இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

கியா இந்தியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக 'மை கியா' (My Kia) என்கிற மொபைல் செயலியை (mobile application)அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை பற்றியும், இதன் நன்மைகளை பற்றியும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

தங்களது கார் வாங்குபவர்களின் உரிமையாளர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதில் கியா நிறுவனத்திற்கு நிகர் அது மட்டுமே என்று சொல்லலாம். இதன் தொடர்ச்சியாக தற்போது கியா நிறுவனம் மை கியா மொபைல் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் -ஐ ஏற்கக்கூடியதாக விளங்கும் இந்த செயலி கியாவின் விற்பனை மற்றும் சேவை திட்டங்களை மேலும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சலுகைகள் & தள்ளுபடிகள் போன்ற வெகுமதிகளை பெறலாம் மற்றும் இருக்கும் இடத்தில் இருந்தே அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

மை கியா செயலியை கியா கார் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு, தங்களது வாடிக்கையாளர் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால் காருக்கான சேவை நினைவூட்டல்கள், அருகில் உள்ள டீலர்ஷிப் மையங்களின் இருப்பிடங்கள், அறிவுரைகள் மற்றும் கியா நிறுவனம் தொடர்பான செய்திகளை பெறலாம். அத்துடன் செயலியில் இருக்கும் டிஜி வாலட் (Digi wallet)-ஐயும் பயன்படுத்த முடியும்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

புதிய கியா காரை வாங்க நினைப்போர் அவற்றை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கவுள்ளதை இந்த செயலியில் அட்டவணைப்படுத்தி கொள்ளலாம். இதற்கேற்ப சந்தையில் புதியதாக களமிறங்கும் கியா கார்கள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் இதில் வெளியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக காரை வாங்குவது குறித்த ஆலோசனைகளை நேரடியாக டீலர்ஷிப் மையத்தில் இருந்து இந்த செயலியின் வாயிலாக, காணோளியாக பெறலாம்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

புதிய கியா காருக்கான மாதத்தவணை திட்டங்கள் மற்றும் தனது முன்பதிவின் நிலை எந்த அளவிற்கு உள்ளன என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும், கியாவின் சேவை குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர் இந்த செயலி மூலம் கருத்துகளை அனுப்பலாம். மை கியா மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்பவர்களில் பலர் முதலாவதாக சலுகைகள் & தள்ளுபடிகள் பக்கத்திற்கு தான் செல்வீர்கள் என நினைக்கிறேன்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

காருக்கு தேவையான ஆக்ஸஸரீகள் & அலங்கரிப்பு பாகங்களை இந்த செயலியின் வாயிலாக தள்ளுபடி உடன் வாங்கலாம். காருக்கு தேவையான பொருட்கள் மட்டுமில்லாமல், உணவு, மளிகை சாமான்கள், ஜவுளி பொருட்கள், காஸ்மெட்டிக்ஸ் மற்றும் நகை கூட டாப் பிராண்ட்களில் இருந்து இந்த செயலியின் மூலம் ஆன்லைனில் வாங்கலாமாம். அதுமட்டுமின்றி, டிராவல் & ஓட்டல்களையும் இருந்த இடத்தில் இருந்தே மை கியா செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆஃப்லைன் ஷாப்பிங்கிற்கும் இந்த செயலியில் சலுகைகளை பெற முடியும்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

இதுகுறித்து கியா இந்தியா நிறுவனத்தின் துணை தலைவரும் மற்றும் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் முதன்மை அதிகாரியுமான ஹர்தீப் சிங் ப்ரார், "எங்களின் தனித்துவமான தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களின் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து நாங்கள் இன்றுவரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளோம். மைகியா போன்ற முன்முயற்சிகள் மூலம் விற்பனை, சேவை மற்றும் அதற்கு அப்பால் டிஜிட்டல் கண்டுப்பிடிப்புகளை வழங்க விரும்புகிறோம்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கார் உரிமை பயணம் முழுவதும் வித்தியாசமான மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும். வாடிக்கையாளர்களின் ஈடுப்பாடு மற்றும் திருப்தியில் தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் மைகியா மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

இருக்கும் இடத்தில் இருந்தே காரை புக் செய்யலாம்... கியாவின் புதிய ‘மை கியா’ மொபைல் செயலி!! இந்தியாவில் அறிமுகம்

மைகியா மொபைல் செயலிக்கு தற்போதுவரையில் மட்டுமே சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பதிவுகள் கிடைத்துள்ளதாக கியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உள்ள தற்போதைய சூழலில் வணிகத்தை கையாள கியா மட்டுமின்றி பெரும்பான்மையான கார் பிராண்ட்கள் டிஜிட்டல் உலகிற்குள் ஏற்கனவே நுழைந்துவிட்டன. குறிப்பாக இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்கள் இத்தகைய மொபைல் செயலியை நம்பியே வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia Launches MY Kia App.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X