Just In
- 50 min ago
அறிமுகமானது ஜாகுவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் லிமிடெட் எடிசன்!! காசு இருந்தாலும் வாங்குறது ரொம்ப கஷ்டம்!
- 57 min ago
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- 1 hr ago
ஸ்கூல் பசங்களையே மிஞ்சிட்டாங்க... காப்பியடித்து உருவாக்கப்பட்ட 50 சிசி ஸ்கூட்டர்... சீன நிறுவனத்தின் அடாவடி!
- 3 hrs ago
முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
Don't Miss!
- News
2024-ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும்! எல்.முருகன் ஒரு சர்கஸ் புலி! திருமா கிண்டல்!
- Lifestyle
இந்த பழக்கங்கள் உங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பது தெரியுமா?
- Finance
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
- Sports
இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?
- Movies
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்ட 150 கார்கள்... எந்த நிறுவனத்தோட கார் தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இப்படி ஒரு வரவேற்பா என கூறுமளவிற்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் கார் மாடல் ஒரே நாளில் 150 யூனிட்டுகள் டெலிவரிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமாகியது. ஜூன் 9ம் தேதி அன்றே இக்கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்த ஒரு சில தினங்களே ஆகின்ற நிலையில் இந்த காருக்கு மிக சூப்பரான வரவேற்பு நாட்டு மக்கள் கிடைக்கத் தொடங்கியிருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

இந்த கார் மாடலின் 150 யூனிட்டுகளே ஒரே நாளில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்தவொரு நிறுவனமும் செய்திராத சாதனையாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. கேரள மாநிலம், கொச்சினில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனையாளர் இவிஎம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே இந்த தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கின்றது.

இந்த நிகழ்வில் கார்களுக்கான உரிமையாளர்கள் மட்டுமின்றி இந்தியன் புக் ஆஃப் தி ரெகார்ட்ஸை சேர்ந்த உறுப்பினர்களும் பங்கேற்றனர். மிக சிறப்பான சாதனை இதுவென்பதால் இந்த நிகழ்ச்சியில் அவர்களும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து, விற்பனையகத்திற்கு ஒரே நாளில் ஒரே கார் மாடலில் 150 யூனிட்டுகளை டெலிவரி கொடுத்த விற்பனையாளர் என்ற விருதை அவர்கள் வழங்கினர்.

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று ஒரே கார் மாடல் டெலிவரி கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், ஒரே ஒரு டீலர் வாயிலாக, ஒற்றை கார் மாடல் பெரும் எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்படுவது முதல் முறையாகும். எனவேதான் இந்த கேரளாவில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அதன் 2.0 திட்டத்தின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் இரண்டாவது தயாரிப்பு இதுவாகும். முன்னதாக டைகுன் எனும் காம்பேக்ட் எஸ்யூவி காரை அது நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த கார் மாடலுக்கும் மிக சிறப்பான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதைப்போலவே தற்பது விர்டுஸ் காம்பேக்ட் சைஸ் செடான் காருக்கும் நல்ல டிமாண்ட் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரை எம்க்யூபி ஏ0 இன் (MQB A0 IN) பிளாட்பாரத்தை தழுவியே உருவாக்கியிருக்கின்றது. இந்த தளம் இந்தியாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

அறிமுகமாக இக்காருக்கு ரூ. 11.22 லட்சம் - ரூ. 17.92 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஒரு வேலை தவறு நடந்திருப்பின் அதை நீக்கிவிடலாம். டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் இரு விதமான ட்ரிம்களில் விர்டுஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டைனமிக் லைன் ட்ரிம்மை மூன்று விதமான தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும். கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் டாப் லைன் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். ஆனால், பெர்ஃபார்மன்ஸ் லைன் ட்ரிம்மை ஜிடி லைன் என்ற ஒற்றை தேர்வில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

ஸ்கோடா நிறுவனம் விர்டுஸ் செடான் காரில் ஸ்லேவியா கார் மாடலில் வழங்கியிருக்கும் அம்சங்கள் பெரும்பாலானவற்றை வழங்கியிருக்கின்றது. 10 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வென்டிலேட் இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன்ரூஃப், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், மும்முனை ஆங்கர் சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், மல்டி கொல்லிசன் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேசன் வார்னிங் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Image Courtesy: EVM Volkswagen
எஞ்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ, 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஆகிய இரு விதமான தேர்வுகளில் மட்டுமே விர்டுஸ் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ள பிற செடான் கார் மாடல்களான மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகியவற்றிற்கு போட்டியாகவே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூப்பரான காரையே ஒற்றை நாளில் 150 யூனிட்டுகளை இவிஎம் ஃபோக்ஸ்வேகன் டீலர் டெலிவரி கொடுத்திருக்கின்றார்.
-
ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம்!
-
இந்த வீடியோவை நிச்சயம் நீங்க பாத்திருப்பீங்க! ஸ்கூட்டர் தானாக விழுந்ததற்கு பின்னால் இருக்கும் மர்மம் இதுதான்!
-
டுகாட்டியின் ஸ்க்ராம்ப்ளர் 800 வரிசையில் மற்றுமொரு புதிய பைக்!! ரூ.11 லட்சத்தை தாண்டும் விலை!