லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் ஜீப்-பின் முதல் இகார்! ஆடி, பிஎம்டபிள்யூக்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்

லேட்டாக விற்பனைக்குக் கொண்டு வந்தாலும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை மிக சூப்பரான ஒன்றாக ஜீப் (Jeep) நிறுவனம் கொண்டு வர இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

புகழ்பெற்ற வாகன கண்காட்சியான '2022 பாரிஸ் மோட்டோர் ஷோ' தற்போது ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இங்கு ஏராளமான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதுமுக வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜீப் (Jeep)-பும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதன் புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

நிறுவனம் தனது முதன்முதல் தயாரிப்பான எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்த வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருப்பது கவனிக்கத்தகுந்தது. உலகின் முன்னணி சொகுசு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல தங்களின் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை ஏற்கனவே விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்ட நிலையில், இப்போதே ஜீப் அதன் ஃபர்ஸ்ட் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பை வெளியீடு செய்திருக்கின்றது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

அவென்ஜர் (Jeep® Avenger) எனும் மின்சார காரையே நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இந்த மின்சார காரையே விரைவில் உலக மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காரை மிகவும் லேட்டாக ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், மிகவும் லேட்டஸ்டான தயாரிப்பாக அது கொண்டு வந்திருக்கின்றது. எனவே, பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காரின் வருகை அமைந்துள்ளது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

அதிக தேவையை விரும்பும் வாகன ஓட்டிகளைக் கவரும் விதமாக எக்கசக்க தொழில்நுட்பங்களும், செயல் திறன்மிக்கதாகவும் இக்கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய தலைமுறை 400 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் சிஸ்டமும், புதிய பேட்டரி பேக்கும் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

இக்காரை பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் வைத்து வெறும் மூன்று நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 30 கிமீ தூரம் பயணிக்கும் அளவிற்கு சார்ஜை ஏற்றிக் கொள்ளும் வகையிலும் ஜீப் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. அவசர வேலையாக அருகில் செல்ல வேண்டும் என்கிற சூழலில் இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் பெரும் உதவியாக இருக்கும்.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

அதேவேலையில், 20 சதவீதம் - 80 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 24 நிமிடங்களே போதும் என்கின்றது ஜீப். அந்தளவு அதிக வேகத்தில் ஃபாஸ்டாக சார்ஜை ஏற்றிக் கொள்ளும் காராக அவென்ஜர் உருவாக்கப்பட்டுள்ளது. காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 400 வோல்ட் மின் மோட்டார் 156 குதிரை திறனையும், 260 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

இந்த மோட்டாருக்கு மின்சார சக்தியை வழங்கிட 54 kWh பேட்டரி பேக்கே அவென்ஜரில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பேட்டரியை ஸ்டெல்லண்டிஸ் நிறுவனமே உருவாக்குவது குறிப்பிடத்தகுந்தது. இது வழக்கமானபேட்டரிகளைக் காட்டிலும் அதிகம் செயல்திறன் மிக்கது. ஒட்டுமொத்தமாக, 102 என்எம்டி 811 ரக லித்தியம் அயன் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

இவற்றை முழுமையாக சார்ஜ் செய்வதன் வாயிலாக 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேலையில், இதன் ரேஞ்ஜ் 550 கிமீ வரையில் உயர்த்தி பெற்றுக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி பேக்கின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்த ஜீப் நிறுவனம் 2 மில்லயன் கிலோமீட்டர் தூரம் சோதனையோட்டம் செய்து ஆராய்ந்திருக்கின்றது. இந்த ஆய்வில் மிக சிறப்பாக அப்பேட்டரி செயல்பட்டிருக்கின்றது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

அவென்ஜர் எலெக்ட்ரிக் கார் முன் வீல் இயக்கம் கொண்ட வாகனமாகும். இத்துடன், செலக்ட் டெர்ரயின் மற்றும் ஹில் டெசன்ட் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்கள் மற்றும் முன் வீல் இயக்கத்துடன் விற்பனைக்கு வரும் முதல் ஜீப் தயாரிப்பு இதுவே ஆகும். செலக்ட் டெர்ரயின் என்பது டிரைவங் மோடிற்கான ஓர் அமைப்பாகும்.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

இதன் வாயிலாக ஆறு விதமான ரைடிங் மோட்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். நார்மல், ஈகோ, ஸ்போர்ட், ஸ்நோ, மட், சேண்ட் ஆகியவையே அந்த ரைடிங் மோட்கள் ஆகும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை ஜீப் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் காரில் வாரி வழங்கியிருக்கின்றது. குறிப்பாக பாதுகாப்பு அம்சங்களையும் எக்கசக்க கொடுத்திருக்கின்றது.

 லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜீப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்... ஆடி, பிஎம்டபிள்யூ-க்கு இப்பவே நடுங்க ஆரம்பிச்சுருக்கும்!

இவற்றுடன், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், 10.25 அங்குல டிஜிட்டல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பன்முக வண்ணங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், பவர் அட்ஜஸ்ட் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட லெதர் இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் தனது அவென்ஜர் எலெக்ட்ரிக் காரில் ஜீப் வழங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Jeep unveiled avenger electric suv in paris motor show
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X