விற்பனையில் பட்டைய கிளப்பும் விர்டுஸ்.. 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இத்தன யூனிட்டுகளை டெலிவரி பண்ணீட்டாங்களா!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காருக்கு இந்தியாவில் மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கே தற்போது வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், ஒரு காலத்தில் ஹேட்ச்பேக் ரக கார்களை முன்னிறுத்தி வந்த வாகன உற்பத்தியாளர்கள் தற்போது, எஸ்யூவி ரக கார்களைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதாவது, புதுமுக எஸ்யூவி ரக கார்களை அதிகளவில் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றன.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

அதேநேரத்தில், இப்போதும் சந்தையில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ரக கார்களை விரும்புபவர்கள் சிலர் இருக்கின்றனர். இவர்களுக்கான விருப்ப தேர்வுகளை வழங்கும் விதமாக சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இந்தியர்களின் செடான் (Sedan) வாகன தேவையைப் பூர்த்திச் செய்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen)-ம் ஒன்று.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

இந்நிறுவனம் இந்தியா செடான் கார் பிரியர்களைக் கவரும் பொருட்டு விர்டுஸ் (Virtus) எனும் புதுமுக காரை கடந்த ஜூன் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் தற்போது செடான் ரக கார் பிரிவில் அதிகம் விற்பனையாகும் வாகன மாடலாக மாறியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜூன் தொடங்கி கடந்த ஆகஸ்டு வரையில் சுமார் 5000 யூனிட்டு விர்டுஸ் செடான் ரக கார்கள் விற்பனையாகியிருக்கின்றன.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

இந்த விற்பனை எண்ணிக்கை கௌரவமான எண்ணிக்கை ஆகும். இந்தியர்கள் மத்தியில் தற்போதும் செடான் ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த விற்பனை விபரம் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதையும் இது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

ஏற்கனவே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சில சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. கேரள மாநிலத்தில் ஒரே நாள் ஒரே நேரத்தில் 150 யூனிட்டுகள் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்ட நிகழ்வே அதுவாகும். இந்த நிகழ்வு தற்போது ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

வாகன உலக வரலாற்றிலேயே மிக முக்கியமான நிகழ்வாக இந்த சம்பவம் பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக விற்பனைக்கு வந்த இரண்டே மாதங்களில் 5 ஆயிரம் யூனிட்டுகள் விர்டுஸ் கார்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 9ம் தேதி அன்றே இக்கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

விர்டுஸ் காருக்கு எதிர்பார்ப்பு பெருமளவில் நிலவி வந்த நிலையிலேயே அந்த தினத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விர்டுஸ் காம்பேக்ட் சைஸ் செடான் காராகும். இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இரு விதமான ட்ரிம்களில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் ஆகியவையே அந்த ட்ரிம்கள் ஆகும்.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

டைனமிக் லைன் ட்ரிம்மை மூன்று விதமான தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் டாப் லைன் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். ஆனால், பெர்ஃபார்மன்ஸ் லைன் ட்ரிம்மை ஜிடி லைன் என்ற ஒற்றை தேர்வில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அறிமுகமாக விர்டுஸ் காருக்கு ரூ. 11.22 லட்சம் - ரூ. 17.92 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

இந்த காரில் சிறப்பு அம்சங்களாக, 10 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடுதிரை, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வென்டிலேட் இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன்ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், மும்முனை ஆங்கர் சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், மல்டி கொல்லிசன் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேசன் வார்னிங் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனையில் பட்டைய கிளப்பும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்... 2 மாசம்தான் ஆகுது அதுக்குள்ள இவ்ளோ கார்கள டெலிவரி பண்ணீட்டாங்களா!

எஞ்ஜின் விஷயத்தில் இந்த கார் இரு விதமான தோர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகும். இதில், முதலில் பார்த்த மோட்டார் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். அடுத்த மோட்டார் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Most Read Articles
English summary
Just over two months volkswagen delivered 5000 units of virtus
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X