கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

கியா கேரன்ஸ் (Kia Carens) எம்பிவி என்ன வேரியண்டில், என்னென்ன அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). கியா நிறுவனம் ஏற்கனவே ஓர் எம்பிவி ரக காரை நம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில் இரண்டாவது எம்பிவி கார் மாடலாக கேரன்ஸ்-ஐயும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, கியா.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

மூன்று வரிசை இருக்கை வசதி உடன் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக வாகனமாக இருந்தாலும், இதன் தோற்றம் பார்ப்பதற்கு எஸ்யூவி காரைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆகையால், இதன் வருகை இன்னோவா, எர்டிகா போன்ற எம்பிவி கார்களுக்கு மட்டுமின்றி டொயோட்டா ஃபார்ச்சூனர், டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

இதன் வருகை தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி ஜனவரி மாதத்திலேயே விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இக்காரின் பக்கம் வாகன பிரியர்களைக் கவரும் வகையில் அதன் சிறப்பு வசதிகள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளன. எஞ்ஜின், வேரியண்ட் மற்றும் சிறப்பம்சங்கள் விபரமே வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

ட்ரிம் விபரம்:

கியா கேரன்ஸ் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. பிரீமியம், ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் பிளஸ், லக்சூரி மற்றும் லக்சூரி ப்ளஸ் ஆகிய ட்ரிம்களிலேயே விற்பனைக்கு வர இருக்கிறது. இத்துடன், ஆறு மற்றும் 7 இருக்கை தேர்வுகளும் இதில் வழங்கப்பட இருக்கின்றது. கியா கேரன்ஸ் கார் உலகளவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் கேரன்ஸ் வாகனமே உலகளவில் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. ஆகையால், கேரன்ஸ் காருக்கு சர்வதேச தர தோற்றம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கிரீடம் போன்ற எல்இடி மின் விளக்கு, ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல்கள், 16 இன்த் அளவிலான இரட்டை டோன் அலாய் வீல்கள், குரோம் பூச்சுக் கொண்ட பின் பக்க பம்பர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

டைமன்ஷன்:

கியா கேரன்ஸ் 4,540 மிமீ நீளத்திலும், 1,800 மிமீ அகலத்திலும், 1,708 மிமீ உயரத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் வீல் 2,780 மிமீட்டராகக் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து, எட்டு விதமான நிற தேர்வுகளில் கியா கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இம்பீரியல் ப்ளூ, மாஸ் பிரவுன், ஸ்பார்க்ளிங் சில்வர், இன்டென்ஸ் ரெட், கிளாசியர் ஒயிட் பியர்ல், கிளியர் வெள்ளை, கிராவிட்டி கிரே மற்றும் ஆரோரா பிளாக் பியர்ல் ஆகிய நிற தேர்வுகளே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

சிறப்பம்சங்கள்:

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் சிறப்பு வசதிகளுக்கு குறைவு இருக்காது என்பது மிக தெளிவாக தெரிகின்றது. இந்த காரில் பல்வேறு நவீன ரக தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. 10.25 இன்ச் அளவுள்ள எச்டி தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 66 கார் இணைப்பு வசதிகள், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், 64 நிறங்கள் அடங்கிய ஆம்பிசியண்ட் மின் விளக்கு, ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் உள்ளிட்ட அம்சங்கள் கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட இருக்கின்றது.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

இதுமட்டுமின்றி, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பன்முக டிரைவிங் மோட்கள், சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர், ஒயர்லெஸ் சார்ஜர், கோப்பைகளை குளிர்ச்சியாக வைக்கும் கோப்பை தாங்கிகள், ஸ்லைடிங் ரக இருக்கை டிரே மற்றும் பல அம்சங்களும் கேரன்ஸில் இடம் பெற இருக்கின்றன.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

மேலும், 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, விஎஸ்எம், எச்ஏசி, டிபிசி, ஏபிஎஸ், பிஏஎஸ், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் கருவி மற்றும் பின்பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

எஞ்ஜின் விபரம்:

மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகள் கியா கேரன்ஸ் எம்பிவி காரில் வழங்கப்பட இருக்கின்றது. இரு பெட்ரோல் எஞ்ஜின் தேர்வுகளும், ஒற்றை டீசல் எஞ்ஜின் தேர்வும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி 1.5 லிட்டர் பெட்ரோல், ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஜி 1.4 டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும்.

கியா கேரன்ஸ் எம்பிவி காரில் இவ்ளோ வசதிகள் இருக்கா! கார்குறித்த முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிருக்கு!

மேலே பார்த்த அம்சங்கள் மற்றும் வசதிகள் தேர்விலேயே கியா கேரன்ஸ் எம்பிவி நாட்டில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இக்காருக்கான புக்கிங் பணிகள் வரும் பதினான்காம் தேதியில் இருந்து நாட்டில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து மிக விரைவில் விற்பனைக்கான அறிமுகத்தை இக்கார் பெற உள்ளது.

Most Read Articles

English summary
Kia carens variants specifications and engine options details revealed
Story first published: Tuesday, January 4, 2022, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X