இந்திய நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் அமெரிக்க கம்பெனி! இந்த கார் போதும் எல்லாரும் சொக்கி போயிருவாங்க!

மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜீப் நிறுவனம் விரைவில் கார்களை மார்கெட்டில் களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் ஜீப் இந்நிறுவனம் தற்போது காம்பஸ், மெரிடியன், விராங்கிளர் மற்றும் கிராண்ட் செரோகி ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனை செ்து வருகிறது. இந்த கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.

இந்திய நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் அமெரிக்க கம்பெனி! இந்த கார் போதும் எல்லாரும் சொக்கி போயிருவாங்க!

கடந்த வாரம் தான் இந்நிறுவனம் இந்தியாவில் வைத்து அசெம்பிள் செய்யப்படும் கிராண்ட் செரோகி காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ77.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ரஞ்சன்கோகன் பகுதியில் வைத்து இந்த கார் அசெம்பிள் செய்யப்படுகிறது. வெளி நாட்டிலிருந்த உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்யும் சிகேடி முறையில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

இதற்கு முன்னதாக கட்த மே மாதம் இந்நிறுவனம் ஜீப் மெரிடியன் என்ற வட அமெரிக்காவில் விற்பனையாகும் 5ம் தலைமுறை காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முழு சைஸ் 7 சீட்டர் எஸ்யூவி காரான இது ரூ29.9 லட்சம் முதல் ரூ36.95 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதற்கும் முன்னதாக 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜீப் நிறுவனம் விராங்கிளர் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனத்தின் கார்களை மக்கள் விரும்பி வாங்குவதால் அந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. கடந்த காலண்டர் ஆண்டில் மட்டும் மொத்தம் 12,136 கார்களை ஜீப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது கடந்தாண்டைவிட 130 சதவீதம்
அதிகமாகும்.

இந்த வளர்ச்சிக்கான மொமெண்டத்தை தக்க வைக்க ஜீப் நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை அறிவித்து விற்பனைகளைக் கூட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜீப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நிபுன் மகாஜன் கூறும் போது : "நாங்கள் அடுத்த ஆண்டும் இதே வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். இதற்காக புதிய தயாரிப்புகளைச் சேர்த்து வருகிறோம். வளர்ச்சியால் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். இதனால் விற்பனை மற்றும் தொழிலையும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறினார்.

இதை மிஸ் பண்ணீடாதீங்க : டயர் பஞ்சர் ஆகிடுச்சா கவலைய விடுங்க... கடைய எல்லாம் தேடி அலைய வேணாம்... நீங்களே பஞ்சர் போடலாம்!இதை மிஸ் பண்ணீடாதீங்க : டயர் பஞ்சர் ஆகிடுச்சா கவலைய விடுங்க... கடைய எல்லாம் தேடி அலைய வேணாம்... நீங்களே பஞ்சர் போடலாம்!

ஜீப் நிறுவனம் இதுவரை என்ன தயாரிப்புகளை வெளியிடப்போகிறது என அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் வெளியாகியுள்ள தகவலின்படி ஜீப் நிறுவனம் அவெஞ்சர் என்ற மின் மிட் சைஸ் எஸ்யூவி காரை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார் சிட்ரோன் சி3 கார் உரவான அதே CMP பிளாட்ஃபார்மில் தான் இதுவும் இயங்குகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் டெரிவேட்டிவில் முழு சார்ஜில் 400 கி.மீ செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கார் குறித்த உங்கள் கருத்து என்ன? இந்த கார் மார்கெட்டிற்கு வந்தால் ஜெயிக்குமா? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸில் சொல்லுங்கள்

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep plans to launch mid size SUV rival to creta
Story first published: Tuesday, November 22, 2022, 11:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X