ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

புதிய கியா இவி6 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வருகிற ஜூன் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்தும் கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

2019இல் செல்டோஸ் எஸ்யூவியின் மூலம் நுழைந்த கியா இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் காரை களமிறக்க தயாராகி வருகிறது. இவி6 என்கிற பெயரில் கொண்டுவரப்படும் இந்த முதல் கியா எலக்ட்ரிக் கார் வருகிற ஜூன் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

சர்வதேச சந்தையில் கியா இவி6 58kWh மற்றும் 77.4kWh என இரு விதமான பேட்டரி தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் 77.4kWh பேட்டரி தொகுப்பில் இரு விதமான நிலைகளில் இயக்க ஆற்றல் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவி6 மாடலின் விலை குறைவான வேரியண்ட் ஆனது பின் சக்கரங்களின் மூலம் இயங்கக்கூடியதாகவும், அதிகப்பட்சமாக 225 பிஎச்பி & 350 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

அதுவே, டாப் வேரியண்ட் ஆனது அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை கொண்டதாகவும், 345 பிஎச்பி & 605 என்எம் டார்க் என அதிகப்பட்ச இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாகவும் இருக்கும். புதிய இவி6 மாடல் சிவப்பு, வெள்ளை மற்றும் சில்வர் உள்பட மொத்தம் 5 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. முன்பக்கத்தில் இந்த எலக்ட்ரிக் கார் எல்இடி ஹெட்லேம்ப்கள், நேர்த்தியான வடிவிலான க்ரில் மற்றும் அகலமான ஏர்டேம்-ஐ பெற்றுவரவுள்ளது.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

அத்துடன் 19-இன்ச் அலாய் சக்கரங்கள், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் பின்பக்கத்தில் காரின் முழு அகலத்திற்கும் விளக்கு பார், இரட்டை-நிற பின்பக்க பம்பர் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவற்றையும் வெளிப்பக்கத்தில் கியா இவி6 ஏற்றுவரவுள்ளது. உட்புற டேஸ்போர்டில் 12.3-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பிற்கு ஒன்று, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று என 2 திரைகளை கொண்டிருக்கும்.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

இவற்றுடன் 2-ஸ்போக் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், மீளூருவாக்க செயல்பாட்டிற்காக பெடல் பரிமாற்றிகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், சூடான காற்றை வழங்கக்கூடிய முன் இருக்கைகள், ட்ரைவ் மோட்கள், இரட்டை-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், புறஊதா கதிர்-எதிர்ப்பு கண்ணாடி மற்றும் தன்னிச்சையான ஹோல்ட் செயல்பாட்டுடன் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் முதலியவற்றையும் புதிய இவி6 எலக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கிறோம்.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

இவை மட்டுமின்றி, கூடுதல் பயணிகள் பாதுகாப்பிற்காக அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களையும் இந்த இவி பெற்றுவரலாம். இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுவந்த இவி6-க்கான முன்பதிவுகள் வருகிற மே 26ஆம் தேதி முதல் ஏற்கப்பட உள்ளதாக ஏற்கனவே கியா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

இவி6-ஐ சிபியூ முறையில், அதாவது முற்றிலுமாக வெளிநாட்டு தயாரித்து, இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய கியா திட்டமிட்டுள்ளது. அதிலிலும், முதற்கட்டமாக வெறும் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவிற்காக ஒதுக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் முழுவதும் தயாரான இவி6 கார்கள் ஆந்திராவில் உள்ள கியாவின் தொழிற்சாலையை வந்தடைய ஏற்கனவே தயாராகிவிட்டன.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

மற்றப்படி இந்தியாவில் இவி6 எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தற்போதைக்கு தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், பின்-சக்கர-ட்ரைவ் அமைப்புடன் 77.4kWh பேட்டரி கொண்ட இதன் வேரியண்ட் அதிகப்பட்சமாக சிங்கிள்-முழு சார்ஜில் 528கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக இருக்கலாம்.

ஜூன் 2இல் அறிமுகமாகும் இவி6 எலக்ட்ரிக் கார்!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கியா!

இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய அட்வான்ஸான 800 வோல்ட் சார்ஜர் வழங்கப்பட உள்ளது. இது இவி6-இன் பேட்டரியை 10%-இல் 80% சார்ஜ் நிரப்ப வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ளுமாம். இந்த ரேஞ்ச் & சார்ஜர் உள்ளிட்டவை அனைத்தும் ஒரு யூகமாகவே கூறப்பட்டுள்ளதே தவிர்த்து அதிகாரப்பூர்வ விபரங்கள் காரின் ஜூன் 2ஆம் தேதி அறிமுகத்தின்போதே தெரியவரும்.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia ev6 electric crossover will launch in india on june 2nd 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X