200 பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த காஸ்ட்லி காரை டெலிவரி செய்த கியா... இந்த காருக்கு இவ்வளவு கிராக்கியா?

கியா நிறுவனம் 200 இவி 6 கார்களை டெலிவரி செய்துள்ளது. இந்தாண்டு திட்டமிட்டதை விட இரு மடங்கு அதிகமான கார்களை டெலிவரி செய்துள்ளது.

கியா நிறுவனம் இந்தியா இந்தாண்டு மத்தியில் தான் தனது இவி 6 என்ற தனது ஃபிளாக்ஷிப் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான டெலிவரி எல்லாம் கடந்த செப்டம்பர் மாதம் தான் துவங்கியது. இந்த கார் அறிமுகமாகும் முன்பே இந்த காரை 355 பேர் பேர் புக் செய்திருந்தனர்.

200 பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த காஸ்ட்லி காரை டெலிவரி செய்த கியா... இந்த காருக்கு இவ்வளவு கிராக்கியா?

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த காருக்கான டெலிவரி துவங்கப்பட்ட நிலையில் இதுவரை இந்நிறுவனம் 200 கார்களை டெலிவரி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த காருக்காக காத்திருப்பில் இருக்கும் கார்களையும் 2022ம் ஆண்டிற்குள்ளேயே டெலிவரி செய்து விட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கியா இவி6 காரை பொருத்தவரை கியாவின் மிகச் சொகுசு வசதிகள் நிறைந்த காராகவும், அதிகமாக தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த காராகவும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த இவி6 கார் E-GMP என்ற ஃபிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட காராகும். இந்த கார் முழு சார்ஜில் 528 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டது.

இந்த கார் அதிக விலை கொண்ட கார் என்பதால் குறைவான நபர்கள் தான் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ரூ59.95 லட்சம் என்ற விலையில் இந்த கார்விற்பனையாகிறது. இந்த காரில் ரியர் வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ் என இரண்டு டிரைவ் ஆப்ஷன்களை கொண்டது.

இந்த காரில் 77.4 கி.லோ வாட்ஹவர் பேட்டரியை கொண்டது. இந்த காரில் முக்கிய அம்சமாக 12.3 இன்ச் டிஜிட்டில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், மெரிடியன் சோர்ஸ்டு சவுண்ட் சிஸ்டம், 3 டிரைவ் மோட்கள் அடாப்டிக் க்ரூஸ் கண்ட்ரோல் என ஏராளமான ஆப்ஷன்கள் இந்த காரில் உள்ளது.

இந்த கார் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் கம்பிளீட் பில்டு யூனிட்டாக விற்பனையாகிறது. இந்த கார் 4681 மிமீ நீளம், 1778 மிமீ அலகம் 1544 மிமீ உயரம் கொண்டது. 2900 மிமீ வீல் பேஸ் கொண்டது. இந்த காரின் பூட் பகுதியில் மட்டும் 520 லிட்டர் இட வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது. .

இந்த காரை 100 கார்களையாவது இந்தாண்டிற்குள் டெலிவரி செய்து விட வேண்டும் என கியா நிறுவனம் ஆரம்பத்தில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போதே அதை விட இரு மடங்காக 200 கார்களை டெலிவரி செய்துவிட்டது. இந்த காருக்கு மக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இதே போல இந்தியாவிலே ஒரு எலெக்ட்ரிக் காரை தயாரிக்கும் திட்டத்தையும் கியா நிறுவனம் செய்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia delivers 200 ev6 cars in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X