கியா கார்களை குறைவான விலையில் வாங்க வேண்டுமா? கியா சிபிஓ ஷோரூம் திறப்பு.. ரொம்ப ரொம்ப கம்மி விலையில் வாங்கலாம்

கியா நிறுவனம் இந்தியாவில் புதிய கார்கள் விற்பனையைத் தொடர்ந்து செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையிலும் களமிறங்கி இருக்கின்றது. இதற்காக புதிதாக சிபிஓ எனும் ஷோரூம்களை திறக்கும் பணியை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கால் தடம் பதித்த சில ஆண்டுகளிலேயே இந்தியர்களின் மனம் கவர்ந்த நிறுவனமாக மாறியிருக்கின்றது, கியா. ஹூண்டாய் மோட்டார்ஸின் தாய் நிறுவனமான இது, தனியாக கியா பிராண்டின்கீழ் தனது கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி சொனெட், செல்டோஸ், கேரன்ஸ், கார்னிவல், இவி 6 (எலெக்ட்ரிக் கார்) ஆகிய கார் மாடல்களை கியா நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

கியா

இதுதவிர, சிறப்பு பதிப்புகள் சிலவற்றையும் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சொனெட் ஏஇ, செல்டோஸ் எக்ஸ் - லைன் மற்றும் சொனெட் எக்ஸ்-லைன் ஆகிய சிறப்பு பதிப்புகளையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை வழக்கமான மாடல்களிடம் இருந்து பலமடங்கு மாறுபட்டுக் காணப்படும். குறிப்பாக, நிறம், அலங்கார அம்சம் ஆகியவற்றிலேயே இந்த சிறப்பு பதிப்புகள் மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே கியா நிறுவனம் புதிய தொழில் பிரிவு ஒன்றை இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செகண்ட் கார் விற்பனை தொழில் பிரிவையே நிறுவனம் புதிதாக தொடங்கியிருக்கின்றது. இந்திய சந்தையில் புதிய கார்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வந்தநிலையில், தற்போது செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனைச் செய்யும் பிரிவிலும் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. கியா செர்டிஃபைட் ப்ரீ-ஓவ்னட் (Kia CPO) எனும் ஷோரூம்கள் வாயிலாகவே நிறுவனம் தனது செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கியா

இந்த மையத்தில் பழைய காரை விற்றல், வாங்குதல் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் காரை எக்ஸ்சேஞ்ஜ் செய்து, தங்களுக்கு பிடித்த வேறொரு காரை ஓட்டிச் செல்லவும் முடியும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கு வாங்கப்படும் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கும் கியா நிறுவனம் கடன் திட்டங்களை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்தகைய சூப்பரான புதிய தொழிலையே கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

இதற்காக நிறுவனம் 15க்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகளை 14க்கும் மேற்பட்ட நகரங்களில் திறந்து வைத்திருக்கின்றது. டெல்லி என்சிஆர், பெங்களூரு, அஹமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், ஜெய்பூர், கொச்சின், புபனேஸ்வர், கோழிகோடு, அம்ரிஸ்தர், நாசிக், பரோடா, கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய நகரங்களிலேயே கியா நிறுவனம் சிபிஓ மையங்களை திறந்து வைத்துள்ளது. நிறுவனம் இந்த புதிய தொழிலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஆம், இந்தியாவின் பிற நகரங்களிலும் கியா சிபிஓ மையங்களை திறக்க இருக்கின்றது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 15 சிபிஓ விற்பனையகங்களுடன் புதிதாக மேலும் 15 சிபிஓ மையங்களை இணைக்க கியா திட்டமிட்டுள்ளது. கியாவின் சிபிஓ மையங்களில் விற்பனைக்கு வரும் அனைத்து கியா கார்களும் தரம் பார்க்கப்பட்டு, அதன் பின்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்படும். மேலும், ஐந்தாண்டுகளுக்கும் குறைவான வயது மற்றும் 1 லட்சம் கிமீட்டர் வரை மட்டுமே பயணித்த கார்கள் மட்டுமே இங்கு விற்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், தேய்ந்து போன கார்கள் இந்த மையங்களில் விற்பனைக்கு வராது என நம்பப்படுகின்றது.

கியா நிறுவனம் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டிலேயே கால் தடம் பதித்தது. இதற்குள்ளாக இந்தியர்களின் பிரியமான நிறுவனங்களில் ஒன்றாக கியா மாறிவிட்டது. இந்த நிலையிலேயே செகண்ட் ஹேண்ட் கார் பிரிவிலும் இந்தியர்களின் மனதைக் கவரும் விதமாக புதிய சிபிஓ மையங்களை திறந்திருக்கின்றது. இங்கு விற்கப்படும் வாகனங்களுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 40 ஆயிரம் கிமீ வாரண்டி வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர, 4 இலவச மெயின்டெனன்ஸ் திட்டத்தையும் கியா வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையில் களமிறங்கும் முதல் கார் நிறுவனம் கியா அல்ல. ஏற்கனவே இதுபோன்று முன்னணி கார் உற்பத்தியாளர்கள் யூஸ்டு கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனம் ட்ரூ வேல்யூ எனும் பெயரிலும், மஹிந்திரா நிறுவனம் ஃபர்ஸ்ட் சாய்ஸ் என்ற பெயரிலும், ஹூண்டாய் எச்-ப்ராமிஸ் என்ற பெயரிலும் பயன்படுத்திய கார் விற்பனை பிரிவில் ஈடுபட்டு வருகின்றது. இந்த முன்னணி நிறுவனங்கள் மட்டுமில்லைங்க, இந்தியாவில் ஸ்பின்னி, கார்ஸ் 24 மற்றும் ஓஎல்எக்ஸ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களும் பயன்படுத்திய கார்கள் விற்பனை பிரிவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Kia cpo pre owned car showroom
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X