்கான் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. ஜீப் மெரிடியன் காரானது, ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ரெகுலரான வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் மூன்றாவது வரிசையில் கூடுதல் இருக்கைகள் வழங்கப்படுவதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜீப் காம்பஸ் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஜீப் காம்பஸ் காரை காட்டிலும், ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் 41 மிமீ அகலமானது மற்றும் 48 மிமீ உயரமானது.

அத்துடன் ஜீப் காம்பஸ் காருடன் ஒப்பிடும்போது, ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் வீல்பேஸ் 146 மிமீ நீளமானது. உட்புறத்தை பொறுத்தவரை ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் வயர்லெஸ் சார்ஜிங், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்க்கிங் கேமரா என பல்வேறு வசதிகளையும் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் டர்போ-டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதே இன்ஜின்தான் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். ஜீப் மெரிடியன் விலை உயர்ந்த பிரீமியம் கார் ஆகும்.

25 லட்ச ரூபாய் முதல் 35 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளை மறுதினம்தான் ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் எஸ்யூவி காரின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
-
ஓர் இன்ஸ்டாகிராம் பிரபலம் இப்படியா நடந்து கொள்வது? ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு ரூ.17,000 அபராதம் - போலீஸார் அதிரடி
-
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
-
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?