இந்த காருக்கு நல்லதா ஒரு பெயர் வைத்தால் ரூ32 லட்சம் பரிசு! ஜீப் அதிரடி அறிவிப்பு

ஜீப் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு ஒரு பெயர் வைக்கச் சொல்லி ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறுபவர்களுக்கு ரூ32.65 லட்சம் பரிசாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களையும், ரசிகர்களையும் அவ்வப்போது என்கேஜிகாக வைக்க வேண்டும் என்ற விரும்பும் இதற்காக அவ்வப்போது இவர்களுக்கு மத்தியில் சில வித விதமான பேட்டிகள், ஈவென்ட்களை நடத்துவார்கள். இப்படியாக ஜீப் நிறுவனம் தனது ரசிகர்களுக்காக ஒரு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த காருக்கு நல்லதா ஒரு பெயர் வைத்தால் ரூ32 லட்சம் பரிசு! ஜீப் அதிரடி அறிவிப்பு

அதாவது ஜீப் நிறுவனம் சர்வதேச அளவில் ஜீப் வாகோநீர் எஸ் என்ற ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த காரை அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தாலும் இதுவரை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. இந்த கார் மக்களுக்காக விற்பனைக்கு வரும்போது இதே பெயரில் இல்லாமல் வேறு ஒரு பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என அந்நிறுவனம் கருதியது. அதற்காகப் பெயரை மாற்ற வேண்டும் என்றால் நல்ல பெயர் சிக்கவில்லை.

இதையடுத்து இதையே ஜீப் நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக அறிவிக்க முடிவு செய்தது. அதன்படி அந்நிறுவனம் தனது ஆன்லைன் வெப்சைட்டில் இது குறித்து போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி யார் வேண்டுமானாலும் அந்த காருக்கு ஒரு பெயரை வைக்கலாம். பெயரை வைக்கவிரும்புபவர்கள் ஆன்லைனிற்கு சென்று, namethenewwagoneer.com என்ற வெப்சைட்டில் அவர்கள் விரும்பும் பெயரை அவர்கள் வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் சென்று பதிவிடலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இப்படியாகப் பெயர் வைப்பவர்கள் அந்த பெயரில் மொத்தம் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 50க்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அறிவித்துள்ளது. இந்த பெயரில் ஒரு பெயர் காருக்காக தேர்வு செய்யப்படும் நிலையில் அந்த நபருக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ33.65 லட்சம் பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல வெற்றி பெரும் நபருக்கு ஜாக்சன் ஹோல் மவுண்டெயின் ரெசாட்டிற்கு இலவச ட்ரிப் செல்லும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்த பேக்கேஜில் விமான கட்டணம், தங்கும் இட வசதி, உள்ளூர் வாகன வசதி, கைடு வசதி மற்றும் ஷாப்பிங் செய்வதற்காக 1000 அமெரிக்க டாலர் மதிப்பிலான கிஃப்ட் கார்டு ஆகியவை வழங்கப்படவுள்ளன.

இந்த ஜீப் வாகோநீர் எஸ் காரை பொருத்தவரை ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகும். இந்த காரை தொடர்ந்து பல எலெக்ட்ரிக் காரையும் அந்நிறுவனம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த காரை ஜீப் நிறுவனம் ரீகான் மற்றும் ஜீப் வாராங்கிலர் ஆகிய காரை ஒத்து உருவாக்கியுள்ளது. இந்த கார் வரும்2024ம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்த காருக்கான புக்கிங் 2023ம்ஆண்டு தான் துவங்கவுள்ளது.

இந்த கார் புதிய பெயர் மற்றும் மற்ற தொழிற்நுட்ப அம்ச தகவல்களுடன் வரும் ஜனவரி மாதம் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள சிஇஎஸ் கண்காட்சியில் இது அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த கார் STLA கட்டுமான தொழிற்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 600 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினை உடையது. இது 0-96 கி.மீ வேகத்தை வெறும் 3.5 நொடியில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. இந்த கார் முழு சார்ஜில் 650 கி.மீ பயணிக்கும் ரேஞ்ச் கொண்டது. இந்த தகவல் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep opens naming contest for its all electric wagoneer s Car
Story first published: Thursday, November 24, 2022, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X