எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

பிரபல நிறுவனம் ஒன்று தனது எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் மிகவும் குறுகிய காலத்திலேயே பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) உருவெடுத்துள்ளது. செல்டோஸ் (Seltos), சொனெட் (Sonet), கார்னிவல் (Carnival), கேரன்ஸ் (Carens) மற்றும் இவி6 (EV6) என இந்திய சந்தையில் தற்போது ஒட்டுமொத்தமாக 5 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

இதில், கியா இவி6, எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதுதான் கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம்தான் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

கடந்த அக்டோபர் மாதம் கியா நிறுவனம் இந்தியாவில் 152 இவி6 எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்து அசத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்திய சந்தைக்கு வெறும் 100 இவி6 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே கியா நிறுவனம் ஒதுக்கியிருந்தது. ஆனால் தற்போது அதைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

இ-ஜிஎம்பி (E-GMP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் எலெக்ட்ரிக்-குளோபல் மாடுலர் பிளாட்பார்ம் (Electric-Global Modular Platform) அடிப்படையில்தான், இவி6 எலெக்ட்ரிக் காரை கியா கட்டமைத்துள்ளது. சிங்கிள் மோட்டார் மற்றும் ட்யூயல் மோட்டார் வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

கியா இவி6 எலெக்ட்ரிக் காரில், 77.4 kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 528 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பேட்டரி அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

வெறும் 4.5 நிமிடங்களில், 100 கிலோ மீட்டர் பயணிக்க தேவையான அளவிற்கு இது பேட்டரியை சார்ஜ் செய்து விடும். அதே நேரத்தில் 350 kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 18 நிமிடங்களில், பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். மறுபக்கம் 50 kW ஃபாஸ்ட் சார்ஜர் இதனை செய்வதற்கு 73 நிமிடங்களை எடுத்து கொள்ளும்.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

இந்திய சந்தைக்கு ஒதுக்கப்பட்டதை விட, அதிக எண்ணிக்கையில் டெலிவரி செய்யப்பட்டிருப்பதன் மூலம், கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது? என்பதை புரிந்து கொள்ள முடியும். இவி6 எலெக்ட்ரிக் காருக்கு உற்சாகமான பிரம்மாண்டமான கிடைத்துள்ள காரணத்தால், வரும் காலங்களில் கியா நிறுவனத்திடம் இருந்து நிறைய எலெக்ட்ரிக் கார்களை நாம் எதிர்பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலம் என்ற சூழல் உருவாகி விட்ட நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாணியையே கியா இந்தியா நிறுவனம் கையில் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தனது ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் ஆகிய அனைத்தும் ஐசி இன்ஜின் கார்களுடைய எலெக்ட்ரிக் வெர்ஷன்கள்தான்.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

இதே பாணியில் கியா நிறுவனம் தனது செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். இந்த 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனைக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்திய வாடிக்கையாளர்கள் பலரிடமும் காணப்படுகிறது.

எலெக்ட்ரிக் கார்களை பல்க்காக டெலிவரி செய்த பிரபல நிறுவனம்... இவ்ளோ ஆர்டர்கள் குவியும்னு அவங்களே எதிர்பாக்கல!

ஆனால் இந்த எதிர்பார்ப்பை கியா நிறுவனம் பூர்த்தி செய்யுமா? என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்து மட்டுமே பார்க்க முடியும். ஒருவேளை இது நடக்கும்பட்சத்தில், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கியா நிறுவனம் மிக முக்கியமான போட்டியாளராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Kia india delivered 152 ev6 electric cars in october 2022
Story first published: Wednesday, November 2, 2022, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X